04/06/2025
வணக்கம்!
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் 11வது ஆண்டு விழா, மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், டல்லாஸ் மாநகரில் இரு நாட்கள் நான்கு கட்டங்களாக சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளியில் பயிலும் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது திறமைகள் மற்றும் படைப்பாற்றல்களை மேடையில் திறமையாக வெளிக்காட்டினர்.
இயல், இசை, நாடகம், கிராமியக்கலை, ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, மரபுக்கலை, தற்காப்புக்கலை உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களின் பண்பாடு, மரபு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும், நம் தாய்மொழியின் சிறப்பையும் பார்வையாளர்களிடம் கொண்டு சென்றனர். பாரம்பரியக் கலைகளான பறை, சிலம்பம், அடிமுறை நிகழ்வுகளும் வந்திருந்தவர்களைக் வெகுவாக கவர்ந்தன.
விழாவில் குழுப்பாடல்கள், குழு இசை, நாடகங்கள் – "காலங்கள் கடக்கும் தமிழ்", "சுற்றுச்சூழல் பாதுகாப்பு", "சோழர்களின் பெருமை", "பெண்மையின் மகிமை" உள்ளிட்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அரங்கேறின. கரகாட்டம், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், கோலாட்டம், விவாத மேடை, குட்டிப் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மாணவர்களால் அருமையாக நடத்தப்பட்டன.
அலைபேசியின் பயன்பாடு, தமிழ்நிலத்தின் ஐந்திணை ஆட்டங்கள், ஊர்த் திருவிழா/தேர்த்திருவிழா போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
விழாவில், உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்று மாணவர்களை உற்சாகப் படுத்தி பாராட்டினர்.
பிப்ரவரியில் நடைபெற்ற "தமிழோடு விளையாடு" போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு—ஆத்திச்சூடி, பேச்சுப்போட்டி, முப்பரிமாணம், திருக்குறள் ஒப்புவித்தல், வார்த்தை உருவாக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவையெல்லாம் முழுமையாக 8-ம் வகுப்பு மாணவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது என்பது விழாவின் ஒரு முக்கிய சிறப்பாகும்.
4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் மற்றும் பார்வையாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. விழாவை மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்குழு வழிகாட்டுதல்களுடன், 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாக நடத்தினர்.
Greetings!
The 11th Annual Celebration of the Metroplex Tamil Academy was held in Dallas on March 29 and 30 over two days and four sessions, with great success. More than 1,200 students from the Tamil schools showcased their talents and creativity impressively on stage.
Over 100 programs were presented—including literature, music, drama, folk arts, Oyilattam, Villu Paatu, traditional arts, and martial arts—highlighting the richness of Tamil culture, heritage, and traditions. Traditional art forms such as Parai, Silambam, and Adimurai captivated the audience.
The stage came alive with group songs, instrumental performances, and plays with compelling themes such as “The Journey of the Tamil Language Through Time,” “Environmental Conservation,” “The Glory of the Cholas,” and “Celebrating Womanhood.” Students also performed Karagattam, folk dance, Bharatanatyam, Kolattam, debates, and children’s panel discussions (kutti pattimandram) with great enthusiasm and skill.
Events like the responsible use of mobile phones, performances based on the five Tamil landscapes (Ainthinai), and depictions of temple chariot festivals impressed and amazed the audience.
Local dignitaries participated in the celebration, offering words of encouragement and appreciation to the students.
Winners of the “Thmizhodu Volaiyaadu” competitions held in February were awarded prizes in categories such as Aathichudi recitation, speech, 3D presentation, Thirukkural recitation, and word-building.
A special highlight of the event was that the entire show was emceed by graduating students of MTA.
Meals were served to all the 4,000 plus attendees, including students, parents, volunteers and guests. The entire event was meticulously planned and executed by over 200 volunteers with the guidance’s of the Metroplex Tamil Academy’s Executive Committee and received widespread appreciation.