29/11/2025
அல்ஹம்துலில்லாஹ் ♥️
புல்மோட்டை மத்திய ஷூரா சபையின் ஏற்பாட்டில் இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் சமையல் பொருட்களின் உதவியுடனும் புல்மோட்டையிலுள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் காலநிலை மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட சுமார் 2000 ற்கும் மேற்பட்டோருக்கான சமைத்து வழங்கப்பட்ட உணவு தயார் செய்து இன்று 29.11.2025 வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக்க பொருளதவி வழங்கிய இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் கௌரவ தலைவர், பிரதிப் பொது பொது முகாமையாளர் - பண்டாரா சேர், பிரதம வேதியியளாளர், நிருவாக உத்தியோகத்தர் லலித் குமார சேர், விநியோக உத்தியோகத்தர் ஏ.பீ. நப்ஸார் சேர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நியாஸ் சேர் ஆகியோருக்கும்
தேக உதவிகளை வழங்கிய புல்மோட்டை மத்திய ஷூரா சபையின் உறுப்பினர்கள் குறிப்பாக இளைஞர்கள், நலன்விரும்பிகள் மற்றும் சமைப்பதற்கான இடத்தையும் சமைத்தும் வழங்கிய புல்மோட்டை லங்கா ஹோட்டல் உரிமையாளர் சகோதரர் சமீம் அவர்கள் மற்றும் அவரது குடும்பம் உட்பட அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலான கோடான கோடி நன்றிகள்.
இவ் ஏற்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக் அவர்களுக்கும் மேஜர் பிரபாத், மேஜர் ரொமேஷ் மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கும் கோடி நன்றிகள்.
இயற்கை சீற்றங்கள் மற்றும் வறுமையின் கீற்றுகளிலிருந்து எம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக. ஆமீன்.
கரம் கொடுப்போம்! துயர் துடைப்போம்!
உங்களுக்காக என்றும் நாங்கள்
புல்மோட்டை மத்திய ஷூரா சபை
29.11.2025
……………………………………………………………………………
Alhamdulillah ♥️
Today, 29.11.2025, the Pulmoddai Central Shoora Council—with the support of Lanka Mineral Sands Ltd.—prepared and distributed cooked meals to more than 2,000 people across all GN divisions in Pulmoddai who were severely affected by the recent floods.
Our sincere thanks to:
• The Chairman of Lanka Mineral Sands Ltd.
• Deputy General Manager Mr. Bandara
• Chief Chemist
• Administrative Officer Mr. Lalith Kumara
• Distribution Officer A.P. Napsar
• Administrative Officer M.S.M. Niyas
for providing essential supplies and supporting this effort.
We also extend our heartfelt gratitude to the youth volunteers, well-wishers, and members of the Shoora Council who worked tirelessly. Special thanks to brother Sameem of Pulmoddai Lanka Hotel and his family for providing the cooking space and preparing the meals.
A special word of appreciation to Kutchaveli Divisional Secretary Mr. Shiyavul Haq, Major Prabath, Major Romesh, and the Officer-in-Charge of the Pulmoddai Police Station for their invaluable support.
May the Almighty protect us all from the trials of natural disasters and hardship. Aameen.
Let us help. Let us heal.
Always here for the community,
Pulmoddai Central Shoora Council
29.11.2025