Puttalam Municipal Council

Puttalam Municipal Council පුත්තලම මහා නගර සභාව | புத்தளம் மாநகர சபை

Official Page

ஒரு காலத்தில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாடம் பயன்படுத்திய எமது பாரம்பரிய “நெல்லி முடுக்கு”பாதை…பல...
29/08/2026

ஒரு காலத்தில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாடம் பயன்படுத்திய எமது பாரம்பரிய “நெல்லி முடுக்கு”பாதை…

பல தசாப்தங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் மறக்கப்பட்டிருந்த இந்தப் பாதை, இன்று மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ❤️

முதலாம் வட்டாரம் (CEC) தலைவர் சகோதரர் சர்ராஜ் லாபிர் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய, மாநகர முதல்வரின் தலைமையில் புத்தளம் மாநகர சபையினால் இப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு பாதைக்கு இன்று மீண்டும் உயிர் கிடைத்துள்ளது.

பழைய நினைவுகளோடு…
புதிய பயணம் ஆரம்பமாகிறது. ❤️

කාලයක් පුරා කුඩා දරුවන්, කාන්තාවන් සහ වැඩිහිටියන් ඇතුළු ප්‍රදේශවාසීන් දෛනිකව භාවිත කළ අපගේ පැරණි “නෙල්ලි මුඩුක්කු” මාර්ගය…

දශක ගණනාවක් තිස්සේ භාවිතයට නොගත හැකි තත්ත්වයකට පත්ව අමතකව ගොස් තිබූ මෙම මාර්ගය, අද නැවතත් ජනතාවගේ භාවිතයට එක්වී ඇත. ❤️

පළමු වාට්ටුවේ (CEC) සභාපති සහෝදර සරාජ් ලාෆිර් මහතාගේ යෝජනාවකට අනුව, නගරාධිපතිවරයාගේ නායකත්වය යටතේ පුත්තලම මහ නගර සභාව විසින් මෙම මාර්ගය සම්පූර්ණයෙන්ම ප්‍රතිසංස්කරණය කර ඇත.

වසර ගණනාවක් අමතකව තිබූ මාර්ගයකට අද නැවතත් ජීවය ලැබී ඇත.

පැරණි මතකයන් සමඟ…
අලුත් ගමනක් අදින් ආරම්භ වේ. ❤️

புத்தளம் மாநகர சபையின் வருடாந்த சுற்றுலாபுத்தளம் மாநகர சபையின் உள் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் (Internal Customers) ...
28/08/2026

புத்தளம் மாநகர சபையின் வருடாந்த சுற்றுலா

புத்தளம் மாநகர சபையின் உள் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் (Internal Customers) அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் புத்துணர்ச்சியையும் ஓய்வையும் வழங்கும் நோக்கில் வருடாந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

வருடம் முழுவதும் நகர மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து கடினமாக உழைக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, பணிச்சுமையிலிருந்து சிறிது ஓய்வளித்து புத்துணர்ச்சி பெறச் செய்வதுடன், தொடர்ந்தும் உற்சாகமாகவும் திறமையாகவும் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக இச்சுற்றுலா அமைந்தது.

அதேவேளை, மேல்நிலை அதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை (better understanding) ஏற்படுத்தி, இடைவெளிகளைக் குறைத்து, நல்லுறவுப் பாலத்தை உருவாக்குவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

இதன் மூலம் மாநகர சபையின் உள் ஒற்றுமை, குழுப் பண்பு (Team work) மற்றும் பணித் திறனை மேலும் வலுப்படுத்தி (efficiency) , மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்க முடியும்.

පුත්තලම මහ නගර සභාවේ වාර්ෂික චාරිකාව

පුත්තලම මහ නගර සභාවේ අභ්‍යන්තර පාරිභෝගිකයන් ලෙස සැලකෙන නිලධාරීන් සහ සේවකයින්ට විවේකයක් හා නව ප්‍රබෝධයක් ලබාදීමේ අරමුණින් වාර්ෂික චාරිකාව සංවිධානය කරන ලදී.

වසර පුරා නගරයේ ජනතාව වෙනුවෙන් අඛණ්ඩව සේවය කරමින් කැපවීමෙන් වැඩ කරන නිලධාරීන් සහ සේවකයින්ට දෛනික රාජකාරි පීඩනයෙන් මඳ විවේකයක් ලබාගෙන, නැවතත් උද්යෝගයෙන් සහ කාර්යක්ෂමව සේවය කිරීමට අවශ්‍ය මානසික ප්‍රබෝධය ලබාදීම මෙහි ප්‍රධාන අරමුණකි.

