Public Library Pethalai

Public Library Pethalai �Gateway to the Future� You can access our library online system use this web address (8.00 am to 7.00pm)
www.pplib.blogspot.com

 #நன்றி_நவிலல்.எமது நூலக வாசகர்களின் வாசிப்பிற்காக தனது படைப்பான  #அருகம்புல்லில்_பனித்துளிகள் என்ற கைக்கூ தொகுப்பினை அஞ...
06/03/2026

#நன்றி_நவிலல்.
எமது நூலக வாசகர்களின் வாசிப்பிற்காக தனது படைப்பான #அருகம்புல்லில்_பனித்துளிகள் என்ற கைக்கூ தொகுப்பினை அஞ்சல் மூலம் கிடைக்கச் செய்த கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா ஐயா அவர்களுக்கு எமது நூலகத்தின் சார்பிலும் விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பேத்தாழை பொது நூலகத்தின் 61 ஆவது நிலா முற்றம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.பிரதி பெளர்ணமி தினங்களில் நூலக முற்றத்தில் விபு...
02/03/2026

பேத்தாழை பொது நூலகத்தின் 61 ஆவது நிலா முற்றம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

பிரதி பெளர்ணமி தினங்களில் நூலக முற்றத்தில் விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டுடன் நடாத்துகின்ற 'நிலா முற்றம்' கலை இலக்கிய சங்கம நிகழ்வானது இன்றைய தினம் 61 ஆவது முற்றமாக இடம்பெற்றிருந்தது.

வழமை போன்று இந்த பங்குனி மாதமும் பெண்களின் பெருமை கூறும் நிலா முற்றமாக சிறப்பித்திருந்தது.

அந்தவகையில் #தமிழ்_இலக்கியப்_பரப்பில்_பெண்ணிய_சிந்தனைகள் என்ற தொனிப் பொருளுக்கு அமைவாக இடம்பெற்றிருந்தது.

சுவாமி விபுலாநந்தரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தொடங்கிய இன்றைய நிகழ்வினை லக்‌ஷ்மி நர்த்தனாலயா நடனப்பள்ளியின் மாணவிகளான செல்வி. ஜீவரெட்ணம் ஸத்விகா மற்றும் செல்வி.தனுஷ்ன்ஸ்ரீ டுர்காஷினி ஆகியோரின் நடன நிகழ்வு அலங்கரித்திருந்தது.

அடுத்ததாக தமிழ் இலக்கியப் பரப்பில் பெண்ணிய சிந்தனைகள் என்ற தலைப்பிலான சிறப்பு உரைகளை விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், ஆலோசனை குழு உறுப்பினருமான திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் அவர்களும் வாசகர் வட்ட உறுப்பினரும், விபுலானந்தர் கலை இலக்கிய மன்றத்தின் உறுப்பினருமான தமிழூராள் அனுஸ்திகா அவர்களும் சிறப்பாக பகிர்ந்திருந்தார்கள்.

அத்தோடு எமது மாவட்டத்தின் வரலாற்று அம்சங்களின் சில குறிப்புக்களை எமது வாசகர் வட்டத்தின் உறுப்பினர் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார்.

இன் நிகழ்வின் இறுதி அம்சமாக இன்றைய நிலா முற்றத்தின் தொனிப்பொருளுக்கு அமைவாக சபையோரின் கருத்துக்களும் பகிரப்பட்டதனைத் தொடர்ந்து நடன நிகழ்வினை சிறப்பாக நிகழ்த்தி இந் நிலா முற்றத்தினை சிறப்பித்த மாணவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 #61ஆவது  #நிலாமுற்றம் #தமிழ்  #இலக்கியப்பரப்பில்  #பெண்ணிய  #சிந்தனைகள் பேத்தாழை பொதுநூலகத்தின் விபுலானந்தர் வாசகர் வட்...
01/03/2026

#61ஆவது #நிலாமுற்றம்

#தமிழ் #இலக்கியப்பரப்பில் #பெண்ணிய #சிந்தனைகள்

பேத்தாழை பொதுநூலகத்தின் விபுலானந்தர் வாசகர் வட்டம் மாதந்தோறும் முழுமதி நாளில் நடத்தி வருகின்ற “நிலாமுற்றம்“ -61ஆவது நிகழ்வு!
02.03.2026,திங்கட்கிழமை, மாலை.6.30க்கு! நூலக முற்றத்தில் நடைபெறவுள்ளது!

