Tamil Foundation

Tamil Foundation Tamil Foundation helps communities through research and programming focused on Tamil education

தமிழ் அறவாரியம் அரசோ கட்சியோ சாரா ஒரு பொதுநல அமைப்பாகும். தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்துவது அறவாரியத்தின் நோக்கமாகும். இந்நோக்கத்தை அடைவதற்காக, ஆய்வுகளையும் செயற்திட்டங்களையும் மேற்கொண்டு, கிடைக்கப்பெற்ற அறிவைக் கல்வியமைச்சு, தமிழ்ப்பள்ளிகள், ஆசிரியர்கள், பள்ளி வாரியங்கள் என தமிழ்க்கல்வியுடன் தொடர்புள்ள அனைவருக்கும் அறவாரியம் பரப்புரை செய்துவருகிறது.

நேற்று தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏறக்குறைய 400 பெற்றோர்கள் பதிவு செய்து ஆர்வத்துடன் க...
06/07/2026

நேற்று தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏறக்குறைய 400 பெற்றோர்கள் பதிவு செய்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

06/07/2026

நேற்று தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏறக்குறைய 400 பெற்றோர்கள் பதிவு செய்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

06/07/2026

சிலாங்கூர் மாநில இம்பாக் திட்டத்தின் மருத்துவ முகாம் நேற்று தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏறக்குறைய 400 பெற்றோர்கள் பதிவு செய்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம் (இம்பாக்) திட்டத்தின் சிலாங்கூர் மாநிலத்திற்கான மருத்துவ முகாம் தாமான் செந்...
06/07/2026

பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம் (இம்பாக்) திட்டத்தின் சிலாங்கூர் மாநிலத்திற்கான மருத்துவ முகாம் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இம்பாக் திட்டத்தில் பங்கெடுத்த பெற்றோர்களும் அவர்கள் குடும்பத்தினரும் இம்முகாமில் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 400 பெற்றோர்கள் பதிவு செய்து ஆர்வத்துடன் கலந்து கொண்டது இந்நிகழ்வின் வெற்றிக்குச் சான்றாக அமைந்தது. கிள்ளான் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களும் தாதியர்களும் தங்களது அர்ப்பணிப்பு மிக்க மருத்துவச் சேவையாலும் அன்பான வழிகாட்டுதலாலும் முகாமிற்குப் பெருமை சேர்த்தனர். மேலும், இரு வழக்கறிஞர்கள் வழங்கிய விழிப்புணர்வு உரைகள் பங்கேற்பாளர்களுக்குச் சட்டம் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தன. இம்முகாமில் தமிழ் அறவாரியத் துணைத் தலைவரும் இம்பாக் திட்டத்தின் இயக்குநர் திரு மதன்ராஜ், உதவித் தலைவர் திரு சுப்ரமணியம், செயலாளர் திரு குகனேஸ்வரன், துணைச் செயலாளரும் இம்பாக் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான திரு கிருஷ்ணன், துணைப் பொருளாளர் திரு புனிதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சிலாங்கூர் மாநில இம்பாக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சுசீலா, சிலாங்கூர் மாநில இம்பாக் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், ஏற்பாட்டுக் குழுவினர், பள்ளி நிர்வாகத்தினர் ஆக்கியோர் இம்முகாம் சிறப்புற நடைபெற பெரும் உழைப்பை வழங்கினர். பிற்பகல் 1.30 மணியளவில் மருத்துவ முகாம் இனிதே நிறைவடைந்தது.

30/06/2026

SJK(T) Connect (tamilschool.org) என்ற சிறப்புமிக்க இணையத் தளம், மலேசியாவில் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளை (SJK(T)) ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் தளமாகும். பள்ளிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் அரிய தகவல் வழங்கும் மையமாக விளங்குகிறது.

இத்தளத்தின் முக்கிய அம்சங்கள்:
🏫 ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும் தனிப்பட்ட பக்கம் – பள்ளியின் இருப்பிடம், புகைப்படங்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் அண்மைய செய்திகள்.
📜 Parliament Watch– நாடாளுமன்றத்தில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பாக இடம்பெறும் விவாதங்களைத் தானாகவே கண்காணித்து, வகைப்படுத்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் எளிமையாகச் சுருக்கமாக வழங்கும் வசதி.
📨 தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த அண்மைய தகவல்கள் மற்றும் முன்னேற்றங்களை உள்ளடக்கிய இலவச மாதாந்திர மின்னஞ்சல் தொகுப்பு.

