Alm Saleem

Alm Saleem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alm Saleem, Saintamaruthu.

"Happy Eid Mubarak""ஈதுல்  பித்ர்"புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் "ஈத் முபாரக்" உறவுகளே!முப்பது நாள் நோன்பிருந்து ...
21/03/2026

"Happy Eid Mubarak"

"ஈதுல் பித்ர்"
புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் "ஈத் முபாரக்" உறவுகளே!

முப்பது நாள் நோன்பிருந்து பசித்திருந்து தாகித்திருந்து மற்றும் தொழுகைகள், புனித குர்ஆண் திலாவத்துக்கள் போன்றன நமது வாழ்வில் பல படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது.

அந்த வகையில் நாம் பெற்ற பயிற்சியை தொடர்ந்து பின்பற்றி வல்லவன் அல்லாஹ்வின் அருளையும் அவனது கருணையையும் வேண்டிப்
பிரார்த்போமாக.

சத்தியம் அசத்தியம், உண்மை பொய், நேர்மை அநியாயம் என்பவற்றுக்கு இடையில் இன்று நடைபெறும் உலகலாவிய போராட்டத்தில் நிச்சயம் சத்தியம், உண்மை, நேர்மை வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் இந்நன்னாளில் அனைவரும் இருக்கரமேந்தி வல்லவன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!
ஆமீன்.

ALM SALEEM

இஸ்லாமிய வாழ்க்கை கல்வியுடனான எதிர்காலத் தலைவர்கள்!அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்விப் பிரிவினால் நாடு தழுவிய ரீதியில் ...
17/03/2026

இஸ்லாமிய வாழ்க்கை கல்வியுடனான எதிர்காலத் தலைவர்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்விப் பிரிவினால் நாடு தழுவிய ரீதியில் சுமார் 25 நிலையங்களில் ஒன்றாக ஏழு நாள் பயிற்சிப் பட்டறை சாய்ந்தமருது மல்ஹருஷம்ஷ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

புனித ரமலான் விடுமுறை காலத்தில் 9,10,11ஆம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கான பயிற்சியில் எம்.எஸ்.காரியப்பர், மல்ஹருஷம்ஷ் மகா வித்தியாலய மாணவர்கள் பங்குபற்றினர்.

இறுதி நிகழ்வு சாய்ந்தமருது பொலிவேரியன் கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஷ்ரப் தாஹிர் அவர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான கௌரவ ஷபிஷ், மற்றும் சபூர் ஆதம், அதிபர்களான திருமதி ரிப்கா அன்சார், எம்.ஐ.ஆரிப் மற்றும் முன்னாள் கல்முனை மாநகர உறுப்பினர் ஹமீத் அவர்கள் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு அல்- சுபைதா ஶ்ரீ லங்கா அனுசரணையில் முன்னாள் சமுர்தி மாவட்டப் பணிப்பாளர் ஐ.அலியார் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.ஜஹான் ஆகியோரின் நெறிப்படுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ALM SALEEM

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?"கல்முனை மாநகர சபைத் தேர்தல் பிட்போடப்பட்டதும் ஒருவகையில் நல்லதுதான், கல்முனை மாநகரம் கூறு...
02/02/2026

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?

"கல்முனை மாநகர சபைத் தேர்தல் பிட்போடப்பட்டதும் ஒருவகையில் நல்லதுதான், கல்முனை மாநகரம் கூறு போடப்படாமல்
சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகள் நிறைவேறும்" என்று அண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரால் கல்முனை நகரில் துணிச்சலாக பதிவு செய்த கருத்துக்களுக்கு நன்றி சொல்ல மருதூர் மக்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தேங்க்ஸ் தலைவரே!

முஸ்லீம் காங்கிரஷ் 80 களில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் காத்தான்குடியில் ஆரம்பிக்கப் பட்டாலும், முதன் முதலில் கூட்டம் நடத்தி அல்லாஹு அக்பர் கோசம் போட்டு கட்சிக்கு வலுவூட்டிய ஊர் சாய்ந்தமருது.

