16/11/2024
பாராளுமன்றத் தேர்தல் 2024 - புத்தளம் மாவட்டம்
புத்தளம் தேர்தல் தொகுதி வரலாற்றில், பெரும்பான்மை கட்சி ஒன்றில் போட்டியிட்டு சிறுபான்மையினருக்கான பாராளமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள முடியாத வரலாற்றை கொண்ட நாம், முதல் தடவையாக அந்த வரலாற்றை மாற்றி, ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டுள்ளோம், அல்ஹம்துலில்லாஹ். இவ்வெற்றிக்காக எமது வகிப்பாகத்தை வழங்கியமைக்கு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
கடந்த காலத்தில், பெரும்பான்மை கட்சியில் இருந்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெற முடியாது என்பதற்கு தரவுகளுடன் விளக்கங்களை வழங்கிய நாம், இம்முறை நிகழ்கால அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்து, சிறுபான்மை பிரதிநிதித்துவம் கிடைக்கலாம் என நம்பியதை பலர் ஏளனம் செய்ததும், மிரட்டல்கள் விடுத்ததும் இன்றும் மனதில் நிற்கின்றது.
அல்லாஹ்வை சாட்சியாக கொண்டு, எவ்வித சுயநலமும் இன்றி, நல்லாட்சியின் தேவையை முன்னிட்டு, அதனை சாத்தியப்படுத்திய வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டோம்.
எம்மை தூற்றியவர்கள், மிரட்டியவர்கள், மற்றும் விமர்சித்தவர்களின் தடைகளைக் நம்பிக்கையால் வெற்றி கொண்டு, புதியதொரு வரலாற்றை படைத்திருக்கின்றோம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்!