24/08/2026
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி
-------------------
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.
மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
-------------------------
මඩකලපුව දිස්ත්රික් තරුණ ප්රජාව සඳහා විවෘත පාර්ලිමේන්තු මුලාරම්භය සඳහා වන පාර්ලිමේන්තු සංසදයෙන් පවත්වනු ලබන “Voice to Policy” වැඩසටහන අගෝස්තු 29 වැනිදා
විවෘත පාර්ලිමේන්තු මුලාරම්භය සඳහා වන පාර්ලිමේන්තු සංසදය විසින් සංවිධානය කරනු ලබන “Voice to Policy” සංවාදමය ප්රාදේශීය වැඩසටහන් මාලාවේ දෙවැන්න මඩකලපුව දිස්ත්රික් තරුණ ප්රජාව සඳහා අගෝස්තු 29 වැනිදා මඩකලපුව ‘East Lagoon’ හෝටල් පරිශ්රයේදී පැවැත්වීමට නියමිතව තිබේ.
විවෘත පාර්ලිමේන්තු මුලාරම්භය සඳහා වන පාර්ලිමේන්තු සංසදයේ සම සභාපතිවරුන් වන ගරු අමාත්ය මහාචාර්ය ක්රිෂාන්ත අබේසේන සහ ගරු ෂානක්කියන් රාජපුත්තිරන් රාසමාණික්කම් යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් පසුගියදා (19) පාර්ලිමේන්තුවේදී පැවති සාකච්ඡාවේදී මීට අදාළ සංවිධාන කටයුතු පිළිබඳ සාකච්ඡා කෙරිණි.
තරුණ නියෝජිතයන්ගේ සහභාගීත්වයෙන් විවෘත පාර්ලිමේන්තු සංකල්පය තවදුරටත් ප්රවර්ධනය කිරීමේ අරමුණින් මෙම වැඩමුළු මාලාව සංවිධානය කෙරෙන අතර සංසදයේ සාමාජික මන්ත්රීවරු මෙන්ම මඩකලපුව දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් මෙම අවස්ථාවට සහභාගී වීමට නියමිතය.
මෙම වැඩමුළු මගීන් විශේෂයෙන් තරුණ ප්රජාව පාර්ලිමේන්තු කටයුතු, ව්යවස්ථාදායක ක්රියාවලිය සහ විවෘත පාර්ලිමේන්තු මූලධර්ම පිළිබඳ දැනුවත් කිරීම මෙන්ම, පාර්ලිමේන්තුව සහ පුරවැසියන් අතර සම්බන්ධතාව තවදුරටත් ශක්තිමත් කිරීම අපේක්ෂා කෙරේ.
මෙම වැඩමුළුව සඳහා සහභාගීවීමට අපේක්ෂා කරන මඩකලපුව දිස්ත්රික්කයේ වයස අවු 18 – 35 අතර තරුණ තරුණියන් https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 සබැඳිය ඔස්සේ අදාළ පෝරමය සම්පූර්ණ කොට ලියාපදිංචි විය විය යුතුය. එසේම සහභාගී වන්නන් කිසිදු දේශපාලන පක්ෂයක් හෝ ව්යාපාරයක් හෝ ප්රවර්ධනය කරන සංකේතවලින් තොර ඇඳුමින් සැරසී සිටිය යුතු බවත් සංසදය විසින් දැනුම් දෙන ලදී.
මෙම රැස්වීමට සංසදයේ සාමාජික මන්ත්රීවරු සහ වැඩමුළු මාලාව සඳහා අනුග්රාහකත්වය සපයන සංවර්ධන සහකරු වන CII (Coalition for Inclusive Impact) ආයතනයේ නියෝජිතයෝ එක්ව සිටියහ.
එසේම මෙම රැස්වීමේදී ‘INTER Pares’ ව්යාපෘතියේ නියෝජිතයන් සමග මාර්ගගත තාක්ෂණය ඔස්සේ සාකච්ඡාවක් පැවති අතර සංසදයේ ඉදිරි වැඩසටහන් සඳහා එම ආයතනයේ සහය ලබා ගැනීමේ හැකියාව පිළිබඳව අවධානය යොමු විය. එම සාකච්ඡාවේ සම්බන්ධීකරණය සඳහා දායකත්වය දුන් Westminster Foundation for Democracy (WFD) හි මෙරට නියෝජිත සංජය විග්නරාජා මහතා ද මෙම අවස්ථාවට එක්විය.
---------------------
“Voice to Policy” Programme for Youth in Batticaloa District to be Held on August 29
-------------
The second programme in the “Voice to Policy” series of regional dialogue programmes, organized by the Parliamentary Caucus for the Open Parliament Initiative, is scheduled to be held for the youth of Batticaloa District on August 29 at the East Lagoon Hotel in Batticaloa.
The organizational arrangements for the programme were discussed at a meeting held recently (19) at Parliament under the leadership of the Co-Chairpersons of the Parliamentary Caucus for the Open Parliament Initiative, Hon. Minister Prof. Krishantha Abeyasena and Hon. Shanakiyan Rasamanickam.
The workshop series is being organized with the aim of further promoting the concept of an Open Parliament through the participation of youth representatives. Members of the Parliamentary Caucus, as well as Members of Parliament representing the Batticaloa District, are expected to participate in the event.
The workshops are intended particularly to raise awareness among young people about parliamentary affairs, the legislative process and the principles of an Open Parliament, while further strengthening the relationship between Parliament and citizens.
Young people aged 18–35 from Batticaloa District who wish to participate in the workshop are required to complete the relevant registration form via https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 and register. The Caucus also informed participants that they should wear clothing without symbols promoting any political party or movement.
Members of the Parliamentary Caucus and representatives of CII (Coalition for Inclusive Impact), the development partner providing sponsorship for the workshop series, also participated in the meeting.
In addition, a virtual discussion was held during the meeting with representatives of the INTER Pares, focusing on the possibility of obtaining their support for the Caucus’s future activities. Mr. Sanjaya Vignaraja, Country Director of the Westminster Foundation for Democracy (WFD), who contributed to coordinating the discussion, also participated in the meeting.