அதுமட்டுமன்றி 1987ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் மூலம் நடைபெற்ற முதலாவது மாகாண சபை தேர்தலில் ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற 17 உறுப்பினர்களில் 3 உறுப்பினர்களை அமோக வாக்களிப்பின் மூலம் சாய்ந்தமருது பெற்றுக் கொண்ட வரலாறும் உண்டு.

தொடர்ந்து 1988ஜனாதிபதித் தேர்தல், மற்றும் 1989,1994ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் கலப்பில்லாமல் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியில் மிகக் கூடிய பங்கு வகித்தவர்கள் சாய்ந்தமருது மக்கள் என்பதனை மறக்க முடியாது.

2001.02.04 ஆம் திகதி சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளி மூன்றலில் உங்களின் தலைமைத்துவம் முடிசூடப்பட்ட நாள் என்பதும் இன்றும் நினைவு கூரத்தக்கது.

சாய்ந்தமருது இணைக்கப் பட்டு கல்முனை பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபையாக மாறிய போதெல்லாம் தனது முழு ஆதரவை கடந்த மூன்று தசாப்தங்களாக வழங்கி வரும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட கல்முனைத் தொகுதியில் அதிகூடிய வாக்காளர்களை கொண்ட பிரதேசம்.
தனது வடக்கு,தெற்கு எல்லைகள் பறிபோன நிலையிலும் தொடர்ந்து வாக்களித்தார்கள்.

அதனால்தான் என்னவோ உரிமையுடன்,
2014ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் அதாஉல்லா அவர்கள் கல்முனை மாநகர எல்லைக்குள் நான்கு சபைகளை உருவாக்க முனைந்தபோது,

அதனை எதிர்த்த உங்களது கட்சி முக்கியஸ்தர்கள் உடபட அனைவரும் கூறியது மாநகரை கூறு போடாமல், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் அமைந்திருப்பது மட்டுமல்லாது, தனியாக 1890ஆம் ஆண்டிலிருந்து உள்ளூராட்சி சபை அமைந்திருந்த சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வழங்குவது என்ற விடயம் முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில்
2015ஆம் ஆண்டு அன்றைய நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரு அங்கமாக சாய்ந்தமருது மக்களின் அபிலாசையை நிறைவேற்று முகமாக தாங்கள் தலைமையில், கல்முனை எம் பி. உடபட அனைத்து பரிவாரங்களுடன், மறுபுறம் எமது பள்ளித்தலைவர் மர்ஹூம் வை. எம். ஹனீபா மற்றும் நாங்களும் சென்று அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, மற்றும் அமைச்சின் செயலாளர் திரு தடல்லகே ஆகியோரிடம் எமது அபிலாசைக்கான விண்ணப்பத்தை தாங்களே சமர்பித்து வழி மொழிந்தீர்கள்.

அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட முன்னாள் எம்.பி. ஹரிஷ் அவர்களுக்காக வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை அழைத்து வந்து சாந்தமருதுகாண அபிலாசைகள் நிறைவேற்றும் வாக்குறுதியை வழங்கியது நினைவில் இருக்கலாம். அதுவும் கல்முனை மாநகர மத்தியில் அமைந்துள்ள சந்தான்கேணி
மைதானத்தில் வைத்து வாக்குறுதி வழங்கினீர்கள். சாய்ந்தமருது மக்களும் நம்பி வாக்களித்தார்கள்.

அதற்குப் பின்னர் பலதடவைகள் உங்களை பள்ளிவாசல் தலைவர் மர்கூம் வை. எம். ஹனீபா அவர்கள் உட்பட நாங்கள் சுமார் 50க்கு மேற்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டோம்.

இச்சந்திப்புக்களில் வாக்குறுதி அளித்த
நல்லாட்சியில் பிரதமரான ரணில் விக்ரமசிங்க அவர்களைக் கூட நாங்கள் உங்கள் தலைமையில் சந்தித்தோம். கொள்ளுப்பிட்டி பள்ளியிலிருந்து அலறி மாளிகைக்கு சென்றது என்ற விடயம் மறந்திருக்க நியாயமில்லை.

அந்த நேரத்தில் இணைப்புக்குழு தலைவராக இருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரிஷ் அவர்கள் அதனை துரிதமாக வழங்குவதற்கு சாய்ந்தமருது பிரதேச செயலக இணைப்பு குழுவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கௌரவ பிரதமருக்கு அந்த தீர்மானம் அனுப்பிவைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.

