CPI ML Red Star Tamil Nadu

Call Directions Website Contact the organization

CPI ML Red Star Tamil Nadu சிபிஐ (எம் எல்) ரெட்ஸ்டார் தமிழ் நாடு ?

07/11/2026

அக்டோபர் புரட்சியை நினைவுகூர்வோம்!

1917 நவம்பர் 7 அன்று நிகழ்ந்த மாபெரும் அக்டோபர் புரட்சியும், லெனின் தலைமையில் சோவியத் சோசலிசக் குடியரசு நிறுவப்பட்டதும், சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் (ICM) மிக முக்கியமான மூலயுத்தி மைல்கற்களில் ஒன்றாகும். அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து, 1919-இல் அமைக்கப்பட்ட கொமின்டர்னின் (கம்யூனிஸ்ட் அகிலம்) முன்முயற்சியின் கீழும், பின்னர் 1920-இல் கொமின்டர்னின் இரண்டாவது காங்கிரசில் ஏற்கப்பட்ட “தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட மக்களே, ஒன்றுபடுங்கள்” என்ற அறைகூவலின் துணையுடனும், உலகெங்கும் உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏகாதிபத்திய நாடுகளில் சோசலிசப் புரட்சியும், சார்பு நிலையிலிருந்த காலனிய, அரைக்காலனிய நாடுகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சியும் உலகப் புரட்சியின் இரு நீரோட்டங்களாக அமைந்தன. காலப்போக்கில் சீனப் புரட்சி உட்பட பல முன்னேற்றங்களும் நிகழ்ந்தன.
எனினும், இன்றைய நவதாராளவாத-நவ-பாசிச உலகச் சூழலில், பாலஸ்தீனத்திலும் ஈரானிலும் நடப்பது போன்ற இனப்படுகொலைகள், போர்கள் மூலம் ஏகாதிபத்தியம்/உலகளாவிய கார்ப்பரேட் மூலதனம் உலக மக்கள் மீது இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த வேளையில், கம்யூனிஸ்ட் இயக்கம் பல கருத்தியல்-அரசியல் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிராக எழுச்சி பெற்று வந்தாலும், அவர்களுக்குத் தலைமை தாங்குவதற்கான அரசியல் -அமைப்பு ரீதியான முன்முயற்சி புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளிடம் உலக அளவில் இல்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, நவதாராளவாத கார்ப்பரேட்டியத்திற்கு எந்த அரசியல் மாற்றும் இல்லாத சீர்திருத்தவாதக் கட்சிகளும், நவதாராளவாத கார்ப்பரேட் மூலதனத்தின் வக்காலத்துக்காரர்களும் ஆட்சிக்கு வருவதற்கு இது வழிவகுக்கிறது.
இந்தப் பின்னணியில், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடும், மிகவும் ஒடுக்கப்பட்ட, மிகக் கடுமையாகச் சுரண்டப்படும் நாடுகளில் ஒன்றுமான இந்தியா, உலகின் மிகப்பெரிய, மிக நீண்டகாலமாக இயங்கிவரும் பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாசிசத்தின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்கும் நிலையில், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான “முழு வறியவர்கள்” (absolute poor) வாழும் நாடாகவும் இந்தியா உள்ளது. ஆர்எஸ்எஸ்-இன் பெரும்பான்மைவாத இந்து ராஷ்டிரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மதச் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், இலக்கு வைக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, வேண்டுமென்றே தாக்கப்படுகின்றனர்; SIR (வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்) உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் அவர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும், குடியுரிமையைக் கூட மறுப்பதற்கும் முழுவீச்சில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தலித்துகளையும் பெண்களையும் மனிதரினும் கீழானவர்களாகக் கருதும், ஆர்எஸ்எஸ்-இன் கருத்தியல் வழிகாட்டியான மனுஸ்மிருதியை, அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக நீதிமன்றங்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டன. அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பும் தன்மையும் கூடச் சிதைக்கப்படுகின்றன. அரசமைப்பு, நீதித்துறை, சட்ட, நிர்வாக நிறுவனங்கள் அனைத்தும் காவி மயமாக்கப்பட்டுள்ளன. பாசிச ஆட்சியின் கீழ் பெரும்பான்மைவாதத்தின் கருவியாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு வழக்கமான எடுத்துக்காட்டு.
ஆக, இன்று நாம் அக்டோபர் புரட்சியை நினைவுகூரும் வேளையில், இந்தியா உட்பட உலகம் ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. உலகமயமாக்கப்பட்ட கார்ப்பரேட்-நிதி மூலதனத்தால் தாங்கிப் பிடிக்கப்படும் தீவிர வலதுசாரி நவ-பாசிசம், சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் தனது இறுக்கமான பிடியைக் கொண்டுள்ளது. 21-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்தையும் பாசிசத்தையும் உலக அளவிலும் இந்தியாவிலும் பருண்மையாக மதிப்பிடும் திறன் கொண்டிருந்தால் மட்டுமே கம்யூனிஸ்டுகள் தங்கள் பங்கை ஆற்ற முடியும். எனவே, அக்டோபர் புரட்சியை நினைவுகூரும் அதே வேளையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியம், பாசிசம் குறித்துக் கருத்தியல் தெளிவு பெறுவதும், அதற்கேற்ப அரசியல் நடைமுறையை வளர்த்தெடுப்பதும் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். லெனின் காலத்துடன் ஒப்பிடும்போது, 21-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியமும் நிதி மூலதனமும் பல பண்புரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன என்பது உண்மையே. இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தின் பழைய செவ்வியல் பாசிசத்துடன் ஒப்பிடும்போது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பாசிசம் அல்லது நவ-பாசிசத்தின் நிலையும் அவ்வாறே. எந்திரத்தனமான, ஒரே வார்ப்பில் அமைந்த, அல்லது “அப்படியே நகலெடுக்கும்” அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, நவதாராளவாத ஏகாதிபத்தியம், நவ-பாசிசம் ஆகிய இரண்டையும், பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப பருண்மையான ஆய்வு தேவைப்படும் மிகச் சிக்கலானவையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அக்டோபர் புரட்சியை நிறைவேற்றுவதில் லெனின் பின்பற்றிய வழிமுறை இதுவே. மாபெரும் அக்டோபர் புரட்சியை நினைவுகூரும் இன்று, கம்யூனிஸ்டுகள் முன் உள்ள மிக முக்கியமான கடமையும் இதுவே!

