KM/Al-Hilal Vidyalaya Sainthamaruthu

KM/Al-Hilal Vidyalaya Sainthamaruthu Official page for KM/Al-Hilal Maha Vidyalaya

வெளிவந்த 2024 க.பொ.த சாதாரன தர பரீட்சை முடிவுகளின் படி முதன்முறையாக 2024 இல் பரீட்சைக்கு தோற்றிய எமது சாய்ந்தமருது அல்ஹி...
12/07/2025

வெளிவந்த 2024 க.பொ.த சாதாரன தர பரீட்சை முடிவுகளின் படி முதன்முறையாக 2024 இல் பரீட்சைக்கு தோற்றிய எமது சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய முதல் தொகுதி மாணவர்களில் ஒரு மாணவன் "9A" சித்தியைப் பெற்றிருப்பதுடன் எந்த ஒரு மாணவரும் அனைத்துப் பாடங்களிலும் "W" பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சாதாரண தரத்துக்குரிய போதிய ஆளணியோ அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையிலும் கிடைக்கப்பெற்ற இப்பெறுபேறுகள் ஊக்கமளிக்கின்றன.

எதிர்காலத்தில் எமது ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும், அபிவிருத்திக்குழுவினரதும், பழைய மாணவர்களினதும் ஒத்துழைப்பு கிடைக்குமிடத்து மிகச் சிறந்த அடைவுகளைப் பெறக்கூடிய வாய்ப்புள்ளது.

இதற்காக பல்வேறு வகைகளிலும் ஒத்துழைத்த, பங்களித்த, ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தனி நபர்களுக்கும் இப்பாடசாலையின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று சேவையின் பின்னர், அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் திரு. யூ.எல். நாஸர் சேர் ( UL Nazar ) அவர்களுக்கு எமது  ஆசிரிய...
12/06/2025

இன்று சேவையின் பின்னர், அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் திரு. யூ.எல். நாஸர் சேர் ( UL Nazar ) அவர்களுக்கு எமது ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் இணைந்த பாடசாலை சமூகம் சார்பாக, அவரது ஓய்வு காலம் சிறப்பாகவும், அமைதியாகவும் அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்.சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்...
09/06/2025

பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்.

சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் 2025.06.10 (செவ்வாய்) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

தேசிய ரீதியான போட்டியில் அல் ஹிலால் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்!NextGen Scratch Scratch Championship 2023-2024 எனும் ப...
12/10/2024

தேசிய ரீதியான போட்டியில் அல் ஹிலால் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்!

NextGen Scratch Scratch Championship 2023-2024 எனும் போட்டியில் எமது அல்-ஹிலால் வித்தியாலத்தை சேர்ந்த இரு மாணவர்கள் வெற்றியீட்டி உள்ளனர்.

Scratch மென்பொருளின் மூலம் Boxing Game ஒன்றினை உருவாக்கி முதல் இடத்தினை பெற்றுக் கொண்ட தரம் 9ல் கற்கும் M.H.M.Haseef Razza மற்றும் Cat Flying Game ஒன்றினை உருவாக்கி Top10 இல் 7ம் இடத்தினை பெற்றுக் கொண்ட M.K.Waffa Ahamed ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

கல்முனை வலயத்தில் எமது பாடசாலையில் இருந்தே, இரண்டு போட்டியாளர்கள் வெற்றி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சி அளித்த ஆசிரியை ஆர்.எப்.திப்லா அவர்களுக்கும், வழிநடாத்திய ஏ.நஸீபா பானு அவர்களுக்கும், அதிபர் அவர்களுக்கும் உதவியாக இருந்த பெற்றோருக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்!