அனைத்து தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் தங்களது பள்ளிக்கான பக்கத்தைப் பார்வையிட்டு, .edu.my மின்னஞ்சல் முகவரியின் மூலம் உரிமை கோரி, தேவையான தகவல்களைப் புதுப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும், பள்ளியின் புகைப்படங்கள் இல்லாவிட்டால் அவற்றையும் பதிவேற்றலாம். இம்முயற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், தமிழ்ப்பள்ளிகளின் இணையவழி அடையாளத்தையும் தகவல் அணுகலையும் மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காக இத்தகைய பயனுள்ள மற்றும் தொலைநோக்கு முயற்சியை மேற்கொண்ட மலேசியத் தமிழ் அறவாரியத்தின் முன்னாள் தலைவர், திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பயனுள்ள தளத்தைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (PIBG), முன்னாள் மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ்க்கல்வியில் அக்கறை கொண்ட அனைவருடனும் பகிர்ந்து, இம்முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Tamil Foundation Malaysia announces SJK(T) Connect (tamilschool.org), a comprehensive digital platform dedicated to all 528 Tamil National-Type Primary Schools (SJK(T)) in Malaysia.

This platform serves as a valuable resource for schools, educators, parents, alumni, policymakers, and the public by providing:

🏫 A dedicated profile for every SJK(T), featuring its location, photographs, contact information, and latest news.
📜 Parliament Watch, an innovative feature that automatically tracks, classifies, and summarises parliamentary discussions related to Tamil schools in Tamil, English, and Bahasa Melayu.
📨 A complimentary monthly digest highlighting the latest developments and updates across the SJK(T) ecosystem.

We encourage all Headmasters, teachers, and school representatives to visit their respective school pages. Schools may verify and update their information using their .edu.my email accounts, ensuring that the information remains accurate and up to date. Schools are also encouraged to upload photographs to better showcase their institutions. This initiative is provided free of charge and reflects a commendable commitment to strengthening the digital presence and visibility of Tamil schools in Malaysia.

Tamil Foundation Malaysia applauds our former President, Mr. Elanjelian for his vision, dedication, and invaluable contribution to the Tamil education community. We also encourage everyone to explore the platform and share it with Headmasters, teachers, PIBGs, parents, alumni, and all stakeholders who are committed to the continued progress of Tamil education in Malaysia.

Together, let us continue to embrace digital innovation in empowering our schools and preserving the excellence of Tamil education for future generations.

Interactive map and data platform for Malaysia's 528 Tamil schools. Track parliamentary mentions, MP scorecards, and school data.

உலகத் தாய்மொழி நாள் 2026 முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற ஓவியப் போட்டியின் மூன்றாம் நிலை வெற்றியாளரின் ...
25/06/2026

உலகத் தாய்மொழி நாள் 2026 முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற ஓவியப் போட்டியின் மூன்றாம் நிலை வெற்றியாளரின் ஓவியமும் அதன் விளக்கக் காணொளியும்.

மாணவர் பெயர் : தர்ஷனா கார்த்தியாயினி த/பெ சீனிவாசன்
பள்ளி : பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்

உலகத் தாய்மொழி நாள் 2026 முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற ஓவியப் போட்டியின் இரண்டாம் நிலை வெற்றியாளரின் ...
25/06/2026

உலகத் தாய்மொழி நாள் 2026 முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற ஓவியப் போட்டியின் இரண்டாம் நிலை வெற்றியாளரின் ஓவியமும் அதன் விளக்கக் காணொளியும்.

மாணவர் பெயர் : மேஸ்வன் த/பெ தனேஸ்வரன்
பள்ளி : கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி, கடாரம்

Address

8C, Jalan 1/46, Taman Petaling Utama
Petaling Jaya
46150

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Telephone

+601163506533

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Foundation:

Shortcuts

Share