அத்துடன் நீங்கள் ஓயவில்லை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அன்றைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் தலைமையில் அமைச்சில் இருநாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூட சாய்ந்தமருது மக்களின் அபிலாசையை உடனடியாக நிறைவேற்றுவதற்கு
தீர்மானிக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

என்றாலும் அது நடைமுறைப் படுத்தாத நிலையில் ஏறக்குறைய 50ஆவது சந்திப்பை நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் உங்களது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு கட்சியின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

என்றாலும் கூட்டம் முடிவின்றி கலைந்தது கூட நினைவிருக்கலாம்.
அன்றிலிருந்து நீங்களும் மெதுவாக நழுவி விட்டீர்கள்.

அதனைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற சாய்ந்தமரூதூர் மக்கள் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30,31மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் எழுச்சிப் பேரணி ஒன்றை தொடர் தேர்ச்சியாக நடத்தி தமது அபிலாசைகளை உலகுக்கு வெளிக்காட்டி பறைசாற்றினர்.

விகிதாசார பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வட்டாரம் இணைத்த 60:40 என்ற உள்ளூராட்சி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வட்டாரப் பிரிப்பில் 6 வட்டாரங்களுடன் சாய்ந்தமருதின் நாமம் அழிக்கப்பட்டு கல்முனை 18 முதல் 23 வரை வட்டாரங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது .

2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில் மேற்படி 6வட்டாரங்களும் சுயேட்சை குழுவினால் வெற்றி கொள்ளப்பட்டு 9 அங்கத்தவர்கள் கல்முனை மாநகர சபைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இத்தேர்தல் முடிவுகள் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த முடிவாக உங்களால் கூறப்பட்ட அபிலாசை என்ற விடயத்தைப் பறைசாற்றியது.

2018ஆம் ஆண்டு பைசர் முஸ்தபா அவர்கள் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் கொண்டுவந்த கல்முனை நகரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு சுயாதீன குழுவை அமைப்பதற்கும், சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்கு உள்ளூராட்சி சபை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு உங்களது அமைச்சரவை அவதானக் குறிப்பு முழுக்குப் போட்டது என்பதனையும் கூறவேண்டும்.

பின்னர் கூட உங்களைத் தொடர்ந்து வந்த நிலையில், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தீர்கள், அதிலும் தீர்வு எட்டப்படவில்லை.

இறுதியாக உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பாத நிலையிலும் நீங்கள் புத்தக வெளியீடு ஒன்றுக்கு ymma கட்டிடத்திற்கு வருவதாக அறிந்து அங்கு வந்து காத்திருந்த நிலையில் சுமார் 5.00 மணி அளவில் வந்த நீங்கள் அவசரமாக சந்திக்க முடியாது, வேண்டுமாயின் கட்சியின் செயலாளரை சந்திக்கச் சொன்னீர்கள். சந்தித்தபோது அவரும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று விலகிக்கொண்டார்.

என்றாலும் கிழக்கு மாகாண சபை தீர்மானம், அம்பாறை மாவட்ட அதிபர் தலைமையிலான குழுவின் தீர்மானம் மற்றும் பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில்தான் அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலறி மாளிகையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டம் அன்றைய அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் பள்ளித் தலைவர் உட்பட 5 பேர் பங்குபற்றினோம்.
இக்கூட்டத்தில்
அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நிர்வாக மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஆராயப்பட்டது.
இதில் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரிஷ், கிழக்கு ஆளுநர், பிரதம செயலாளர், அம்பாறை அரச அதிபர், உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதன் இறுதி முடிவாக சம்பந்தபட்ட அமைச்சினால் அபிலாசைக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது மட்டுமன்றி, அதனையும் உங்கள் தரப்பில் பலர் தடுக்க முயற்சித்த விடயம் மற்றும் அதன் தற்போதைய நிலை கூட நீங்கள் அறியாததல்ல.

