Divisional Secretariat Vavuniya

Divisional Secretariat Vavuniya Committed to Service

22/08/2026
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு! 📢மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் – வவுனியா பிரதேச செயலகம்...
22/08/2026

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு! 📢

மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் – வவுனியா பிரதேச செயலகம் இணைந்து நடத்தும்
🎯 வவுனியா பிரதேச தொழிற்சந்தை 2026

📍 இடம்: வவுனியா பிரதேச செயலகம்
📅 திகதி: 24.08.2026 (திங்கட்கிழமை)
⏰ நேரம்: காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

✨ தனியார் துறை வேலைவாய்ப்புகள்
🎓 உயர்கல்விக்கான வழிகாட்டல்கள்
🔧 தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டு வாய்ப்புகள்
💡 சுயதொழில் முயற்சிகளுக்கான ஆலோசனைகள்

வேலை தேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🤝

📌 கொண்டு வர வேண்டியவை: CV / Bio Data, கல்வி மற்றும் தொழில்சார் சான்றிதழ்களின் பிரதிகள், NIC நகல்.

📞 மேலதிக தகவல்களுக்கு: 0773643246

#தொழில்வாய்ப்பு #வேலைவாய்ப்பு

Construction of Drying Floor works Invitation for bids(IFB)Divisional secretariat vavuniya
17/08/2026

Construction of Drying Floor works
Invitation for bids(IFB)
Divisional secretariat vavuniya

 #அர்த்த திட்டம் (Artha Programme) 2026 – முக்கிய அறிவுறுத்தல்கள் #நன்னடத்தை_மற்றும்_சிறுவர்_பராமரிப்பு_சேவைகள்_திணைக்கள...
12/08/2026

#அர்த்த திட்டம் (Artha Programme) 2026 – முக்கிய அறிவுறுத்தல்கள்

#நன்னடத்தை_மற்றும்_சிறுவர்_பராமரிப்பு_சேவைகள்_திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அர்த்த (Artha) திட்டத்தின் கீழ், தீவிர ஆபத்திற்குள்ளாகக்கூடிய பிள்ளைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

#திட்டத்தில்_உள்ளடங்கும்_பிள்ளைகள்
தீவிர ஆபத்திற்குள்ளாகக்கூடிய (High-Risk) பிள்ளைகள்.

#முக்கிய_7_ஆபத்து_காரணிகள்
தீவிர ஆபத்திற்குள்ளான பிள்ளைகளைத் தெரிவு செய்வதற்கான அளவுகோல்கள் (7)*
பராமரிப்புத் திட்டங்களை (Care Plans) தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் வழக்கமான 33 அளவுகோல்களில், அர்த்த திட்டத்திற்காக தேசிய குழு மற்றும் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் *7 சிறப்பு அளவுகோல்களின்* அடிப்படையில் பிள்ளைகள் தெரிவு செய்யப்பட வேண்டும்:
* *பெற்றோரை இழத்தல்:* தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்துள்ளமை.
* *மாற்றுத்திறனாளி பெற்றோர்:* தாய் அல்லது தந்தை மாற்றுத்திறனாளியாக இருப்பதுடன், எஞ்சிய பெற்றோரால் பிள்ளையைப் பராமரிக்க முடியாமல் இருக்கின்றமை.
* *சிறைப்பட்டுள்ள பெற்றோர்:* தாய் அல்லது தந்தை நீண்டகாலமாக சிறையில் இருப்பதுடன், எஞ்சிய பெற்றோரால் பிள்ளையைப் பராமரிக்க முடியாமல் இருக்கின்றமை.
* *மனநலப் பாதிப்புள்ள பெற்றோர்:* தாய் அல்லது தந்தை மனநலப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய பெற்றோரால் பிள்ளையைப் பராமரிக்க முடியாமல் இருக்கின்றமை.
* *மாற்றுத்திறனாளி பிள்ளைகள்:* குடும்பத்தில் உள்ள ஒரு பிள்ளை மாற்றுத்திறனாளியாக இருக்கின்றமை.
* *நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்:* தாய் அல்லது தந்தை நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய பெற்றோரால் பிள்ளையைப் பராமரிக்க முடியாமல் இருக்கின்றமை.
* *வருமான மட்டம்:* குடும்பத்தின் ஒருங்கிணைந்த மாதாந்த வருமானம் *ரூபாய் 30,000 ஐ விடக் குறைவாக* இருக்கின்றமை.

📌 #தகவல்களை_சமர்ப்பிக்கலாம்:
கிராம அலுவலர் (GN), பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் தகவல்களை வழங்கலாம்.

📅 தகவல்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026 ஓகஸ்ட் 15

தகுதியான பிள்ளைகளை அடையாளம் காண்போம் – தேவையான உதவிகளை விரைவாக வழங்குவோம்.

2021.06.16 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில்  முகாமைத்துவ சேவை  உத்தியோகத்தராக தனது  சேவையினை ஆரம்பித்து பின்னர...
11/08/2026

2021.06.16 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக தனது சேவையினை ஆரம்பித்து பின்னர் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக தனது சிறப்பான சேவையினை வழங்கி 2026.08.12 ஆந் திகதி தொடக்கம் வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு (Department of Labour) இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு.N.கஜேந்திரன் அவர்களுக்கு அவரது அர்ப்பணிப்பான மற்றும் உன்னதமான சேவைக்கு எமது பிரதேச மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதுடன், அவரது எதிர்காலம் மனநிறைவுடனும் சிறப்பாகவும் அமைய எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

05/08/2026
🏑 Vavuniya Hockey Championship 2026 🏆📅 திகதி: 01.08.2026🕓 நேரம்: மாலை 04.00 மணி📍 இடம்: மாநகர சபை விளையாட்டு மைதானம், வவு...
31/07/2026

🏑 Vavuniya Hockey Championship 2026 🏆
📅 திகதி: 01.08.2026
🕓 நேரம்: மாலை 04.00 மணி
📍 இடம்: மாநகர சபை விளையாட்டு மைதானம், வவுனியா

🚶🏻‍♂️🤝 நேர்மையான அரச சேவைக்கான நடைபவனி | கிளீன் ஸ்ரீலங்கா – நேர்மைக் கலாசார வாரம் 🇱🇰நேர்மையான, வெளிப்படையான மற்றும் ஊழலற...
28/07/2026

🚶🏻‍♂️🤝 நேர்மையான அரச சேவைக்கான நடைபவனி | கிளீன் ஸ்ரீலங்கா – நேர்மைக் கலாசார வாரம் 🇱🇰

நேர்மையான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற அரச சேவையை உருவாக்கும் தேசிய நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் "கிளீன் ஸ்ரீலங்கா – நேர்மைக் கலாசார வாரம்" நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, நேற்று வவுனியா பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, வவுனியா மாவட்ட செயலக ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம், முப்படையினை சேர்ந்த உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நடைபவனி வவுனியா நகர் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நடைபவனியின் மூலம் ஊழலற்ற நிர்வாகம், நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் அரச சேவையின் உறுதிப்பாடு பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

🤝 "நேர்மையான சேவை – மக்களின் நம்பிக்கை"
🇱🇰 "கிளீன் ஸ்ரீலங்கா – நேர்மைக் கலாசாரத்துடன் புதிய அரச சேவையை நோக்கி!"

#நேர்மைக்கலாசாரம் #வவுனியா_பிரதேச_செயலகம் #நேர்மையான_அரச_சேவை

Address

Vavuniya Town
43000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94242221946

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Vavuniya:

Shortcuts

Share