Northern Province Government Service Graduate Officers Union

Northern Province Government Service Graduate Officers Union This Union covers the territorial boundary of entire northern province and it has all graduate members who are under the government sectors.

எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு தொடர்பாக வெளியிடப்பட்ட மாலைமுரசுப் பத்திரிகைச் செய்தி...
10/01/2025

எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு தொடர்பாக வெளியிடப்பட்ட மாலைமுரசுப் பத்திரிகைச் செய்தி...

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவராலயத்தினால் அமுலாக்கம் செய்யப்பட்டுவரும்  ITEC நிகழ்ச்சித் திட்டத்தின்  அறிமுக கர...
07/01/2025

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவராலயத்தினால் அமுலாக்கம் செய்யப்பட்டுவரும் ITEC நிகழ்ச்சித் திட்டத்தின் அறிமுக கருத்தரங்கு மற்றும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின்(GSGU,NP) வருடாந்த பொதுக் கூட்டம் 2025 இனதும் பதிவுகள் சில...

07/01/2025
15 வருடகாலமாக எம்முடன் இணைந்து பயணித்து எமது தேவைகளுக்காகச் சேர்ந்து குரல் கொடுத்த எம்மினிய நண்பனின் பயணம் மேலும் சிறப்ப...
31/10/2024

15 வருடகாலமாக எம்முடன் இணைந்து பயணித்து எமது தேவைகளுக்காகச் சேர்ந்து குரல் கொடுத்த எம்மினிய நண்பனின் பயணம் மேலும் சிறப்புறவும் தொடர்ந்தும் எமக்காகக் குரல் கொடுக்கவும் கேட்டுக்கொண்டு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற உளமார வாழ்த்துகின்றோம்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்த போராட்டம்சேவை, தரம் மற்றும் பதவி எதுவாக இருந்தாலும் முதன்மை நிலை ஊழியத்தில் ...
05/07/2024

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்த போராட்டம்

சேவை, தரம் மற்றும் பதவி எதுவாக இருந்தாலும் முதன்மை நிலை ஊழியத்தில் உள்ளவர்கள் அடங்கலாக அனைத்து அரச ஊழியர்களும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வையும் வரிச் சுமையையும் தாங்கிக்கொள்ள முடியாது அவஸ்த்தைப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொரளாதார நீதி இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்தில்கொண்டு, வடக்கு மாகாண அரச சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினராகிய நாம் பின்வரும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கின்றோம்.

• சேவை அல்லது தரத்தினை பொருட்படுத்தாது அனைத்து பொதுச்சேவை ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ரூபா. இருபத்தைந்தாயிரம் (ரூபா. 25,000.00) கொடுப்பனவுத் தொகை வழங்க வேண்டும்.
• அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப்பிரமாணக்குறிப்பில் விசேட தரம் ஒன்றை தாபித்தல் உட்பட ஆN5, ஆN7 சம்பளப் படிநிலையுடனான பதவியுயர்வு நடைமுறையை வழங்குதல்.
• மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை தொடர்பாக 'அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கத்தினால்' முன்னிலைப்படுத்தப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குதல்.

போன்ற எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொழில்முறை நடவடிக்கையாக 08.07.2024 மற்றும் 09.07.2024 ஆகிய இரண்டு தினங்களிலும் சுகயீன விடுப்பு அறிக்கையிட்டு கடமை புறக்கணிப்பு போராட்டம் மெற்கொள்ளப்படும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

05/06/2024

இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்தக் கோரும் அரச சாரதிகள் சங்கத்தினருக்கான ஆதரவு
கடந்தவருடம் வடக்கு மாகாண சபையின் இணைந்தசேவை சாரதிகளுக்கான இடமாற்றக் கோரிக்கைகள் பெறப்பட்டு அதற்கமைய இடமாற்றப் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. ஆயினும் இவ்விடமாற்றங்கள் இதுவரையில் அமுல்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனை ஆட்சேபித்து கடந்த திங்கட்கிழமை (03-06-2024) முதல் தொடற்சியான பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினை கைதடி பிரதம் செயலாளர் செயலகத்திற்கு முன்பாக அரச சாரதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து சாரதிகளுக்கும் பாகுபாடற்ற முறையில் இடமாற்றம் வழங்கப்படவேணட்டும் என்னும் அவர்களின் கோரிக்கையானது எம்மாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் என்னும் வகையில் அரச சாரதிகள் சங்கத்தினர் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாமும் முன்வந்துள்ளோம்.
இதற்கமைவாக எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் அரச சாரதிகளுக்கு ஆதரவாக நாளை காலை (06-06-2024 ம் திகதி ) காலை 9.00 மணி முதல் 9.45 மணிவரை கைதடி பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக அரச சாரதிகள் சங்கத்தினருடன் இணைந்து வெளிநடப்புச் செய்யவுள்ளனர் என்பதனை அறியத்தருகின்றோம்.

13/03/2024
எமது சங்கமும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒருநாள் ஒருநாள் சுகவீனவிடுப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகவுள்ளது.
07/11/2021

எமது சங்கமும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒருநாள் ஒருநாள் சுகவீனவிடுப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகவுள்ளது.

07/11/2021

Address

Urumpirai

Alerts

Be the first to know and let us send you an email when Northern Province Government Service Graduate Officers Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Northern Province Government Service Graduate Officers Union:

Share