24/06/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (24.6.2026) மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாண்புமிகு செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌ.தியாகராஜன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் திருமதி. ச.ப.கார்த்திகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. டாக்டர் எம் வீரப்பன், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால். இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர்கள் திருமதி.வ.மாலதி, திரு.ம.கணேஷ் குமார், சி.எம்.டி.ஏ. கண்காணிப்புப் பொறியாளர் திரு.பாலமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.