28/05/2025
நடந்து முடிந்த எட்டியாந்தோட்டை பிரதேச சபை தேர்தலில் நாங்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளுக்கு (915 வாக்குகள்) அமைய நமது சுயேச்சை குழுவுக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தோட்டப்புற மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். தோட்டப்புற மக்களின் அதிகப்படியான வாக்குகளால் இந்த ஆசனம் கிடைக்கப்பெற்றது.
எமக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
ஜனநாயக முறைப்படி கிடைத்த வெற்றியில் இந்த ஆசனம் யாருக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் பிரச்சாரங்களின் போது தலைவரால் (சூரியகுமார்) கூறப்பட்டது, " போனஸ் கிடைத்தால் சுயேட்சை குழுவில் யார் அதிகப்படியான வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கு வழங்கும்" என்று ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, கிடைத்த ஆசனத்தை பதவி பேராசையால் தனது மகனுக்கு (சுமித்திரன்) வழங்க முன் வந்துள்ளார். இதற்கு தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் எமது எதிர்ப்புகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஜனநாயகத்துக்கு முரணான வகையில் பதவியைப் பெற்றுக் கொள்ளும் வழியாகும். தந்தை தனது மகனுக்கு மக்களை ஏமாற்றி பிழைக்கும் வழியை காண்பித்துள்ளார். இந்த ஏமாற்று பேர்வழிகளை நாம் எமது சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும்.
சுயேட்சை குழு கை கோடரி சின்னம் கேகாலை மாவட்டம்