பிஜே ஜேம்ஸ்
பொதுச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய-லெனினிய) ரெட் ஸ்டார்

09/10/2026
கர்நாடகா மாநில சமூக சுகாதார அலுவலர்கள் பணி நிரந்தரம் கோரி நடைப்பயணம்! கர்நாடக மாநில சமூக சுகாதார அலுவலர்கள் சங்கத்தினர் ...
29/09/2026

கர்நாடகா மாநில சமூக சுகாதார அலுவலர்கள் பணி நிரந்தரம் கோரி நடைப்பயணம்!

கர்நாடக மாநில சமூக சுகாதார அலுவலர்கள் சங்கத்தினர் (TUCI) தங்களின் கோரிகையை வலியுறுத்தி தும்கூரிலிருந்து - பெங்களூரு வரையிலான 70கி.மீ நடை பயணம்..

ஒப்பந்தத் தொழிலாளர் முறை கூடாது
- அனைத்து சமூக சுகாதார அலுவலர்களையும் (CHOs) பணி நிரந்தரம் செய்க!
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள இந்த நடைப்பயணத்தை TUCI பொதுச்செயலாளர் தோழர் மனசையா துவக்கி வைத்து சங்க உறுப்பினர்களுடன் இணைந்து அவரும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்..

சிபிஐ (எம்.எல்) ரெட் ஸ்டார் 13 வது‌ கட்சிப் பேராயம் 16- 20 செப்டம்பர் 2026 மக்தூம் மொகிதீன் நகர் (பொது பூங்கா) ராய்ச்சூர...
12/09/2026

சிபிஐ (எம்.எல்) ரெட் ஸ்டார்
13 வது‌ கட்சிப் பேராயம்
16- 20 செப்டம்பர் 2026

மக்தூம் மொகிதீன் நகர் (பொது பூங்கா) ராய்ச்சூர் கர்நாடகா

தொடக்க அமர்வு:
16 செப்டம்பர் 2026 காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்: தோழர் சாரு மஜும்தார் அரங்கம் (பண்டிட் சித்தராம் ஜம்பலதின்னி ரங்க மந்திர்)

வரவேற்புரை: தோழர் ராகவேந்திர குஸ்தகி, தலைவர், வரவேற்புக் குழு

தொடக்கவுரை:
தோழர் பி. ஜே. ஜேம்ஸ்,
பொதுச் செயலாளர்,
சிபிஐ (எம் எல்) ரெட் ஸ்டார்

தலைமை: தோழர் ஆர். மனசய்யா, பொது ஒருங்கிணைப்பாளர், வரவேற்புக் குழு

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தோழமைக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும், வர்க்க-மக்கள் அமைப்புகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் உரையாற்றுவார்கள்.

தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட மக்களே - ஒன்றுபடுவீர்!

சிபிஐ (எம்.எல்) ரெட் ஸ்டார் 13 வது‌ கட்சிப் பேராயம் 16- 20 செப்டம்பர் 2026 தோழர்கள் சிவராம் - சர்மிஸ்தா ஹால் (டாக்டர் பி...
10/09/2026

சிபிஐ (எம்.எல்) ரெட் ஸ்டார்
13 வது‌ கட்சிப் பேராயம்
16- 20 செப்டம்பர் 2026

தோழர்கள் சிவராம் - சர்மிஸ்தா ஹால் (டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அரங்கம்)

மக்தூம் மொகிதீன் நகர் (பொது பூங்கா) ராய்ச்சூர் கர்நாடகா

கட்சி பேராயத்தை ஆதரிக்கவும்

கட்சி வங்கி கணக்கு விவரங்கள்

Account Name: Communist Party of India Marxist Leninist Red Star
Bank: Union Bank
Account #: 510101002779667
IFSC: UBIN0913120
Current Account
Branch: Nawada Branch
New Delhi, India

UPI ID: cpimlredstar@unionbank

GPay Number: 8714336875

தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட மக்களே - ஒன்றுபடுவீர்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ரெட் ஸ்டார்13-வது கட்சி பேராயம்16 - 20 செப்டம்பர் 2026மக்தூம் மொஹிய...
06/09/2026

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ரெட் ஸ்டார்
13-வது கட்சி பேராயம்
16 - 20 செப்டம்பர் 2026

மக்தூம் மொஹியுதீன் நகர் (பொதுப் பூங்கா), ராய்ச்சூர், கர்நாடகா

தொடக்க அமர்வு: 16 செப்டம்பர் 2026, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

தோழர் சாரு மஜும்தார் அரங்கம் (பண்டிட் சித்தராம் ஜம்பலதின்னி ரங்க மந்திர்)

பிரதிநிதிகள் மாநாடு: 17 - 20 செப்டம்பர் 2026

தோழர்கள் சிவராம் - ஷர்மிஸ்தா அரங்கம்(டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கருத்தரங்க கூடம்)

சர்வதேசக் கருத்தரங்கம்: 17 செப்டம்பர் 2026, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

ஏகாதிபத்திய அதிகார சமநிலையில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம்

தோழர்கள் சிவராம் - ஷர்மிஸ்தா அரங்கம்(டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கருத்தரங்க கூடம்)

அகில இந்தியக் கருத்தரங்கம்: 18 செப்டம்பர் 2026, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

ஆர்.எஸ்.எஸ். பாசிசத்தை வீழ்த்துவதற்கான பணி

கௌரி லங்கேஷ் அரங்கம் (பண்டிட் சித்தராம் ஜம்பலதின்னி ரங்க மந்திர்)

அகில இந்திய கருத்தரங்கம்: 19 செப்டம்பர் 2026, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

சாதி ஒழிப்பிற்கான கண்ணோட்டம்

குரு பசவண்ணா அரங்கம் (பண்டிட் சித்தராம் ஜம்பலதின்னி ரங்க மந்திர்)

15 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள்; முன்னணி முற்போக்கு மற்றும் பாசிச-எதிர்ப்புச் சிந்தனையாளர்கள், நாட்டின் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் அரசியல் செயல்பாட்டாளர்கள் இதில் பங்கேற்பார்கள்.

தொழிலாளர்களே மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களே, ஒன்றுபடுங்கள்!

தொடர்புக்கு:
ஆர். மனசய்யா, பொது ஒருங்கிணைப்பாளர்,
வரவேற்புக் குழு: 9880930683

எம். கங்காதர், கர்நாடக மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ரெட் ஸ்டார்: 9880152070

சி பி ஐ (மா லெ) ரெட் ஸ்டார்13-வது கட்சி பேராயம்16 - 20 செப்டம்பர் 2026மக்தூம் மொஹியுதீன் நகர் (பொதுப் பூங்கா), ராய்ச்சூர...
02/09/2026

சி பி ஐ (மா லெ) ரெட் ஸ்டார்
13-வது கட்சி பேராயம்
16 - 20 செப்டம்பர் 2026

மக்தூம் மொஹியுதீன் நகர் (பொதுப் பூங்கா), ராய்ச்சூர், கர்நாடகா

அகில இந்தியக் கருத்தரங்கம்:
18 செப்டம்பர் 2026, மாலை 05.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை

இடம்: கௌரி லங்கேஷ் அரங்கம் (பண்டிட் சித்தராம் ஜம்பலதின்னி ரங்க மந்திர்)

தலைப்பு: ஆர்.எஸ்.எஸ். (RSS) பாசிசத்தை வீழ்த்துவதற்கான பணிகள் குறித்து!