மகளிரை போற்றும் மார்ச் மாதத்தில் “தமிழ் இலக்கியப்பரப்பில் பெண்ணிய சிந்தனைகள்” எனும் தலைப்பில் இலக்கிய கருத்தாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

28/02/2026
இலங்கையில் தானியங்கி பொது நூலகங்களின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் தேவைகளை அடையாளம் காண்பது குறித்த நிகழ்ச்சி 06.0...
20/02/2026

இலங்கையில் தானியங்கி பொது நூலகங்களின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் தேவைகளை அடையாளம் காண்பது குறித்த நிகழ்ச்சி 06.02.2026 அன்று தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பேத்தாழை பொது நூலகத்தின் தன்னியமாக்கல் முயற்சிகள் தொடர்பில் நூலக உத்தியோகத்தரான் விளக்கமளிக்கப்பட்டது.

 #பேத்தாழை  #பொது  #நூலகத்தின்  #தேசிய  #வாசிப்பு  #மாதம்2025  #பரிசளிப்பு  #விழா(பெப்ரவரி, 12, 2026)தேசிய நூலக ஆவணமாக்க...
16/02/2026

#பேத்தாழை #பொது #நூலகத்தின் #தேசிய #வாசிப்பு #மாதம்2025
#பரிசளிப்பு #விழா
(பெப்ரவரி, 12, 2026)

தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் வெளியிடப்படும் சுற்றுநிருபத்தின்படி இலங்கையிலுள்ள நூலகங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் “தேசிய வாசிப்பு மாதத்தினை” மிகவும் சிறப்பான நிகழ்வுகளுடன் கொண்டாடி வருகின்றன.

கோறளைப்பற்று பிரதேச சபையின் பேத்தாழை பொது நூலகமானது ஒவ்வொரு வருடமும் “தேசிய வாசிப்பு மாதத்தினை” பல்வேறு முன்னோடியான நிகழ்வுகளுடன் நடத்தி வருகின்றது. அவ்வகையில் “ #மறுமலர்ச்சிக்காக #வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் 2025ஆம் வருடமும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள், பொது மக்களுக்காக பல்வேறு போட்டி நிகழ்வுகள், கலை, இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள் என்பன நடத்தப்பட்டன.

தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வான...- போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் பேத்தாழை பொது நூலக கேட்போர் கூடத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. நூலக பொறுப்பாளர் திருமதி. புஸ்பா தயாளன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கோறளைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.சு.சுதாகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு.ந.நிமல்ராஜ், சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன் மற்றும் சந்திவெளி பொது நூலகப் பொறுப்பாளர் திரு.ம.பிரகாஷ், தேவபுரம் பொது நூலகப் பொறுப்பாளர் திரு.சி.குகதீசன், வாழைச்சேனை பொது நூலக உத்தியோகத்தர் திருமதி. ஈ.புனிதா ஆகியோருடன் முன்பள்ளி ஆசிரியர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள், விபுலானந்தர் வாசகர் வட்டத்தினர் எனப்பலரும் பங்குபற்றினர்.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு - மங்கல விளக்கேற்றும் வைபத்தினைத் தொடர்ந்து, மௌன இறைவணக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன், பேத்தாழை பொது நூலக கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நூலகத்தின் பொறுப்பாளர் திருமதி. புஸ்பா தயாளன் அவர்கள் தலைமையுரையினையும் வரவேற்புரையினையும் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் அரங்கேறியது. தொடர்ந்து, பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியின் பேச்சு இடம்பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன் அவர்களும், சபையின் கௌரவ உறுப்பினர் திரு.ந.நிமல்ராஜ் அவர்களும் சிறப்புரையாற்றினர். ஒவ்வொரு வருடமும் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பான நிகழ்வுகளுடன் கொண்டாடி வருகின்ற பேத்தாழை பொது நூலக உத்தியோகத்தர்களையும் ஆர்வத்துடன் பங்குற்றுகின்ற மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்துகின்ற பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களையும் அவர்களையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கோறளைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.சு.சுதாகரன் அவர்களுக்கு பேத்தாழை பொது நூலகம் மற்றும் விபுலானந்தர் வாசகர் வட்டத்தினர் இணைந்து “நிலா முற்ற“ நினைவுச் சின்னத்தினை வழங்கிக் கௌரவித்தனர்.