එමෙන්ම, ඉහළ මට්ටමේ නිලධාරීන් සහ අනෙකුත් නිලධාරීන් හා සේවකයින් අතර අන්‍යෝන්‍ය අවබෝධය වර්ධනය කරමින්, පවතින දුරස්ථභාවය අවම කර, හොඳ සබඳතා ගොඩනැගීමට ද මෙම චාරිකාව වැදගත් අවස්ථාවක් විය.

මෙවැනි වැඩසටහන් මගින් මහ නගර සභාවේ අභ්‍යන්තර එකමුතුව, කණ්ඩායම් හැඟීම සහ සේවා කාර්යක්ෂමතාව තවදුරටත් ශක්තිමත් කර, ජනතාවට වඩාත් හොඳ සේවාවක් ලබාදීමට හැකිවේ.

Annual Trip of the Puttalam Municipal Council

The annual trip of the Puttalam Municipal Council was organized to provide rest and refreshment for its officers and employees, who are considered the internal customers of the organization.

Throughout the year, the officers and employees work continuously and with dedication to provide essential services to the people of Puttalam. This annual trip gives them an opportunity to take a short break from their regular workload, refresh themselves, and return to work with renewed energy and motivation.

The programme also helps to create better understanding between senior officers, other officials, and employees by reducing gaps and building stronger relationships among all levels of staff.

Such activities strengthen internal unity, teamwork, and efficiency within the Municipal Council, helping the staff to continue providing better and more effective services to the public.

22/08/2026
21/08/2026
20/08/2026

புத்தளம் மாநகர முதல்வர் Eng. Rinsad Ahamed Mayor of Puttalam மொங்கோலியா நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

புத்தளம் நகரை பிரதிநிதித்துவப்படுத்தி, UNCCD ஏற்பாடு செய்துள்ள மேயர்கள் மாநாட்டில் (Mayor’s Forum) அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, புத்தளம் மாநகர முதல்வரும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர முதல்வரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விசேடமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

පුත්තලම මහ නගර සභාවේ නගරාධිපති Eng. Rinsad Ahamed මහතා නිල සංචාරයක් සඳහා මොංගෝලියාව බලා පිටත්ව යයි.

පුත්තලම නගරය නියෝජනය කරමින්, UNCCD සංවිධානය කරනු ලබන නගරාධිපතිවරුන්ගේ සමුළුවට (Mayor’s Forum) ඔහු සහභාගී වීමට නියමිතය.

ශ්‍රී ලංකාව නියෝජනය කරමින්, පුත්තලම මහ නගර සභාවේ නගරාධිපතිවරයා සහ ශ්‍රී ජයවර්ධනපුර කෝට්ටේ මහ නගර සභාවේ නගරාධිපතිවරයා මෙම සමුළුවට සහභාගී වීම සඳහා විශේෂයෙන් ආරාධනා කර ඇත.

18/08/2026

16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தில் புத்தளம் நகரமும் தெரிவு

நாட்டின் 16 நகரங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தில் புத்தளம் நகரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, புத்தளத்தின் நகர அபிவிருத்தி வரலாற்றில் முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.

இத்திட்டம் தொடர்பான விசேட பாராளுமன்ற கலந்துரையாடல், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் மாநகர முதல்வர் கலந்து கொண்டனர்.

புத்தளம் நகரம் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டதில், புத்தளம் மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகள், அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் எதிர்கால நகர அபிவிருத்தித் திட்டங்கள் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கை முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், புத்தளம் நகரம் அடுத்த 10 ஆண்டுகளுக்கான விசேட மற்றும் நீண்டகால அபிவிருத்திப் பயணத்தில் இணைக்கப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மற்றும் நாத்தாண்டி நகரங்கள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ජාතික නගර සංවර්ධන වැඩසටහනට පුත්තලම නගරයත් තේරේ

රටේ නගර 16ක් ඉදිරි වසර 10 තුළ සැලසුම්ගත අයුරින් සංවර්ධනය කිරීම සඳහා ක්‍රියාත්මක කරන ජාතික වැඩසටහනට පුත්තලම නගරයද තෝරාගෙන තිබීම, පුත්තලම නගර සංවර්ධන ඉතිහාසයේ වැදගත් නව පරිච්ඡේදයක් ලෙස සැලකේ.

මෙම වැඩසටහන සම්බන්ධ විශේෂ පාර්ලිමේන්තු සාකච්ඡාවක් නාගරික සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍යවරයාගේ ප්‍රධානත්වයෙන් පැවැති අතර, එයට පුත්තලම දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සහ පුත්තලම මහ නගර සභාවේ නගරාධිපතිවරයාද සහභාගී වූහ.

පුත්තලම නගරය මෙම වැඩසටහන සඳහා තෝරා ගැනීමේදී, පුත්තලම මහ නගර සභාවේ වර්තමාන ක්‍රියාකාරකම්, සංවර්ධන වැඩපිළිවෙළ සහ අනාගත නගර සංවර්ධන සැලසුම් පිළිබඳ ඇතිවී තිබෙන විශ්වාසය වැදගත් සාධකයක් වී ඇති බව සඳහන් වීමද විශේෂත්වයකි.

