Ulukkappallam .puttalam

Ulukkappallam .puttalam this page will upload everything for our students and our all fans you can send always your news to this page

நம்ம புத்தளம்!புத்தளம் உப்பைத் தளமாகக் கொண்டு வந்தோரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயற்கை அன்னையின் செல்வத்தால் அனைத்து வ...
27/04/2026

நம்ம புத்தளம்!

புத்தளம் உப்பைத் தளமாகக் கொண்டு வந்தோரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயற்கை அன்னையின் செல்வத்தால் அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட மண்ணாகும். இது சுமார் 3,072 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. 2012 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த சனத்தொகை 762,396 ஆகும். இம் மண்ணில் சொந்த ஊர் மக்கள் மாத்திரமல்லாது 1990ம் ஆண்டு வடக்கு யுத்தத்தால் விடுதலைப்புலிகள் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட அம் மக்களுக்கு அடைக்களம் கொடுத்த அன்னை பூமியும் புத்தளமாகும்.

அப்படிப்பட்ட மண் இப்போது அழிவை எதிர் நோக்கி வருகின்றது. காரணம் புத்தளத்தைச் சூழ அமைந்துள்ள மற்றும் அமைக்கவுள்ள தொழிற்சாலைகள்தான்.

தன்னை இழந்து வரும் புத்தளம்......

அதனடிப்படையில் புத்தளம் கல்லடிப் பகுதியில் அமைந்துள்ள சீமெந்தது தொழிற்சாலை. சீமெந்து தொழிற்சாலையினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் பலராலும் கவனிக்கப்படுகின்றன. இது சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பல தசாப்த காலங்கள் பாதிப்பிற்குள்ளாக்கிக் கொண்டு வருகின்றது.

சீமெந்து உற்பத்தியின் போது அதிக அளவிலான தூசித் துகள்களை (dust particles), கார்பன் டயாக்ஸைடு (CO₂), நைட்ரஜன் ஒக்சைடுகள் (NOx), சல்பர் ஒக்சைடுகள் (SOx) ஆகியவற்றை வெளியிடுகிறது. இந்த வாயுக்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தி மனிதனுக்கு அஸ்துமா, மூச்சுத்திணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாது நில மாசுபாடு (Soil Pollution)தூசித்துகள் மற்றும் கழிவுகள் அருகிலுள்ள நிலத்தில் படிந்து, விவசாயத்தில் பயிர்களின் வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்குகின்றது. மேலும் நிலத்தில் heavy metals சேர்ந்து நிலத்தின் இயல்பை மாற்றுகிறது. இதனால் நிலத்தடி நீர் (குடிநீரும்) பாதிக்கப்படுகின்றது. இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

அடுத்து புத்தளம் மாவட்டத்தில் சுண்ணக்கல் (Limestone) அகழ்வு முக்கியமான (பனிக்கற்கள் அகழ்வுப்) பணிகளில் ஒன்றாகும். இது சிமெந்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடம் தொடர்பான உற்பத்திக்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் நீரின் இயல்பு மாற்றம், மண்ணின் தரம் குறைதல் மற்றும் மரங்களும் பசுமையும் அழிவடைந்து வருகின்றது. அத்தோடு விலங்குகளின் வாழ்விடமும் அழிக்கப்படுகின்றது.

சுண்ணக்கல் அகழ்வு புத்தளத்தில் ஒரு முக்கியமான தொழில்துறை நடவடிக்கையாக இருந்தாலும், இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

அடுத்து நுரைச்சோலையில் அமைந்துள்ள அனல்மின் நிலையம். அனல்மின் நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நிலக்கரியை எரிப்பதனால் வெளியேறும் சல்பர்டைஒக்சைடு (SO2), நைட்ரஜன் ஒக்சைட்கள் (NOx), சாம்பல் மற்றும் சிறுதுகல்கள் (PM2.5, PM10) காற்றை மாசுபடுத்துகின்றன.

PM2.5 மற்றும் PM10 என்பது காற்றில் உள்ள மைக்ரோ நிலைத்த தூசிக் கருக்களில் (particulate matter) உள்ள அளவைக் குறிக்கும். PM10 விட்டம் 10 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். தூசித் துகள்கள். (மண்ணில் பரவலாக உருவாகும் தூசி) PM2.5 – விட்டம் 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். மிகவும் நுண்ணிய துகள்கள். (வாகன புகை, எரிவாயு)
இவை இரண்டும் காற்றின் தரத்தை பாதிக்கக்கூடியவையாகும். PM2.5 மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அது நம்முடைய நுரையீரலுக்குள் நுழைந்து சுவாசத் தொற்றுகள், ஹார்ட் அட்டாக், கேன்சர் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம். இவை பருவநிலை மாற்றம், தொழிற்துறைகள், வாகனங்கள், எரிப்பு முறைகள் போன்றவற்றால் அதிகரிக்கின்றன.