இறுதியாக பேத்தாழை பொது நூலக உத்தியோகத்தர் திருமதி. சசிகலா அருள்ராஜா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற வாழைச்சேனையைச் சேர்ந்த திரு.வா.அருண் அவர்கள் அன்பளிப்புச் செய்திருந்தார். அவர்களுக்கு நூலகத்தின் சார்பிலும் வாசகர்கள் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 #60ஆவது  #நிலா  #முற்றம்பேத்தாழை பொது நூலகத்தின் 60ஆவது “பௌர்ணமி கலை, இலக்கிய ஒன்றுகூடல்”ஐந்தாண்டு நிறைவில் “நிலா முற்ற...
16/02/2026

#60ஆவது #நிலா #முற்றம்
பேத்தாழை பொது நூலகத்தின் 60ஆவது “பௌர்ணமி கலை, இலக்கிய ஒன்றுகூடல்”
ஐந்தாண்டு நிறைவில் “நிலா முற்றம்”
(2026 பெப்ரவரி 01)

இலங்கையின் பொது நூலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதவாறு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற தரம்-2 நூலகமான பேத்தாழை பொது நூலகம் இலங்கையில் டிஜிட்டல் நூலக சேவைகளையும் பல்வேறு பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

அவ்வகையில், உலகத்தமிழ் எழுத்தாளர்கள் முதல் உள்ளுர் எழுத்தாளர்களது படைப்புக்களையும், எழுத்தாளர்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து, பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளுடன் கூடிய “பௌர்ணமி கலை, இலக்கிய நிகழ்வான “நிலா முற்றம்” நிகழ்வினை நடத்தி வருகின்றது.

இம்மாதம்- “நிலா முற்ற”த்தில் 60ஆவது நிகழ்வு அரங்கேறியது! ஐந்தாண்டு நிறைவு நிலா முற்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலை, இலக்கிய நிகழ்வுகளுடன் கடந்த 59 நிலா முற்றங்களிலும் பங்குபற்றிய இலக்கிய ஆர்வலர்களை, நிலா முற்றக் குழுவினருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி பாராட்டுதல் மற்றும் பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்ற 50ஆவது நிலா முற்றத்தில் கலந்து கொண்டிருந்த அப்போது மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றிய திரு.சூ.பார்த்திபன் அவர்கள்! “நிலாமுற்ற” நிகழ்வின் சிறப்பினை உணர்ந்து அதனை இன்னும் சிறப்பாக நடத்துவதற்கான மேடை மற்றும் சவுண்ட் கருவிகளை பெற்றுத்தருவதாக வாக்களித்திருந்தார். கூறியது போலவே உடனடியாக செயற்பட்டு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். 60ஆவது நிலா முற்றத்திற்கு முன்னதாகவே பிரமாண்டமான மேடைக்குரிய உபகரணங்கள் மற்றும் பெரிய ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய பெறுமதி வாய்ந்த சவுண்ட் சிஸ்டம் போன்றவை நூலகத்திற்கு கி்டைக்கப்பெற்றுள்ளன. இதற்காக கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன் அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தார்.