அதனால் தான் என்னவோ பிராயச் சித்தமாக, நீங்களே சாய்ந்தமருது மக்களின் அபிலாச்சைக்காக வருந்துவது ஒரு வகையில்
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரத்திற்குச் ஒப்பானது என்றாலும்
சாய்ந்தமருது மக்கள் மீதான உங்கள் கரிசனைக்கு
நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை..
தேங்க்ஸ் தலைவரே.!

A.L.M சலீம்

ஒலுவில் கிட்ஸ் காலேஜ் பிரி ஸ்கூல் (Pre School) வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒலுவி...
25/01/2026

ஒலுவில் கிட்ஸ் காலேஜ் பிரி ஸ்கூல் (Pre School) வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒலுவில் அல் ஹம்ரா மஹா வித்தியாலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.

இவ் முன்பள்ளி பாடசாலையின் தலைவர் பரீத் கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முன் பள்ளி பணியகத்தின் தவிசாளர் அமிர்தீன் அவர்கள் பிரதம அதியாகவும், அக்கரைப்பற்று வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஒலுவில் அல் ஹம்ரா மஹா வித்தியாலய அதிபர் உட்பட ஒலுவில் ஏனைய பாடசாலை அதிபர்கள், கிட்ஸ் காலேஜ் பணிப்பாளர் பாரிஸ், அதிபர் திருமதி பாரிஸ், மற்றும் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் புதிய மாணவர்களுக்கான வித்தியாதார நிகழ்வும் நடைபெற்றது.

ஐந்து வருடங்களாக இயங்கிவரும் மேற்படி முன்பள்ளி எதிர்காலத்தில் சிறந்து விளங்க எனது வலுவான பிரார்த்தனைகள் !

மூன்று தசாப்தத்தின் பின்னர் குடும்பத்தோடு ஒன்று கூடிய கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் விடுதி பழைய மாணவர்கள்..கல்முனை சா...
18/01/2026

மூன்று தசாப்தத்தின் பின்னர் குடும்பத்தோடு ஒன்று கூடிய கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் விடுதி பழைய மாணவர்கள்..

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் 1985ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து விடுதியில் தங்கி கல்வி கற்ற பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு, (15) பாசிக்குடா நாசிவன் தீவின் கேவ் ரிசோட்டில் விடுதியின் சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான எம்.எம்.நவாஸ் ஆசிரியர் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பல வருட இடைவெளிக்குப் பின்னர் பல்வேறு உயர் பதவிகளிலும், வெவ்வேறு துறைகளிலும் பணியாற்றும் பழைய மாணவர்கள் தமது குடும்ப சகிதம் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நினைவாக அனைவர் மனங்களிலும் பதிந்தது.

​இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று கூடலை நனவாக்குவதற்காக, லண்டனில் வசிக்கும் 1993ஆம் ஆண்டு சாதாரண தர பழைய விடுதி மாணவரான அக்கரைப்பற்று ஏ.எல்.எம். சமீம் கடந்த பல வருடங்களாக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் பிரதான அடித்தளமாக அமைந்தன.
அவருக்குத் துணையாக காத்தான்குடி என்.எல்.எம் இம்றான், ஜே.எம்.பைருஸ், வரப்பத்தான்சேனை ஏ.எல்.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி எம்.எம்.நவாஸ், அஹமட் இர்ஷாட், சாய்ந்தமருது யூ.கே. காலித்தீன், வாழைச்சேனை ஜே. மிப்தாவுடீன், அட்டாளச்சேனை எம்.எஸ்.எம். இக்றாம், எம்.ஏ.சௌமி ஆகியோரின் நிர்வாக ஒத்துழைப்புகளும், பழைய மாணவர்களின் மனமுவந்த நிதிப் பங்களிப்புகளும் இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடாத்த உறுதுணையாக இருந்தனர்.

இந்நிகழ்வானது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு முதற்கட்டமாக அதில் எல்லோரது சுய அறிமுகத்தோடு அவர்களது சுய விபரங்களையும் கடந்தகால அனுபவங்களையும் அறியக் கூடியதாக இருந்தது .

ஒன்று கூடிய மாணவர்களாலும் அவர்களது பிள்ளைகளினாலும் ஆடல், பாடல், வலுன் உடைத்தல், சங்கீத கதிரை மற்றும் போத்தலுக்குள் நீர் நிரப்புதல் போன்ற சுவாரசியமான கலை நிகழ்வுகளும் நடந்தேறினே.

