02/06/2026
சமூக சக்தி - 2026 திட்டத்தின் கீழ் எமது வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூநகர், இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, வெருகல் மற்றும் வெருகல் முகத்துவாரம் ஆகிய ஐந்து கிராமசேவகர் பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில் குறிப்பிட்ட அக் கிராமசேவகர் பிரிவுகளில் சமூக சக்தி திட்டமானது பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவாக்ளினால் இன்று (02.06.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரிவுகளுக்குரிய கிராமசேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சக்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தனர்.
Media Unit
DS - Verugal