எனவே, அறுபதாவது நிலா முற்றம் - நன்றிபாராட்டும் நிகழ்வாகவும் அமையப் பெற்றது. தற்பொழுது பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் திரு.சூ.பார்த்திபன் அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவருடன் பிரதேச சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.அப்துல்லா ஹாரூன், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு.ந.நிமல்ராஜ், வாழைச்சேனை ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளரான திருமதி. விஜிதா முருகவேள், பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் திரு.க.கதிர்காமநாதன், வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் ஆகியோருடன் பிரான்ஸில் வெளியாகும் “எக்ஸில்” கலை, இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவரும், பிரபல இலக்கிய செயற்பாட்டாளுருமான திருமதி. விஜி மற்றும் கோறளைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த மூத்த, இளைய தலைமுறை எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

வழமையாக நூலக முற்றத்தில் நடைபெற்று வந்த நிலா முற்றம்! மழை காரணமாக நூலகக் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. அதிதிகளை வரவேற்றலுடன் தொடங்கிய நிகழ்வினில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும், சுவாமி விபுலானந்தரின் திருவருவப் படத்திற்கு மலர் மரியாதையும் செலுத்தப்பட்டது. அண்மையில் மறைந்த பேத்தாழை விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினரும் பல்துறை ஆளுமையுமான அமரர். மனோவா அவர்களுடன் சேர்த்து, உயிர்நீத்த கலைஞர்களுக்கான மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து! நூலகப் பொறுப்பாளர் திருமதி. புஸ்பா தயாளன் அவர்களின் தலைமையுரையும் வரவேற்புரையும் நடைபெற்றது. நிகழ்வுகளை விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்களும், நிலா முற்ற விழாக்குழுவினரும் தொகுத்து வழங்கினர். இவ்விழாவில் கவிஞர். யேசுசகாயம் குழுவினரின் நடனங்கள் அரங்கேறி அவையோரை மகிழ்வித்தன.
“நிலாமுற்றத்தின்” தோற்றம் வளர்ச்சி குறித்தும் - ஐந்தாண்டு நிறைவின் போது நிலா முற்ற நிகழ்வினை நடத்துவதற்காக பெறுமதி வாய்ந்த மேடை, சவுண்ட் கருவிகளை பெற்றுத் தந்துள்ள முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.சூ.பார்த்திபன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, “நிலா முற்ற” நிகழ்வின் ஸ்தாபகரும் பேத்தாழை பொது நூலகத்தின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.மரகதம் பிரகாஸ் அவர்கள் உரையாற்றினார்.
இலங்கை பொது நூலக வரலாற்றில் பேத்தாழை பொது நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும், பேத்தாழை பொது நூலகத்தினால் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.அப்துல்லா ஹாரூன் அவர்கள் உரையாற்றினார்.

பேத்தாழை பொதுநூலகத்தின் நவீன தொழினுட்ப செயற்பாடுகளுக்கு வித்திட்டு, நூலகத்தினை டிஜிட்டல் நூலகமாக ஒன்லைன் சேவைகளை ஆரம்பிப்பதற்கு பக்கபலமாக விளங்கியதுடன், ஆரம்ப காலத்தில் பல வருடங்களாக தனிப்பட்ட ரீதியாகவும் மிகுந்த ஆர்வத்துடன் பேத்தாழை பொது நூலகத்தில் கொஹா மென்பொருளை நிறுவி அதனை நூலகத்திற்கேற்றவாறு செம்மைப்படுத்தியதுடன், நூலகத்திற்கான இணையத்தள உருவாக்கத்திலும் உதவி புரிந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகரும் நூலகத்தின் நலன்விரும்பியுமான திரு.என்.ரவிக்குமார் அவர்களது வீடியோ மூலமான வாழ்த்துச் செய்தியும் இடம்பெற்றது.

