28/08/2026
🌿✨ **TAMPCOL இந்திய மருத்துவ ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம் திறப்பு விழா** ✨🌿
📅 **28.08.2026 | சென்னை**
முழுமையான நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பு சார்ந்த சுகாதாரப் பராமரிப்பை ஊக்குவிக்கும் முக்கியமான முன்னெடுப்பாக, **சென்னை – அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில்** அமைக்கப்பட்டுள்ள **TAMPCOL இந்திய மருத்துவ ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம்** இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நல்வாழ்வு மையத்தை **தமிழ்நாடு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். கே. ஜி. அருண்ராஜ்** அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் **மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர்**, மூத்த அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
🌱 **TAMPCOL இந்திய மருத்துவ ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம்**, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான **சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி** ஆகியவற்றுடன் **யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தையும்** ஒருங்கிணைத்து, முழுமையான உடல் மற்றும் மனநல நல்வாழ்வை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது.
🌿✨ **TAMPCOL INDIAN MEDICINE HOLISTIC WELLNESS CENTRE INAUGURATED** ✨🌿
📅 **28.08.2026 | Chennai**
A significant step towards promoting holistic wellness and preventive healthcare was marked today with the inauguration of the **TAMPCOL Indian Medicine Holistic Wellness Centre** at **Arignar Anna Government Hospital of Indian Medicine, Arumbakkam, Chennai – 600 106**.
The Centre was inaugurated by the **Hon’ble Health Minister of Tamil Nadu, Dr. K. G. Arunraj**, in the gracious presence of the **Health Secretary and the Director of Indian Medicine and Homoeopathy**, along with senior officials, medical professionals, faculty members, students and other distinguished guests.
🌱 The **TAMPCOL Indian Medicine Holistic Wellness Centre** brings together the traditional systems of **Siddha, Ayurveda and Unani**, along with **Yoga & Naturopathy**, offering a holistic approach to health and well-being.