TNTJ Riyadh

TNTJ Riyadh TNTJ ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம். Official page of TNTJ Riyadh Chapter

17/05/2026
🚨 அவசர இரத்ததான உதவி – TNTJ ரியாத் மண்டலம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் :இருதய அறுவை சிகிச்சைக்காக உபைத் மருத்துவமனை...
12/05/2026

🚨 அவசர இரத்ததான உதவி – TNTJ ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் :

இருதய அறுவை சிகிச்சைக்காக உபைத் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தை சேர்ந்த சகோதரர் ஹாரூன் அல் ரஷீத் அவர்களுக்கு அவசரமாக (O+) இரத்தம் தேவைப்படுவதாக அவரது உறவினர்கள் TNTJ ரியாத் மண்டல நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

தகவல் கிடைத்த உடனே, ரியாத் மண்டல நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ இரத்ததான சகோதரர்கள் விரைந்து செயல்பட்டு, தேவையான 2 யூனிட் இரத்தம் உடனடியாக ஏற்பாடு செய்து வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்! 🤲

இந்த உதவியால் நோயாளியின் குடும்பத்தினர் மிகுந்த நெகிழ்ச்சியடைந்து, மனிதநேய உணர்வுடன் உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், இறைவன் அருளால் இதுபோன்ற சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் துஆ செய்தனர்.

சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விரைவில் முழுமையாக குணமடைந்து நலமுடன் திரும்ப அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் மனிதநேயப் பணியில்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம்

📅 12.05.2026

 #புனிதமான_ஹஜ்_மாதத்தில்_ஹாஜிகளின்_நலனுக்காக_சவூதியில்_TNTJ_நடத்திய_148வது_இரத்ததான_முகாம்.!ரியாத்:- “தமிழ்நாடு தவ்ஹீத் ...
08/05/2026

#புனிதமான_ஹஜ்_மாதத்தில்_ஹாஜிகளின்_நலனுக்காக_சவூதியில்_TNTJ_நடத்திய_148வது_இரத்ததான_முகாம்.!

ரியாத்:- “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” மனித நேயம் காக்கும் சமுதாய பணிகளை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியாக செய்து வருகின்றது.
மனிதநேயப் பணிகளில் மணி மகுடமாக திகழும் பணி உயிர்காக்கும் இரத்ததான சேவையும் இதில் ஓர் அங்கமாகும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கப்பட்டது முதல் தமிழகத்தில் இரத்ததானம் வழங்குவதில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முதலிடம் வகிக்கிறது. அதற்காக தமிழக அரசின் பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.

இப்பணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக செய்யப்படுகிறது. சவூதி அரேபியா நாட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக இவ்வருட ஹஜ் பயணிகளுக்கான தேவையை முன்னிறுத்தி நடத்திய 148வது மாபெரும் இரத்ததான முகாம் மே 08, 2026 அன்று ரியாத் கிங் ஃபஹத் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட கிளைகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 77க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். உடல் தகுதி மற்றும் நேர அடிப்படையில் இம்முகாமில் “65 யூனிட்கள்” இரத்ததானம் வழங்கப்பட்டது.

உயிர்காக்கும் உன்னத பனியான இதுபோன்று முகாம்களை மென்மேலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென மருத்துவமனை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. முகாம்கள் மட்டுமல்லாது அறுவை சிகிச்சை போன்ற அவசர காலங்களில் தொடர்பு கொண்டவுடன் உடனடியாக இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்வது, தேவைக்கேற்ப மொபைல் இரத்ததான முகாம்களையும் ரியாத் மண்டலம் சார்பாக நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இதற்காக களப்பணிகள் செய்த “ரியாத் மண்டலத்தின் அனைத்து கிளைகளின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எந்நேரமாயினும் ஓடோடி வந்து தொடர்ச்சியாக இரத்ததானம் செய்யும் இரத்தக் கொடையாளர்களுக்கும்” “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்” சார்பாக இந்நேரத்தில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜசக்கல்லாஹு கைஃரா..