தொடக்க உரை:
டாக்டர் எஸ்.க்யூ.ஆர். இலியாஸ், தேசியத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா (Welfare Party of India)

சிறப்புரை:
பேராசிரியர் கே.எஸ். பகவான், புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் மற்றும் அறிஞர்

நிலைப்பாட்டு அறிக்கை:
தோழர் கபீர்,
அரசியல் தலைமைக்குழு (PB) உறுப்பினர், CPI (ML) ரெட் ஸ்டார்

நெறியாளர்:
தோழர் துஹின், அரசியல் தலைமைக்குழு (PB) உறுப்பினர், CPI (ML) ரெட் ஸ்டார்

பிற பேச்சாளர்கள்:

அருண் மாஜி, மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம், புது தில்லி

ஸ்ரீ கோரனேஷ்வர சுவாமி,
ஸ்ரீ தொண்டாட் சித்தலிங்கேஷ்வர அனுபவ மண்டபம், அலந்தா, கல்புர்கி

பண்டே தம்ம தீப் தேவனம் பிரியா, பிரியதர்ஷினி புத்த விகார், பீதர்

ஆர்.எஸ்.எஸ். பாசிசத்தை எதிர்த்து வீழ்த்துவோம்

இஸ்லாமோபோபியாவை (இஸ்லாமிய வெறுப்புணர்வை) எதிர்த்து வீழ்த்துவோம்

தொடர்புக்கு:
ஆர். மனசய்யா,
பொது ஒருங்கிணைப்பாளர், வரவேற்புக் குழு: 9880930683

எம். கங்காதர், கர்நாடக மாநிலச் செயலாளர், சி பி ஐ(மா லெ) ரெட் ஸ்டார்: 9880152070

சிபிஐ (எம்.எல்) ரெட் ஸ்டார் 13 வது‌ கட்சிப் பேராயம் 16- 20 செப்டம்பர் 2026 மக்தூம் மொகிதீன் நகர் (பொது பூங்கா) ராய்ச்சூர...
31/08/2026

சிபிஐ (எம்.எல்) ரெட் ஸ்டார்
13 வது‌ கட்சிப் பேராயம்
16- 20 செப்டம்பர் 2026

மக்தூம் மொகிதீன் நகர் (பொது பூங்கா) ராய்ச்சூர் கர்நாடகா

அகில இந்திய கருத்தரங்கு:
19 செப்டம்பர் 2026
மாலை 05.30 முதல் இரவு 08.30 வரை

குரு பசவண்ணா மண்டபத்தில் (பண்டிட் சித்தாராம் ஜம்பலாதினி ரங்க மந்திர்)

தலைப்பு: சாதி ஒழிப்பு முன்னெடுப்பின் அவசியம்!

முக்கிய உரை:
தோழர். சங்கர், PB உறுப்பினர்,
CPI (ML) ரெட் ஸ்டார்

மதிப்பீட்டாளர்:
தோழர். விஜய் குமார், PB உறுப்பினர், CPI (ML) ரெட் ஸ்டார்

தோழர். பகதூர், தலித் முக்தி மோர்ச்சா, நேபாளம்

திரு. கொட்டிகனஹள்ளி ராமய்யா, மூத்த கன்னட எழுத்தாளர் மற்றும் அறிஞர்

அருண் மாஜி, மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம், புது தில்லி

எஸ்.பாலன், மூத்த வழக்கறிஞர், கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு

முடிவுரை:
தோழர். ஆர் மனசய்யா, அரசியல் குழு உறுப்பினர், சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார்

மனிதாபிமானமற்ற சாதிய அமைப்பை அழித்தொழிப்பீர்!

தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட மக்களே - ஒன்றுபடுவீர்!

தொடர்பு:
ஆர் மனசய்யா, ஒருங்கிணைப்பாளர்,
வரவேற்புக் குழு: 9880930683

எம் கங்காதர், கர்நாடக மாநில செயலாளர், சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் : 9880152070

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when CPI ML Red Star Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPI ML Red Star Tamil Nadu:

Shortcuts

Share