14/11/2026
"தமிழ்நாடு உருவாவதற்கும், தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்படுவதற்கும் அடிப்படையாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்!" — இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முன்வைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்.
இடதுசாரிகளின் கூட்டு அறைகூவல் - வெளியீட்டு (10.11.2026) நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றினார். அப்போது, “பல வரலாற்று உண்மைகள் மறைக்கப்படும் இக்காலத்தில், சில முக்கியத் தரவுகளை நாம் நினைவுகூர வேண்டியுள்ளது:
🔴 மொழிவாரி மாநிலப் போராட்டம்: சென்னை மாகாணமாக இருந்தபோதே கேரளா, விசாலாந்திரா, தமிழ்நாடு ஆகிய மொழிவாரி மாநிலங்கள் அமைய நீடித்த போராட்டம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள்.
🔴 1942-லேயே 'தமிழ்நாடு': 1968 ஜூலை 1-ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, 1942-ஆம் ஆண்டிலேயே 'தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்' எனப் பெயர் சூட்டி இயக்கம் கண்டவர்கள் கம்யூனிஸ்டுகள்.
🔴 பாரதியின் முழக்கம்: அரசியல் இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே 'செந்தமிழ்நாடு' என முழங்கியவர் மகாகவி பாரதி. திராவிட இயக்கங்கள் 1963 வரை 'திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்த காலத்திலேயே, தமிழ்நாட்டிற்காகப் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள்.
🔴 தியாக வரலாறு: மக்களுக்காகத் தங்களையே அர்ப்பணித்து, தமிழ்நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தியாக வரலாறு படைத்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்.” என்று தோழர் பெ.ச்ணமுகம் எடுத்துரைத்தார்.
#மொழிவாரிமாநிலம் #வரலாறு #கம்யூனிஸ்ட்