SLPP Kinniya

SLPP Kinniya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLPP Kinniya, Political organisation, Trincomalee.

அரச சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில்...“சுபீட்சத்தின்...
03/09/2020

அரச சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில்...

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நாட்டுக்காக வேலை” கலாசாரத்தை உருவாக்குவதற்காக 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு அடையாள பூர்வமாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

25 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான இந்த நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.

50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரி இருந்தாலும் 60,000 பேரை இணைத்துக்கொள்வதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்தது.

இன்று அரச சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை 50,177 ஆகும்.

அதில் 38,760 பேர் பெண்களாவர்.

தொழில்களைப் பெற்றுக்கொண்டவர்களில் கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 31,172 ஆகும்.

பட்டதாரிகளை வகைப்படுத்தினால் - உள்வாரி பட்டதாரிகள் 29,156 பேரும், வெளிவாரிப் பட்டதாரிகள் 20,322 பேரும், தேரர்கள் 1000 பேரும் இந்த நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஏனைய பட்டதாரிகளில் வனிகத்துறை 1,839, முகாமைத்துவம் 7,278, விஞ்ஞானம் 4,494, சுதேச வைத்தியத்துறை 143, இணை சுகாதாரம் 161, கணனி தொழிநுட்பம் 989, பொறியியலாளர் மற்றும் சட்டம் 233 பேர் உள்ளிட்ட கணக்காய்வு டிப்ளோமாதாரிகள் 1,906 பேரும் அடங்குவர்.

நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் தலைமைத்துவம், திறன் மற்றும் எண்ணக்கரு அபிவிருத்தி பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படுவர்.

ஒரு வருட கால பயிற்சி நிறைவின் பின்னர் கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள், விவசாய சேவை நிலையங்கள், பிரதேச நீர்ப்பாசன அலுவலகங்கள், வனஜீவராசிகள் அலுவலகம், சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள், மருந்தகங்கள், சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கை அலுவலகம் போன்ற கிராமிய பிரிவுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செயற்பாட்டுக்கு செயற்திறனுடன் பங்களிக்குமாறு நியமனம் பெற்றவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன்.

அரச சேவைக்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சுமையாகாமல் - தாம் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நியாயமாக நடந்துகொள்ளுமாறும் நான் மேலும் வேண்டிக்கொண்டேன்.

என்னுடைய கணவர் ஜனாதிபதி நானில்லை:,என்னுடைய தகப்பனார் ஜனாதிபதி நானில்லை:,என்னுடைய மாமானார் ஜனாதிபதி நானில்லை ;, எனும் புர...
03/09/2020

என்னுடைய கணவர் ஜனாதிபதி நானில்லை:,
என்னுடைய தகப்பனார் ஜனாதிபதி நானில்லை:,
என்னுடைய மாமானார் ஜனாதிபதி நானில்லை ;, எனும் புரிந்துணர்வுடன் தங்களது சுய கௌரவங்களை பாதுகாத்துக்கொண்டு தானுன்டு தனது வேலையுன்டு என எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு மனைவி ஒரு மகன் மற்றும் ஒரு மருமகள் மூவரையும் பாராட்டாமலிருக்க முடியவில்லை. Really good Congratulations

அக்கறைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து;இருவர் உயிரிழப்பு!------அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்க...
02/09/2020

அக்கறைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து;
இருவர் உயிரிழப்பு!
-
--
---

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் உடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்களினால் குறித்த பஸ் மீது பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பஸ் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 #ஆணைக்  #குழுக்களின்  #அதிகாரங்கள்  #அதிகரிக்கப்பட  #வேண்டும்☝ கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் ✍ பை...
31/08/2020

#ஆணைக் #குழுக்களின் #அதிகாரங்கள் #அதிகரிக்கப்பட #வேண்டும்

☝ கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன்

✍ பைஷல் இஸ்மாயில் -

அடுத்த அரசமைப்பு திருத்தத்தில் நீதிமன்றம், அரச, பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான கபே சுட்டிக்காட்டியுள்ளது.

ஆணைக்குழுக்களை அரசாங்கம் மேலும் முறைப்படுத்தவும் அவற்றின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

சில ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து, சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அவற்றை ஒழிக்காமல் அவற்றை முறைப்படுத்துவதே தீர்வு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுயாதீன ஆணைக்குழுக்களானது நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும் அந்த ஆணைக்குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்.
சுயாதீன ஆணைக்குழுக்களால் நாட்டின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகளைத் தீர்த்து, அதனை நடத்திச் செல்வது ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கத்தின் கடமை என்றார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்பட்டமையே கொரோனா தொற்றின் மத்தியில், பொது தேர்தலை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு காரணமாக அமைந்தது என்றார்.
ஜனநாயக நாட்டில் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் உரிமை என்பது போல, ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை பலப்படுத்துவதும் ஜனநாயக அரசாங்கம் ஒன்றின் கடமை என்றும் சுட்டிக்காட்டினார்.

Open Bandaranaike international airportஇலங்கை பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதிஎதிர் வரும் 22 த...
20/08/2020

Open Bandaranaike international airport

இலங்கை பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதி
எதிர் வரும் 22 திகதி சனிக்கிழமை மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகின்றது.