மேலும் மண் மற்றும் நீர் மாசுபாடு. அதாவது தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் மற்றும் இரசாயனக் கழிவுகள் நிலத்திற்கும் அருகிலுள்ள கடலுக்குள் செல்வதாலும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. சாம்பல்க்கிடங்கு மற்றும் நீர்வெளியீடு மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் வெதும்பிய நீர் கடலில் வீழ்வதால் மீன்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் சிறு மீன்பிடித் தொழில் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் இப்போது அன்றாடம் குடிப்பதற்காகப் பயன்படுத்தும் நீரைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சுவாசக் கோளாறுகள் ஆஸ்துமா, தலைவலி, உடற் சோர்வு போன்ற உடல்நலக் குறைகள் அதிகரித்து வருகின்றன.

அடுத்து புத்தளத்தில் அமைந்துள்ள காற்றாலை (Wind Power Plant) மின்சார உற்பத்தி நிலையம். பொதுவாக ஒரு பசுமை (green) மற்றும் சூழலுக்கு உகந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுகிறது. ஆனால், இதன் மூலம் பாதிப்புகள் உள்ளன. ஒலி மாசுபாடு (Noise Pollution) காற்றாலை சுழலும் போது சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து உண்டாகும் ஒலி, அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியான ஒலியினால் உறக்கம் குறைதல், மனஅழுத்தம், மனநிலை மாற்றங்கள் போன்ற தாக்கங்கள் ஏற்படுகின்றன.

அது மட்டுமல்ல காற்றாளை மின்விசிறிகளில் சில புத்தளத்தில் உள்ள குபா எனும் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆரம்பத்தில் விசிறிகள் திடீர் என தீப்பற்றி எறிவதும் அவை அருகில் உள்ள குடிசைகளில் வீழ்வதும் இடம்பெற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு கட்டாய இடப்பெயர்வு செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளக்கப்பட்டனர்.

மேலும் தரையமைப்புப் பாதிப்பு (Land Use Impact) பெரிய அளவில் நிலம் இதை அமைப்பதற்கு தேவையாகும். மேலும் இவற்றுள் அதிகமானவை மக்கள் பயன்பாட்டு நிலப்பகுதிகளிலே அமையப்பெற்றுள்ளதால் மீன்பிடி, விவசாயம் போன்றவற்றின் நிலப்பகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சில சமயங்களில் காற்றின் இயல்பு பாதிக்கப்படுவதாக சில கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இவைகள் ஒன்றினைந்து நஞ்சூட்டப்பட்ட புத்தள சூழலை உருவாக்கிக் கொண்டிருக்க, அடுத்த நாசகார செயலாக அருவக்காடு குப்பைத் திட்டத்தை 2014ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால், அருவக்காடு அருகில் கடலோரம் இருப்பதால், குப்பையின் கழிவுகள் கடலுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. அப்படிக் கடலுடன் கழிவுகள் கலக்கப்பட்டால் கடலியல் உயிரினங்கள் மற்றும் மீன்வளத்தையும் பாதிக்கக்கூடும்.

மேலும் பெரும் அளவில் குப்பைகள் கொண்டு வரப்படுமேயானால் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் வாழ்விட சீர்கேடு, நிலத்தின் மதிப்பு குறைதல், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு அது குடிநீரையும் சேர்த்து பாதிப்புக்குள்ளாக்கும். தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பிரச்சினை போன்றவற்றோடு, அருவக்காடு பகுதியில் இயற்கை வனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. குப்பைகளின் நச்சு, கழிவுகள் அவற்றின் வாழ்விடத்தை அழித்துவிடும். குப்பைகளை எரித்தால் துர்நாற்றம், விஷவாயுக்கள் (பொலிதீன், பிளாஸ்டிக் எரிப்பின் மூலம்) காற்று மாசுபடுத்தப்படும். இது அந்தப் பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்சினை, ஆஸ்துமா மற்றும் தொற்று நோய்களையும் ஏற்படுத்தும்.

இவை அனைத்தாலும் புத்தள மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக பொதுவான பிரச்சினைகளாக இயற்கை தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் இதனால் காலப்போக்கில் புத்தளம் ஒரு மயான பூமியாக மாறிவிடும்.

புத்தளத்தின் ஒவ்வொரு தொழிற்சாலை உருவாக்கத்தின் போதும் மக்கள் போராடத போராட்டமே இல்லை. சில போராட்டங்களின் போது உயிர்கள் கூட பரிபோயுள்ளன. ஒவ்வொரு அரசும் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து எம் நாட்டை செழுமையாக்குவோம் என்ற வாக்குறுதியுடனேயே ஆட்சி பீடம் ஏறுகின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அதை மறந்து மக்களை ஏமாற்ற ஆரம்பித்து விடுகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் இருப்புக்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் போது, நாம் வாழும் சமூகம் நம் கண் முன்னே மாண்டு போவதற்கு இடமளிக்கக் கூடாது.