இதன் போது விடுதி மாணவர்களை அக்காலப்பகுதியில நெறிப்படுத்தி பக்குவப் படுத்தி புடம் போட்ட விடுதி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான, ஏ.எல்.எம். சலிம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ.ஆர்.எம். அன்ஸார் மற்றும் ஓய்வு நிலை வரலாற்று ஆசிரியர் என்.எம்.எம். அன்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்த உன்னதமான நிலையில் அவர்களது கடந்த கால உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட விடுதி மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்ததோடு விடுதி ஆசிரியர்களுக்கும் பொன்னாடையும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டு முதலாம் கட்ட அமர்வு நிறைவு பெற்றது

இரண்டாம் கட்ட நிகழ்வாக
2026/2017 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவும் நடைபெற்றது.

Saleem Media Team

எல்லாப் புகழும் வல்லவன் அல்லாஹ்விற்கே,அல்ஹம்துலில்லாஹ்!எனது கடந்த நான்கு தசாப்த கால கல்வி, நிருவாக மற்றும் சமூக சேவையைப்...
14/12/2025

எல்லாப் புகழும் வல்லவன் அல்லாஹ்விற்கே,
அல்ஹம்துலில்லாஹ்!

எனது கடந்த நான்கு தசாப்த கால கல்வி, நிருவாக மற்றும் சமூக சேவையைப் பாராட்டி சோசியல் டிவி உயர் விருது வழங்கி கௌரவித்தது.

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு கூட்ட மண்டபத்தில் 13.12.2025 அன்று,
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு சிந்தக அபெயரத்ன, அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஜனாப் ரியாஸ், சோசியல் டிவி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜனாப் சிராஜ் மற்றும் சோசியல் டிவி குழுவினால் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேற்படி சோசியல் டிவி குழுவினருக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சோசியல் டிவி மேலும் வளர்ச்சி பெற எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

A.L.M சலீம்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்சாய்ந்தமருது-1  ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன் மற்றும் அவரின் மனைவி தஸ்மி ...
27/11/2025

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்

சாய்ந்தமருது-1 ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன் மற்றும் அவரின் மனைவி தஸ்மி மற்றும் பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ் அவர்கள் பயணித்த கார் இன்று 27.11.2025 காலை ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி வபாத்தான செய்தி முழுப் பிராந்தியத்தையும் குறிப்பாக சாயாந்தமருது மக்களையும் பெரும் சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்

எனவே மரணித்தவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.. ஆமீன்..

A.L.M சலீம்

After long time with retired prominent public servants in front of Sainthamaruthu Jummah Grand Mosque.Former, Secretary ...
07/11/2025

After long time with retired prominent public servants in front of Sainthamaruthu Jummah Grand Mosque.
Former, Secretary to the Ministry Mr. MIM. Ameer sheih, GA Vavuniya Mr. IM. Haneefa, PPSC Secretary Mr. MY. Saleem and Additional Secretary to the Ministry Mr. SLM. Hazeem. We all were worked as Divisional Secretaries in various divisions.

நீண்ட நாட்களின் பின்னர் முக்கியமான நிருவாக அதிகாரிகளுடன், சாய்ந்தமருது ஜும்மா பள்ளி முன்றலில்.
முன்னாள், அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.அமீர் சேக், வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் எம். வை.சலீம் மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எல்.எம்.ஹசிம்.
அனைவரும் பிரதேச செயலாளர்களாக இருந்தவர்கள்

பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசலில் புனித அல்குர்ஆனை மனனம் செய்கின்ற மாணவர்களை ஊக்குவித்தல்.சாய்ந்தமருது பொலிவேரியன் ஹிஜ்ரா ...
30/10/2025

பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசலில் புனித அல்குர்ஆனை மனனம் செய்கின்ற மாணவர்களை ஊக்குவித்தல்.