“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32

என்றென்றும் மனிதநேயப் பணியில்...
மருத்துவ அணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்

08.05.2026

| | | | | | | | | |

🩸 இரத்ததான முகாம் – 148வது பதிப்பு🇸🇦 TNTJ ரியாத் மண்டலம்ஏக இறைவனின் திருப்பெயரால்...“ஒரு உயிரைக் காப்பாற்றியவர், எல்லா ம...
03/05/2026

🩸 இரத்ததான முகாம் – 148வது பதிப்பு

🇸🇦 TNTJ ரியாத் மண்டலம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

“ஒரு உயிரைக் காப்பாற்றியவர், எல்லா மனிதர்களையும் காப்பாற்றியவர் போலாவார்”
— திருக்குர்ஆன் 5:32

📢 *மனிதநேய அழைப்பு*

இந்த வருட ஹஜ் பயணிகளின் அவசர மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சார்பாக
கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையுடன் இணைந்து
148வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

📅 நாள்: 08 மே 2026 (வெள்ளிக்கிழமை)

🕘 நேரம்: காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை..

🏥 இடம்: KFMC Blood Bank, ரியாத்

📍 Location: https://goo.gl/maps/6xF97NzkWAzELSnj7

❤️ ஏன் இரத்ததானம் செய்ய வேண்டும்?

• ஒரு தானம் – 3 உயிர்கள் வரை காப்பாற்ற முடியும்
• ஹஜ் பயணிகள் மற்றும் அவசர நோயாளிகளுக்கு உயிர் காக்கும் உதவி
• மனிதநேயத்தை செயலால் வெளிப்படுத்தும் உயர்ந்த வாய்ப்பு

📞 தொடர்புக்கு:

050 063 2353
054 430 3930
058 150 0317

🤝 நாம் ஒன்றிணைந்து உயிர்களை காப்பாற்றுவோம்

“வார்த்தைகளில் அல்ல… மனிதநேயத்தை செயலில் காட்டுவோம்”
TNTJ – Riyadh Zone

🩸 Blood Donation Camp – 148th Edition

🇸🇦 TNTJ Riyadh Zone

In the Name of Allah, The Most Merciful
“Whoever saves one life, it is as if he has saved all of mankind”
— Al Qur’an 5:32

📢 Call for Humanity

Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) Riyadh Zone, in association with King Fahad Medical City (KFMC), is organizing the 148th Mega Blood Donation Campaign.
This campaign is arranged to support Hajj pilgrims and emergency medical needs.

📅 Date: 08 May 2026 (Friday)

🕘 Time: 09:00 AM – 03:00 PM

🏥 Venue: KFMC Blood Bank, Riyadh

📍 Location: https://goo.gl/maps/6xF97NzkWAzELSnj7

❤️ Why donate blood?

• One donation can save up to 3 lives
• Supports Hajj pilgrims & emergency patients
• A meaningful act of humanity

📞 Contact:

050 063 2353
054 430 3930
058 150 0317

🤝 Let’s come together and save lives
“Humanity is not just spoken… it is practiced”

TNTJ Riyadh Zone

| | | | | | | |

🚨 அவசர இரத்ததானம் – TNTJ ரியாத் மண்டலம்ரியாத் :இருதய அறுவை சிகிச்சைக்காக உபைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதமிழ்ந...
12/01/2026

🚨 அவசர இரத்ததானம் – TNTJ ரியாத் மண்டலம்

ரியாத் :
இருதய அறுவை சிகிச்சைக்காக உபைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர் ஷாஹுல் ஹமீது இஸ்மாயில் அவர்களுக்கு
அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக, அவரது உறவினர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டல நிர்வாகத்தை தொடர்பு கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அவருக்குத் தேவையான
3 யூனிட் (O+) இரத்தம் அவசரமாக ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்! 🤲

இது போன்ற மறக்க முடியாத பேருதவிகளை,
இறைவன் உதவியுடன் தொடர்ந்து சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்றும்,
இதற்காக உதவிய அனைத்து சகோதரர்களுக்காகவும்
பிரார்த்திப்பதாக நிர்வாகிகளிடம் அவர் உருக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார்.

சிகிச்சை பெற்று வரும் சகோதரர்
முழுமையாக குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

என்றும் மனிதநேயப் பணியில்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம்
📅 12.01.2026

| | | | | | |

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Riyadh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share