*பணிவாக இருங்கள். ஒருமுறை மண்ணை திரும்பிப் பாருங்கள், உங்கள் கர்வம் காணாமல் போகும். நாம் அனைவரும் மண்ணிலிருந்து வந்தவர்க...
05/04/2026

*பணிவாக இருங்கள். ஒருமுறை மண்ணை திரும்பிப் பாருங்கள், உங்கள் கர்வம் காணாமல் போகும். நாம் அனைவரும் மண்ணிலிருந்து வந்தவர்கள், மீண்டும் மண்ணுக்கே செல்லப்போகிறவர்கள்...🥺😢*

ஒரு தகப்பனின் வலி…மண்ணுக்குள் புதைந்திருக்கிறான் அவன்…ஆனால் அவன் கண்ணீரின் சத்தம் உலகமே கேட்கிறது. 😢“என்னை வெளியே இழுக்க...
16/03/2026

ஒரு தகப்பனின் வலி…

மண்ணுக்குள் புதைந்திருக்கிறான் அவன்…
ஆனால் அவன் கண்ணீரின் சத்தம் உலகமே கேட்கிறது. 😢

“என்னை வெளியே இழுக்காதீர்கள்…
என் மக்களை முதலில் காப்பாற்றுங்கள்…”
என்று ஒரு தந்தையின் இதயம் கத்துகிறது.

ஒரு தகப்பனுக்கு
தன் உயிர் முக்கியமல்ல…
தன் குழந்தைகளின் உயிர்தான் உலகம். ❤️

அவன் மூச்சு திணறினாலும்
அவன் மனம் ஒரு கேள்விதான் கேட்கிறது:

“என் மகன் உயிரோடு இருக்கிறானா…?
என் மகள் பாதுகாப்பாக இருக்கிறாளா…?”

இதுதான் தந்தையின் அன்பு.
அது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று.

நாம் பல நேரம்
தந்தையை புரிந்து கொள்ளாமல் வாழ்கிறோம்…
அவரது அமைதியின் பின்னால்
எத்தனை பயமும்,
எத்தனை பொறுப்பும்,
எத்தனை அன்பும் மறைந்திருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம்.

இன்று நினைத்துப் பாருங்கள்…
உங்கள் தந்தை உங்களுக்காக எவ்வளவு துன்பங்களை தாங்கியிருக்கிறார்?

ஒரு தந்தையின் வலியை
உலகம் முழுவதும் புரிந்து கொள்ளும் நாள் வந்தால்
இந்த உலகம் கொஞ்சம் நல்லதாக மாறும். 🌍

தந்தையை மதியுங்கள்…
அவரது அன்பு
நம்முடைய வாழ்க்கையின் அமைதியான காவலன்.

மரணம் உறுதி…
ஆனால் நாம் வாழ்வது அது வராது போல…!

ஒரு நாள்
பணம் 💰
பதவி 🪪
புகழ் 👑
வாதங்கள் ⚔️
எதுவும் உதவாது…

மண்ணின் கீழ் புதையும்போது
ஒரே ஒரு கேள்விதான் மனிதனின் உள்ளத்தை கிழிக்கும்:

“என் வாழ்க்கையை நான் எதற்காக செலவிட்டேன்…?”

பலர்
மற்றவர்களை விமர்சிக்க நேரம் வைத்தார்கள்…
வெறுப்பு விதைக்க நேரம் வைத்தார்கள்…
ஆனால்
உண்மையை தேட நேரம் வைக்கவில்லை.

மரணம் வரும்போது
மனிதன் கேட்கும் மிக பெரிய வேதனை:

“இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால்
நல்லது செய்திருப்பேன்…!”

ஆனால்
வாழ்க்கை ஒரு தேர்வு.
நேரம் ஒரு வாய்ப்பு.
மரணம் ஒரு நினைவூட்டல்.

இன்று நாம் உயிரோடு இருக்கிறோம்.
அதனால் இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது:

✔ உண்மையை தேட
✔ நன்மை செய்ய
✔ மனிதரை காப்பாற்ற
✔ இறைவனை நினைக்க

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…

மரணம் நிச்சயம்.
ஆனால் அதற்கு முன் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே
நம் வாழ்க்கையின் உண்மையான மதிப்பு.