சாய்ந்தமருது பொலிவேரியன் ஹிஜ்ரா மஸ்ஜிதில் இயங்கிவரும் மத்ரஸத்துல்ஹிஜ்ராவில் அண்மையில் இடம்பெற்ற மேற்படி மனனம் செய்த மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசளிப்பு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 120 ற்கும் மேற்பட்ட ஆண், பெண் மாணவர்கள் இம்மாதரசாவில் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அல்குர்ஆனை மன்னன் செய்கின்றனர்.
அனைத்து மாணவர்களுக்கும் ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு பள்ளிவாசல் இமாம் சபீர் மௌலவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கண்ணியமிக்க உலமாக்கள், பள்ளிவாசல் உப தலைவர் அபூபக்கர் ஹாஜியார்,பதில் செயலாளர் பஷ்மீர், பொருளாளர் நிச்மத், முன்னாள் செயலாளர் ஷஹித் உட்பட பெற்றோர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி அல்குர்ஆனை மனனம் செய்யும்
120 மாணவர்களும் பொலிவேரியன் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மத்ராசாவை ஆரம்பிப்பதில் சபீர் மௌலவியுடன் இணைந்து பெரும் பங்காற்றிய முன்னாள் பொருளாளர் அக்பர் (ஹனீபா) அவர்களின் முயற்சியும் பாராட்டத்தக்கது.

இம் மத்ரசா மேலும் பல படிகள் உயர்ந்து வளர்ச்சி பெற என்றும் எனது பிரார்த்தனைகள்!

A.L.M சலீம்

இன்று(28.10.2025) கொழும்பு அலரிமாளிகையில் நடைபெறும் பிரஜா ஹரசர தேசிய விருது வழங்கும் விழாவில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத...
28/10/2025

இன்று(28.10.2025) கொழும்பு அலரிமாளிகையில் நடைபெறும் பிரஜா ஹரசர தேசிய விருது வழங்கும் விழாவில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அர்பணிப்புடன் சமுர்த்தி தொடர்பாக சகல மட்டங்களிலும் சமுர்த்திப் பணி செய்தமைக்காக முன்னாள் மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் (ஓய்வுநிலை) சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.அலியார் அவர்கள் விருதினை பெற்றுக் கொண்டார்.

அவருக்கு எனது வாழ்த்துக்கள்..

A.L.M சலீம்

Masha Allah our 2nd grandchild Aylin Zaina Ahamed Shafquee has completed one year and May Almighty Allah bless her with ...
26/10/2025

Masha Allah our 2nd grandchild Aylin Zaina Ahamed Shafquee has completed one year and May Almighty Allah bless her with good health and prosperity..

மாஷா அல்லாஹ் எமது இரண்டாவது பேத்தி அய்லின் சைனா அகமது சப்கீ ஒரு வயதை அடைந்துள்ளார், எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு பேரருளை புரிந்து எதிர்காலம் சிறக்க பிரார்த்திக்கின்றேன்.

A.L.M சலீம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒலுவில் Kids College பாலர் பாடசாலை அதிபர்  MLM. Fareed Khan அவர்களின் தலைமையில்  2025.10.01  ...
01/10/2025

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒலுவில் Kids College பாலர் பாடசாலை அதிபர் MLM. Fareed Khan அவர்களின் தலைமையில் 2025.10.01 அன்று சிறுவர் கண்காட்சியும் சிறுவர் விளையாட்டு விழாவும் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டேன்.

இந்நிகழ்வில் எமது நாட்டில் உள்ள மதஸ்தானங்களின் அறிமுகம் மட்டுமன்றி பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் ஒலுவில் பிரதேசத்தில் முன்னோடியான ஒரு முன்பள்ளியாக கிட்ஸ் காலேஜ் இருப்பதுடன், அது மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்றும் எனது பிரார்த்தனைகள்.

இந்நிலையில் பாலஸ்தீனில் சிறுவர்கள் கொல்லப்படும், பட்டினிச்சாவுடனும் உண்ண உணவின்றி உறங்க வீடின்றி அலைந்து திரிகின்ற நிலையில் மறுபுறம் மேற்குலக நாடுகள் கோஷமிட்டு யூத பயங்கரவாதிகளின் இன அழிப்பு தொடர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் அவர்களுக்காக நாம் அனைவரும் இறை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
.

Address

Saintamaruthu
32280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alm Saleem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share