நடைபெற்று முடிந்த கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் 1ஆம், 2ஆம், மற்றும் 3ஆம்...
19/05/2023

நடைபெற்று முடிந்த கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் 1ஆம், 2ஆம், மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பாடசாலையின் அதிபர் UL Nazar Sir அவர்களின் வழிகாட்டலில், உடற்கல்வி ஆசிரியை Mrs. SI Nazeeha Begum, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MSM. Nuski மற்றும் ALM.Ersath ஆசிரியர் ஆகியோரின் பயிற்றுவிப்பில், மாணவர்களின் முழுமையான ஈடுபாட்டில் இச் சாதனைப் பெருமைகள் அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற காலைக் கூட்ட நிகழ்வில், கோட்ட மட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களை அதிபர், ஆசிரியர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் கிடைக்கப்பெற்ற இடங்களும் மாணவர்களின் பெயர்களும் வருமாறு :

Under 12 Boys

4x100m Relay - 1st place

Relay squad
1.Sukry
2.Saajith
3.Muheeth
4.Sinas
5.Ammar

Under 14 Boys

800m - 1st place
JM.Hasni

4x100m Relay - 2nd place

Relay squad

1.Ilahi
2.Fikry
3.Amzar
4.Saarik
5.Sudais ahamed
6.Thabith yoonus

Under 16 Boys

Shot Put - 2nd place
Aathil

800m - 3rd place
Suaith

200m 3rd place
Asaam

Long jump 3rd place
Asaam

400m - 3rd place
Haseef satha

4x100m - Relay - 2nd place

Relay squad

1.Asaam
2.Saheeth
3.Aafith mohaideen
4.Haseef satha
5.Sarahf ahamed
6.Aathil

4x400m - Relay - 3rd place

Relay squad

1.Abdullah
2.Suaith
3.Himsy
4.Ihab
5.Asaam
6.Haseef Satha

சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண பிரதம கணக...
25/04/2023

சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் எச்.எம்.எம்.றஷீட் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக் கௌரவ அதிதியாகவும், உதவிக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா மலீக் விஷேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையின் பிரதி உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், தமக்கு ஆரம்ப...
05/04/2023

இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், தமக்கு ஆரம்ப கல்வி அறிவளித்த பாடசாலையோடு இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாட்டை பழைய மாணவர் சங்கம் செய்துள்ளது.

இதனூடாக, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் பழைய மாணவர்கள் பாடசாலையுடனான தமது தொடர்பை பேணி பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுக்க முடியும்.

இந்த அழைப்பினூடாக திரட்டப்படும் தகவல்களை வைத்து பழைய மாணவர்களின் பங்களிப்புடன் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஊக்குவிப்பு அளித்தல், க.பொ.த சாதாரண தர கல்வி நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுதல், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களை செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்காலத்தில் இணையவழி கலந்துரையாடல்கள், ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடசாலையையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை செய்தல் உட்பட ஆக்கபூர்வமாக செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச ரீதியில் பரந்து வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்விகற்ற பழைய மாணவ மாணவிகள் அனைவரும் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து தமது அங்கத்துவத்தினை இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியும்.

Proud to be a

https://bit.ly/3JYZpe4

22/03/2023

சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2023.03.26 (ஞாயிறு) காலை 10.00 மணிக்கு அதிபர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இப்பாடசாலையின், பழைய மாணவ மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்க செயலாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26/01/2023
அறிவித்தல்-------------------------எதிர்வரும்  15. 01. 2022ஆம் திகதியிலிருந்து 22. 01. 2022ம் திகதிவரை நடைபெற இருந்த 202...
13/01/2022

அறிவித்தல்
-------------------------
எதிர்வரும் 15. 01. 2022ஆம் திகதியிலிருந்து 22. 01. 2022ம் திகதிவரை நடைபெற இருந்த 2022 தரம் ஒன்று மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதோடு அதற்கான புதிய திகதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

பழைய திகதி - புதிய திகதி
--------------------------------------------------
15. 01. 2022 - 25. 01. 2022

16. 01. 2022 - 26. 01. 2022

17. 01. 2022 - 27. 01. 2022

18. 01. 2022. - 29. 01. 2022

19. 01. 2022. - 31. 01. 2022

20. 01. 2022 - 01. 02. 2022

21. 01. 2022. - 02. 02. 2022

22. 01. 2022. - 03. 02. 2022

அதிபர்
கமு/ கமு/ அல் ஹிலால் வித்தியாலயம்

Address

Main Street
Saintamaruthu
32280

Opening Hours

Monday 07:00 - 02:30
Tuesday 07:00 - 02:30
Wednesday 07:00 - 02:30
Thursday 07:00 - 02:30
Friday 07:00 - 02:30

Telephone

+94672222374

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM/Al-Hilal Vidyalaya Sainthamaruthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category