கடந்த வருடம் தேசிய ரீதியில் அதிக விருதுகளைப் பெற்றுக் கொண்ட பிரதேச சபையாக விளங்குவதுடன், தேசிய ரீதியில் பிரதேச சபை மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட பேத்தாழை பொது நூலகத்தின் நிலா முற்றத்தின் சிறப்பினையும் இந்த நிலாமுற்றத்தின் மூலம் நூலகத்திற்கும் பிரதேசத்திற்கும் கிடைத்துள்ள பெறுமதி வாய்ந்த மேடையுடன் கூடிய சவுண்ட் உபகரணங்களைப் பெற்றுத்தந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் உள்ளுராட்சி உதவி ஆணையாளரும், தற்போது பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராகப் பணிபுரிகின்றவருமான திரு.சூ.பார்த்திபன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து பிரதேச சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
கல்குடா வலயத்தில் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகராக பணிபுரிகின்ற பிரபல தமிழ் பாட ஆசிரியரும், கவிஞருமான எ.த.ஜெயரஞ்சித் அவர்கள் 60 நிலா முற்றங்களை வாழ்த்தி! 60 வரிகளில் கவிமாலை ஒன்றினைச் சமர்ப்பித்தார். பேத்தாழை வீரையடி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுளகு நடனம் பார்ப்போரையும் கேட்போரையும் கவர்ந்தது. சிறுமி ஒருவரின் சினிமா பாடல்களுக்கான நடனம் இளையவர்களின் கைதட்டல்களைப் பெற்றது.

இலக்கியச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான விஜி அவர்கள் “பேத்தாழை பொது நூலகத்தின் ஆரம்ப காலம் முதலான செயற்பாடுகள் பற்றியும் அவற்றில் தலையாக விளங்கும் நிலா முற்றத்தின் சிறப்பு பற்றியும் - எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைக்கும் இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும் பாராட்டிப் பேசினார். தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையினையிட்டு பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திரு.சூ.பார்த்திபன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுடன், பல்வேறு இலக்கிய அம்சங்களுடன் அவரது உரை அமைந்திருந்தது. பேத்தாழை பொது நூலகத்தின் 50ஆவது நிலா முற்றத்தின் பார்வையாளராக கலந்து கொண்ட தன்னை 60ஆவது நிலா முற்றத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள வாய்ப்பினை வழங்கிய இயற்கையையும் இறைவனையும் நன்றி கூர்ந்தார். தொடர்ந்து முன்னேற்றகரமான பணிகளை முன்னெடுத்து வருகின்ற பேத்தாழை பொதுநூலகத்தினையும் அவற்றினை வழிநடத்தி வருகின்ற செயலாளர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் குறிப்பாக பேத்தாழை பொது நூலகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் வளர்ச்சியிலும் உறுதுணையாக விளங்கி வருகின்ற “விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினர்களையும் பாராட்டினார். நிலா முற்றம் இன்னும் வளர்ந்து - பல சாதனைகளைச் செய்ய வேண்டும் எனவும், இதனை விட பெரியதொரு உதவியினை - பணியினை நிலா முற்றத்திற்கு செய்கின்ற வாய்ப்பினை இறைவன் தனக்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

விழாவில் கட்டம் கட்டமாக 59 நிலா முற்ற அரங்கினை அலங்கரித்த உரையாளர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அதிதிகளின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதம அதிதிக்கு பிரதேச சபையின் சார்பாகவும் பேத்தாழை பொது நூலகம் சார்பாகவும் நன்றி பாராட்டி வாழ்த்து மடல் ஒன்றும் வாசிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

நிலா முற்ற உரையாளர்களுடன்! பேத்தாழை பொதுநூலகத்திற்கு பக்கபலமாக விளங்கும் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் பிரதம அதிதியின் கரங்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக, 60ஆவது நிலா முற்றம் வரை - இந்தச் சாதனைப் பயணத்தில் கரம்கோர்த்து நடந்த அனைவருக்கும் நன்றி கூறும் நிகழ்வு இடம்பெற்றது. பேத்தாழை விபுலானந்தர் வாசகர் வட்டம், விபுலானந்தர் கலை, இலக்கிய மன்றம் சார்பில் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் அதிபர் அவர்கள் -நன்றியுரையினை நிகழ்த்தினார்.

