26/09/2026
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் திரு. கு. ப. கிருஷ்ணன் அவர்கள் வாரியத் தலைமை அலுவலகத்தில் 26.09.2026 அன்று பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள திட்டப்பகுதிகளின் வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கரூர் வைஸ்யா வங்கியின் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பிலான சூரியசக்தியுடன் கூடிய தள்ளுவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வாரிய மேலாண்மை இயக்குநர் திருமதி பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., வாரிய நிதி ஆலோசகர் திரு.த.தங்கராஜ், வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.பி. வீரவாஞ்சிநாதன், வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் திரு. ஜே. அ. நிர்மல் ராஜ், கரூர் வைஸ்யா வங்கியின் நிறுவன தொடர்பு மற்றும் நிறுவன சமூக பொறுப்பு பிரிவின் தலைவர் திருமதி நதியா மாலி, நேடிவ் மெடிகேர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.ஏ.எஸ்.சங்கரநாராயணன் மற்றும் வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#குடிசைஇல்லாதமிழ்நாடு