මෙම ජාතික වැඩසටහන යටතේ පුත්තලම නගරය ඉදිරි වසර 10ක විශේෂ හා දිගුකාලීන සංවර්ධන ගමනකට එක්වීමට නියමිතය.

පුත්තලම දිස්ත්‍රික්කයෙන් පුත්තලම සහ නාත්තණ්ඩිය නගර මෙම වැඩසටහන සඳහා තෝරාගෙන ඇත.

16/08/2026

புத்தளம் உள்ளக விளையாட்டு அரங்கிற்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் அமைப்புகளான PHD / OL 99 ஆகியோரின் அனுசரணையில், உள்ளக விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 4 Table Tennis Court Barriers புத்தளம் மாநகர சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

குறித்த விளையாட்டு உபகரணங்களை புத்தளம் உள்ளக விளையாட்டு அரங்கில் வைத்து புத்தளம் மாநகர முதல்வர் உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்.

நகரின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இந்தப் பெறுமதியான பங்களிப்பை வழங்கிய PHD / OL 99 அமைப்பினருக்கு புத்தளம் மாநகர சபையின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

පුත්තලම ගෘහස්ථ ක්‍රීඩාංගණයට ක්‍රීඩා උපකරණ පරිත්‍යාගයක්

පුත්තලම සහිරා විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය සංවිධාන වන PHD / OL 99 හි අනුග්‍රහයෙන්, ගෘහස්ථ ක්‍රීඩා පහසුකම් වැඩිදියුණු කිරීමේ අරමුණින් Table Tennis Court Barriers 4ක් පුත්තලම මහ නගර සභාව වෙත පරිත්‍යාග කරන ලදී.

මෙම ක්‍රීඩා උපකරණ පුත්තලම ගෘහස්ථ ක්‍රීඩාංගණයේදී පුත්තලම නගරාධිපතිතුමා විසින් නිල වශයෙන් භාරගන්නා ලදී.

නගරයේ තරුණ තරුණියන් සහ ක්‍රීඩක ක්‍රීඩිකාවන් සඳහා ක්‍රීඩා පහසුකම් වැඩිදියුණු කිරීමට දායක වන මෙම වටිනා පරිත්‍යාගය සිදු කළ PHD / OL 99 සංවිධානයට පුත්තලම මහ නගර සභාවේ හෘදයාංගම ස්තුතිය පිරිනමනු ලැබේ.

13/08/2026

ஒரு வருட தொடர் முயற்சியின் பயனாக — புத்தளம் மாநகர சபையில் புதிய வரலாறு!

புத்தளம் வரலாற்றில் முதன்முறையாக, ஒரே மாதத்தில் ரூ. 7.5 கோடி வருமானம் ஈட்டப்பட்டு, 2026 ஜூலை மாதம் அதிகூடிய வருமானம் பெற்ற மாதமாக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நிர்வாக முயற்சிகள், வருமான சேகரிப்பு மேம்பாடுகள் மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் பயனாக இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளதாக மாநகர முதல்வர் சபையில் அறிவித்தார்.

இந்த அதிகரித்த வருமானத்தின் மூலம் புத்தளம் நகரில் மேலும் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

වසරක අඛණ්ඩ උත්සාහයේ ප්‍රතිඵලයක් ලෙස — පුත්තලම මහ නගර සභාවෙන් නව වාර්තාවක්!

පුත්තලම ඉතිහාසයේ පළමු වරට, එක් මාසයක් තුළ රුපියල් කෝටි 7.5ක ආදායමක් උපයා ගනිමින්, 2026 ජූලි මාසය වැඩිම ආදායමක් ලැබූ මාසය ලෙස වාර්තා වී ඇත.

පසුගිය වසර පුරා අඛණ්ඩව ක්‍රියාත්මක කළ පරිපාලන වැඩපිළිවෙළ, ආදායම් එකතු කිරීමේ ක්‍රම වැඩිදියුණු කිරීම සහ කාර්යක්ෂම ක්‍රියාමාර්ගවල ප්‍රතිඵලයක් ලෙස මෙම ප්‍රගතිය ලබාගත හැකි වූ බව නගරාධිපතිවරයා සභාවේදී ප්‍රකාශ කළේය.

මෙලෙස ආදායම වැඩිවීම හරහා පුත්තලම නගරයේ තවත් සංවර්ධන ව්‍යාපෘති රැසක් ක්‍රියාත්මක කිරීමට හැකිවීම සතුටුදායක පුවතකි.

Address

14, Kachchery Road
Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puttalam Municipal Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share