60ஆவது நிலா முற்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு அனுசரணையாளர்களாக விளங்கிய திரு. லலித்குமார் மற்றும் திரு.க.யுவராஜன் ஆகியோருக்கும் விபுலானந்தர் வாசகர் வட்டத்தினர், கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியோருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பேத்தாழை பொது நூலகத்தில் வாசகர்களுக்கான   அறிமுகம்.தேசிய நூலகம் மற்றும் UNDP நிறுவனம் ஆகியன இணைந்து 2023 இல் ஆரம்பித்த ந...
15/02/2026

பேத்தாழை பொது நூலகத்தில் வாசகர்களுக்கான அறிமுகம்.

தேசிய நூலகம் மற்றும் UNDP நிறுவனம் ஆகியன இணைந்து 2023 இல் ஆரம்பித்த நூலக தண்ணியக்கமாக்கல் திட்டத்தில் பேத்தாழை பொது நூலகமும் உள்வாங்கப்பட்டதனைத் தொடர்ந்து Laptops, Barcode scanner, Barcode printer உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்கள் நூலகத்திற்கு கையளிக்கப்பட்டு நூலக சேவை தன்னியக்கமாக்கப்பட்டிருந்தது.

குறித்த திட்டத்தினை மேலும் வினைத்திறனானதாக மாற்றுவதற்காக எமது நூலக வாசகர்களுக்கான இலத்திரனியல் வாசகர் அட்டையும் (Digital membership card) இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் முதலாவது அட்டையினை பேத்தாழை பொது நூலகத்தின் முன்னாள் பொறுப்பாளர் ம.பிரகாஷ் அவர்களுக்கு வழங்கி இந் நடைமுறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் மதிப்பிற்குரிய செயலாளர் திரு.சு.ராஜ்கீதன் ஐயா அவர்களுக்கு எமது நூலம் சார்பகவும், விபுலானந்தர...
11/02/2026

கோறளைப்பற்று பிரதேச சபையின் மதிப்பிற்குரிய செயலாளர் திரு.சு.ராஜ்கீதன் ஐயா அவர்களுக்கு எமது நூலம் சார்பகவும், விபுலானந்தர் வாசக்ர் வட்டம் சார்பகவும் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்🌻💐🌼🎁🌼* Rajkeethan Suntharamoorthy

78 ஆவது சுதந்திர தின நிகழ்வு.எமது நாட்டின் 78 ஆவது சுதந்திர தினமான இன்று  எமதூ நூலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய க...
04/02/2026

78 ஆவது சுதந்திர தின நிகழ்வு.

எமது நாட்டின் 78 ஆவது சுதந்திர தினமான இன்று எமதூ நூலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் பேத்தாழை பொது நூலகமும்விபுலானந்தர் வாசகர் வட்டமும் இணைந்து 'பெளர்ணமி தோறும் நடத்தி வருகின்ற ...
31/01/2026

கோறளைப்பற்று பிரதேச சபையின்
பேத்தாழை பொது நூலகமும்
விபுலானந்தர் வாசகர் வட்டமும்
இணைந்து

'பெளர்ணமி தோறும் நடத்தி வருகின்ற கலை, இலக்கிய நிகழ்வான 'நிலா முற்றம்' 60ஆவது நிகழ்வு நாளை (01/02.2026 ) ஞாயிறு மாலை. 6.31க்கு நூலக முற்றத்தில் நடைபெற உள்ளது.

நிலா முற்றம் ஆரம்பிக்கப்பட்டு! ஐந்தாவது ஆண்டு பூர்த்தியடைவதனை முன்னிட்டு- நாளைய நிலா முற்றம் - பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் அரங்கேறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கலை, இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Address

Kalkudah Road, Pethalai
Valaichenai
30400

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Friday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Telephone

+94652258317

Website

https://pethalai.dlp.gov.lk/

Alerts

Be the first to know and let us send you an email when Public Library Pethalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Public Library Pethalai:

Share

Category