சிந்தியுங்கள்… ✨

13/03/2026
*ஒவ்வொரு ரமலான் வரும்போதும் நம்முடைய பிரார்த்தனைகளும் ஆசைகளும் மாறுகின்றன*🫶*நம்முடைய தேவைகளும் மாறுகின்றன.**ஆனால்**அல்லா...
12/03/2026

*ஒவ்வொரு ரமலான் வரும்போதும் நம்முடைய பிரார்த்தனைகளும் ஆசைகளும் மாறுகின்றன*🫶

*நம்முடைய தேவைகளும் மாறுகின்றன.*

*ஆனால்*
*அல்லாஹ் என்றும் மாறாத கொடையாளனாகவும்* *இரக்கமுள்ளவனாகவும், பேராற்றல் மிக்கவனாகவே இருக்கிறான்.*

*மனிதனின் தேவைகள் அவனது வயதிற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுகின்றன.*

*இந்தத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் இறைவனின் பண்புகள் மட்டும் என்றும் மாறாதவை.*

*ஒவ்வொரு ரமலானும்*
*நாம் இப்படி* *வாழவேண்டும் என்பதை நமக்குக் காட்டும் ஒரு ஆன்மீகக் கண்ணாடி ஆகும்.*

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு நோன்பாளிக...
06/03/2026

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க (உணவு அல்லது பானம்) அளிக்கிறாரோ, அவருக்கு, நோன்பாளியின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்படாமல், அந்த நோன்பாளியைப் போன்றே நற்கூலி உண்டு."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு

ஜாமிஉத் திர்மிதீ : 807

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வத...
05/03/2026

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு என்ன தடை?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன; ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக அவர் விட்டுச் சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான (பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2408.
அத்தியாயம் : 15. ஹஜ்

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது அவருக்குத் தானாக...
04/03/2026

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது அவருக்குத் தானாகவே வாந்தி வந்துவிட்டால் (அதாவது, வாந்தி அவரை மிகைத்துவிட்டால்), அவர் அந்த நோன்பைக் கழா செய்ய வேண்டியதில்லை. ஆனால், அவராகவே (வேண்டுமென்றே) வாந்தியைத் தூண்டி எடுத்தால், அவர் அந்த நோன்பைக் கழா செய்ய வேண்டும்.

சுனன் அபூதாவூத் : 2380

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில், குறிப்பாக உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய ஈரானின் முன்னாள் அ...
01/03/2026

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில், குறிப்பாக உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்முத் அஹமதிநிஜாத் (Mahmoud Ahmadinejad) இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி சர்வதேச ஊடகமான 'Reuters' நிறுவனத்தை மேற்கோள் காட்டி வௌியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிக்க காலப்பகுதிகளில் ஒரு நெருங்கிய நண்பராகச் செயற்பட்ட அவர், உமா ஓயா திட்டத்தின் மூலம் இந்நாட்டு மின்சார மற்றும் விவசாயத் துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கியவர்.

அஹமதிநிஜாதின் ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு மிகவும் பலமாக இருந்தது. அவர் இலங்கைக்கு விஜயம் செய்து இத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தமை இன்றும் பலரால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன்.

இறைவன் நாடினால் என்மரணம் நிகழும் என்கடமைகளைச் செய்வதற்கு நான் காரியாலத்தில் இருப்பேன் இங்கு நான் முக்கியமல்ல எங்கள் மார்...
01/03/2026

இறைவன் நாடினால் என்மரணம் நிகழும்
என்கடமைகளைச் செய்வதற்கு நான் காரியாலத்தில் இருப்பேன்

இங்கு நான் முக்கியமல்ல எங்கள் மார்க்கமே முக்கியம் அதனால்தான் எங்களை தவறு எதுவும் செய்யாமல் அளிக்கப்பார்கின்றனர்

எனக்குப்பின் என்னைவிட வீரியமான தலைமையை சியோனிசுகள் காணுவார்கள்

கொமைணியின்வார்த்நைகள்

ஈரான் பிரதமர் ஆயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து அவரது அலுவலகத்தில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ரமளானில் (அதன் இரவுகளில் நி...
27/02/2026

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ரமளானில் (அதன் இரவுகளில் நின்று) வணங்குகிறாரோ, ஈமான் (உறுதியான நம்பிக்கையுடன்) கொண்டவராகவும், அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் (முகஸ்துதிக்காக அல்லாமல்), அவருடைய முந்தைய பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படும்."

ஸஹீஹுல் புகாரி : 37

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவ்விரண்டையும் அவர் அனுபவிக்கிறார்: ஒன்...
26/02/2026

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவ்விரண்டையும் அவர் அனுபவிக்கிறார்: ஒன்று, அவர் நோன்பு திறக்கும்போது மகிழ்ச்சியடைகிறார்; மற்றொன்று, அவர் தம் இறைவனைச் சந்திக்கும்போது தமது நோன்பைக் குறித்து மகிழ்ச்சியடைவார்.”

ஸஹீஹுல் புகாரி : 1904

Address

Puttalam

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Ulukkappallam .puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share