30/05/2026
“முத்தமிழ் அறிஞர்” கலைஞரின் 103 வது பிறந்த நாள் விழாவும் “கொள்கை குன்று” S J சாதிக் பாட்சாவின் 99 வது ஆண்டு பிறந்த நாள் விழாவும் பகரைன் NRTIA சார்பில் 29-5-2026 வெள்ளிக்கிழமை மாலை சிறப்புடன் கொண்டாடப்பட்டது. விழாவில் பல சிறப்புரைகளும் சிறுவர் சிறுமியரின் வாழ்த்துரைகளும் இடம் பெற்றன. கலைஞர் தமிழ் சமுதாயத்தின் நலனுக்காக கொண்டு வந்த பல திட்டங்கள் குறிப்பாக பெண்கள் சொத்துரிமை, வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சட்டம் (2011) ஆகியவை பற்றி விரிவாக பேசப்பட்டன. சிறுவர் சிறுமியர் கலைஞரின் தமிழ் பற்று, அவரின் பொன்மொழிகள், அவரைப்பற்றிய கவிதைகளை எளிய தமிழில் இனிமையாக உரையாற்றினர்.
கழகத்தின் மேனாள் பொருளாளரும் (17 ஆண்டுகள்) அண்ணா மற்றும் கலைஞருடன் மூன்று முறை அமைச்சராக இருந்தவருமான கழகத்தின் “கொள்கை குன்று “ என்று அறியப்படும் சாதிக் பாட்சா அவர்கள் கழகத்துக்கு ஆற்றிய பணிகள் பற்றி கழக முன்னோடிகள் எடுத்துரைத்தனர்.
விழாவில் மாற்று கட்சியினர் கழகத்தில் இணைந்த நிகழ்வும் இடம் பெற்றது.
அறுசுவை உணவுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.
M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi எம்.எம்.அப்துல்லா M M Abdulla TRB Rajaa Anbil Mahesh Poyyamozhi DMKNRIWing Dr. Kalanidhi Veeraswamy Parithi ElamSurithi S M Nasar