முதற் கட்டமாக வெளிநாடு செல்பவர்களுக்காக திறக்கப்பட்ட விமான நிலையை செல்லும் வழியினை அடுத்து பார்வையாளர்களுக்கான பகுதி எதிர்வரும் சனிக்கிழமை முழுமையாக திறக்கப்படவுள்ளது.

அடுத்த கட்டமான வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்காக எதிர்வரும் நாட்களில் முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

எனவே பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக விமான நிலையை சேவைகள் விரைவில் முழுமையாக ஆரம்பிக்க முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

விமான நிலையம் மூடப்பட்டதனை அடுத்து இலங்கை அரசுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு நாட்டில் பிரதான வருமான வழியாக விமான சேவை மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு விளங்குகின்றது இதன் ஊடாக அந்நிய செலாவனி மூலம் 45 சதவீத வருமானம் இலங்கைக்கு கிடைக்கின்றமை குறிப்படத்தக்கதாகும்

19/08/2020
19/08/2020

நாளுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு; 4 நாட்களுக்கு : மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

➡️பி.ப. 6.00 - 7.00
➡️பி.ப. 7.00 - 8.00
➡️பி.ப. 8.00 - 9.00
➡️பி.ப. 9.00 - 10.00

நாளொன்றுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று முதல், பி.ப. 6.00 - 7.00 மணி, பி.ப. 7.00 - 8.00, பி.ப. 8.00 - 9.00, பி.ப. 9.00 - 10.00 ஆகிய நான்கு நேர அடிப்படையில் நாடு முழுவதும் நான்கு வலயங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (17) கெரவலபிட்டி உப மின்நிலைய 'லக்தனவி' மின்னுற்பத்தி தொகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 7 மணி நேரம்
நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை ஈடு செய்வதற்காக நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதிக மின் வளங்கலை பெறும் நோக்கில் செயற்படுத்தப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையம் சுமார் 300 இலிருந்து 500 செல்சியஸ் வரை சூடாகிய நிலையில் அதன் இயக்கம் சீராக அமைவதற்கான தன்னியக்க குளிர்விக்கும் தொகுதியின் இயக்கம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

குறித்த தொகுதி படிப்படியாக குளிர்வடைந்து, அதன் இயக்கம் வளமைக்கு திரும்ப 3 நாட்கள் எடுக்கும் என்பதால், அதனை ஈடு செய்ய இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகா வாற் மின்வலு தற்போது கிடைக்காத நிலையில், அதியுச்ச மின்சார பாவனைக்காலமான பிற்பகல் 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்வெட்டை அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்கள் இக்காலப் பகுதியில் மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறும், இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகரான அலி சப்ரி இன்று (17) பிற்பகல் நீதி அமைச்சில் நீதி அமைச்சராக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
17/08/2020

ஜனாதிபதியின் ஆலோசகரான அலி சப்ரி இன்று (17) பிற்பகல் நீதி அமைச்சில் நீதி அமைச்சராக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் ...
16/08/2020

அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் அடையும் முன்னேற்றம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் ஆறு மாதங்களுக்கு பின்னர், அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு மாதங்களுக்குள் அமைச்சர்கள் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வழங்கியுள்ள பங்களிப்பு, வழங்கிய இலக்கை பூர்த்தி செய்துள்ளமை, அமைச்சுக்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இதன் போது அமைச்சர்கள் எவராவது அரசாங்கம் மற்றும் அமைச்சுக்களின் இலக்கை அடைய தவறினால், அவர்களை உடனடியாக அமைச்சு பொறுப்பில் இருந்து நீக்குவது எனவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் குறைகேள் பணியகம் தொடங்கப்பட்டுள்ளது: பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை கேட்டறி...
16/08/2020

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் குறைகேள் பணியகம் தொடங்கப்பட்டுள்ளது:

பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு எஸ். எம். விக்ரமசிங்க அவர்களே மேற்படி பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமக்குரிய நிர்வாகப் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் தமது பொறுப்பிலிருந்து விலகியிருந்தால்,

அல்லது தமது அதிகார வரம்புகளைத் தாண்டி செயற்பட்டிருந்தால்,

அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் -

அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவதே குறைகேள் பணியகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.

கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தையில் உள்ள பழைய சார்ட்டட் வங்கிக் கட்டிடத்தின் 03வது மாடியில் இந்த பணியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமது முறைப்பாடுகள் அல்லது மனக் குறைகளை - மேற்படி பணியகத்திற்கு நேரிலே வருகைதந்து தனிப்பட்ட முறையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அல்லது -
ஜனாதிபதி செயலகத்தின் குறைகேள் அதிகாரி,
ஜனாதிபதி செயவகம்,
கொழும்பு 01'

- என்ற முகவரிக்குத் தபால் மூலமும் தமது முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் மக்கள் முன்வைக்க முடியும்.

அல்லது -
011 233 8073 என்ற தொலைபேசி / தொலைநகல் இலக்கத்திற்கு அழைத்தோ,

அல்லது -
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மக்கள் தமது முறைப்பாடுகளை எழுதியோ அனுப்பிவைக்க முடியும்.

தமது இயல்பு வாழ்க்கையை மக்கள் அமைதியாகப் பேணுவதற்குத் தடையாக உள்ள - போதைப்பொருள் கடத்தல், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பான விடயங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தமக்கு அனுப்பி வைக்க முடியும்.

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when SLPP Kinniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share