Divisional Secretariat-Sainthamaruthu

Divisional Secretariat-Sainthamaruthu Sainthamaruthu DS division has 17 GN Divisions with a total population of 27652. 50.4% men & 49.6% women and Population density is 3072/sqKm.

Sainthamaruthu DS division has seventeen Grama Niladhari Divisions. It is bordered by kalmunai DS division to the north, the sea on the east, Karaitivu DS division to the south and Sammanthurai to the west. Total number of the population of Sainthamaruthu is 27652 and the majorities are moors. According to survey, 50.4% are men and 49.6% are women. Forty two percent of the population is less than

18 years old, 48% are between the age of 19-64 and 10% of the population is above 65 years in age. The population density of the division is 3072/sq km.

07/04/2026
06/04/2026
03/04/2026

"சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனையும் 2026*
=======================================

நோன்புப் பெருநாள் மற்றும்
தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு
*சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியுடன் மாபெரும் விற்பனையும், பாம்புகளுடன் சாகசம், நீர்த்தடாக படகு சவாரி, பௌன்சர் விளையாட்டு ஸ்னோ வேர்ல்ட், 9D சிறுவர் உலா, மெஜிக் போன்ற சிறுவர் சாகச நிகழ்ச்சியும்*

2026 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை

மாலை 5.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை

சாய்ந்தமருது பொலிவேரியனில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறுகிறது

வாருங்கள்..
கண்டுகளியுங்கள்...
மகிழுங்கள்...

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

வளமான தேசத்திற்கு உற்பத்தித்திறன் மிக்க கிராமம் - சமூக உற்பத்தித்திறன் தேசிய பணி ..........................................
16/03/2026

வளமான தேசத்திற்கு உற்பத்தித்திறன் மிக்க கிராமம் - சமூக உற்பத்தித்திறன் தேசிய பணி ..........................................................

"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால்
முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி
கிராமத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்
பிரிவின் . சாய்ந்தமருது - 08 கிராம உத்தியோகத்தர் பிரிவில்சாய்ந்தமருது - 08 கிராமத்தை சமூக உற்பத்தித்திறன்
கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு
இன்றைய தினம் .
கரையோர பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.ஆதம்பாவா
அவர்களின்
தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
உற்பத்தித்திறன் ஊடாக எமது நாட்டை அபிவிருத்தியை
நோக்கி இட்டுச் செல்லும் இந்த பாரிய
வேலைத்திட்டத்தின் சுருக்கத்தை இந்தக் காணொளியின்
ஊடாக நீங்கள் பார்வையிடலாம். ஒன்றிணைவோம்.! சமூக உற்பத்தித்திறன் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்!

ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான  பிரியாவிடை நிகழ்வு=======================சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடம...
06/02/2026

ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு
=======================

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச்சென்ற
திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.எல். அப்துல் றசீத், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்.ஐ. ஜரீனா, ஏ.எம். கால்தீன், எம்.எஸ். நூருல் றிபா , சமுர்த்தி வங்கியில் கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
எம்.பி.எம்.மன்சூர்
ஆகிய 05 உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பிரதேச செயலக நலன்புரிச் சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.றியாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2026.02.06) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.றிபாயா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட், பிரிவுக்கான பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன்போது உத்தியோகத்தர்கள் அலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகள், காரியாலய கடமைகளில் அவர்களின் முன் மாதிரியான செயற்பாடுகள் குறித்து பல உத்தியோகத்தராலும் பாராட்டிப் பேசப்பட்டதுடன் குறித்த ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தினால் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தின விழா சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இன்று(2026....
04/02/2026

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தின விழா சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இன்று(2026.02.04) நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்காகவும், அனர்தத்தினால் உயிரிழந்தவர்களுக்காகவும் இரு நிமிட மெளன பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக பிரதேச செயலாளரினால் சுதந்திர தின விசேட உரையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவிப் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ ஹமீட்,
நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான்,
நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், தலைமை பீட சிரேஷ்ட சமுர்த்தி, முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம்.பாயிஸ், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட்
உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்2026ம் ஆண்டிற்கான அரச கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு ======================== மலர்ந்துள்ள 20...
01/01/2026

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்
2026ம் ஆண்டிற்கான அரச கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு
========================

மலர்ந்துள்ள 2026 ஆம் வருடத்தில் அரச கடமைகளை ஆரம்பித்தல் மற்றும் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01)காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர்நீத்த முப்படைகளின் வீரர்களுக்காக, இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முதல் நாள் சத்தியபிரமாணமும் இதன் போது இடம்பெற்றது.

இந்நிகழ்வில்
உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம்,
மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம். பாயிஸ்,
பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட், நிதி உதவியாளர் எம்.எஸ்.எம். றியாஸ் கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

Address

Saintamaruthu
32280

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94672221890

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat-Sainthamaruthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat-Sainthamaruthu:

Share