CPIML Liberation, Tamil Nadu

CPIML Liberation, Tamil Nadu politics of revolutionary communists in Tamil Nadu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), மாநில அலுவலகம், 3/254 B, ஜீவா தெரு, வண்டலூர், சென்னை - 600048

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி இடதுசாரிகள் அக்டோபர் -01-2026 கண்டன ஆர்ப்பாட்டம்.... இந்திய...
26/09/2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி இடதுசாரிகள் அக்டோபர் -01-2026 கண்டன ஆர்ப்பாட்டம்....

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலையின் மாநிலச்செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் 26.09.2026 அன்று விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி அக்டோபர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடந்த மிகப்பெரிய சதியை, அதிகார அத்துமீறலை, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய புலனாய்வு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகவியலாளர் ரித்திகா சோப்ரா இந்தப் புலனாய்வை மேற்கொண்டு உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டாக ஒருமனதாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். இணக்கம் காண முடியாத பிரச்சினைகளில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற கோட்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையர் அப்பட்டமாக மீறி உள்ளார்.

அவரது விருப்பப்படி, மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும், எதிர்ப்பையும் நிரகாரித்து, சர்வாதிகாரப்போக்கோடு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறைகளை சீர்குலைத்துள்ளார் என்ற உண்மை தற்போது வெளி வந்துள்ளது.

நியாயமான தேர்தல் நடைமுறைகளை நிலைநிறுத்தவும், வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாக்கவும் தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்துவும், விவேக் ஜோஷியும், கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்ன உண்மை வெளிப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), வாக்காளர் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் “சட்டவிரோதமான”, “அனுமதியற்ற” மாற்றங்கள் செய்தல் மற்றும் தேர்தல் வாக்காளர் பட்டியல் மென்பொருளை மையப்படுத்துதல் உள்ளிட்ட முடிவுகளுக்கு அவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான கட்டுப்பாடுகள் மையப்படுத்தப்படுவது குறித்து, இரண்டு தேர்தல் ஆணையர்களும் மத்திய அமைச்சரவை செயலாளரிடமும் முறையிட்டுள்ளனர்.

இதன் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகார அத்துமீறல் ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டுவரபட்டும், அது கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபணைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய ஆளும் கட்சியான பாஜக, தங்களுக்கு ஆதரவானவர்களை மட்டும் வாக்காளர்களாகத் நீடிக்க தேர்தல் ஆணையம் மூலம் அனுமதிப்பதும், அதற்காக தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றுவதும் சுதந்திரமான தேர்தல் என்பதை அர்த்தமிழக்க செய்து விட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மையக் கருவியாக செயல்பட்டுள்ளார்.

இதன் மூலம் அரசியலமைப்புச் சட்ட ரீதியான ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. அவர் இனியும் அந்தப் பதவியில் தொடர்வதற்கு முற்றிலும் தகுதியற்றவராகி விட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவுகளையும், அவை எடுக்கப்பட்ட விதத்தையும் உச்சநீதிமன்றம் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த நெருக்கடியை, 2023ஆம் ஆண்டு பாஜக அரசு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையில் செய்த மாற்றங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், 2023 மூலம் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகப் பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

அந்த மாற்றம் ஜனநாயக நிறுவனமான தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையை பலவீனப்படுத்திவிட்டது. ஒன்றிய ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாற வழிவகுத்துவிட்டது. இந்த மாற்றம் ரத்து செய்யப்பட்டு, பழைய முறையே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு மிகவும் தெளிவான ஒன்றாகும். வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பதற்கான உரிமையினையும், அச்சமின்றி வாக்களிக்கும் வாய்ப்பையும் பாதுகாத்து உறுதி செய்வதே அதன் முதன்மை கடமையாகும். தேர்தல் ஆணையம் எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கடமையை கைவிடக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நடத்தியமைக்கும், சீர்குலைத்தமைக்கும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்.

உடனடியாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை வலியுறுத்துகின்றன.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 01.10.2026 வியாழக்கிழமை அன்று இடதுசாரி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நாடு தழுவிய இந்தப் போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். - இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை சார்பில் விடப்பட்டுள்ள கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

CPIM Tamilnadu CPI Tamilnadu CPIML Liberation, Tamil Nadu

25/09/2026

#ஞானேஷ்_குமாரை_கைது_செய்யக்_கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம்.

✅ஓட்டுத் திருட்டு, தேச துரோகம்

தோழர் தீபங்கர் பட்டாச்சார்யா, யோகேந்திர யாதவ், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், AISA நேஹா, அஞ்சலி பரத்வாஜ், AIKM புருஷோத்தம் ஷர்மா, AICCTU ராஜீவ் திம்ரி, ரவி ராய் மற்றும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள்
டெல்லி காவல்துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

#எதிர்ப்பு_தொடரும்.

24/09/2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-விடுதலை ஆகிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினர்;

Communist Party of India -Marxist Leninist- Liberation CPIML பொதுச்செயலாளர் தோழர்.திபங்கர் உரை.....

 #தலைமைத்_தேர்தல்_ஆணையர்_பதவிநீக்கம்_செய்யப்பட_வேண்டும்!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்ச...
24/09/2026

#தலைமைத்_தேர்தல்_ஆணையர்_பதவிநீக்கம்_செய்யப்பட_வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-விடுதலை ஆகிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினர்; தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

#கூட்டறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-விடுதலை

செப்டம்பர் 24, 2026

*தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்!*

*SIR-ஐ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கையை நிறுத்துக!*

*தவறாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் வாக்குரிமையை மீட்டெடுத்திடுக!*

*தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்திடுக!*

செப்டம்பர் 23 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியில், மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை, தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தலைமையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வரும் விதம் குறித்து சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன.

இந்தப் பிரச்சினைகள் தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பானவை மட்டுமல்ல. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் நேர்மை குறித்தும் இவை தீவிரமான கவலைகளை எழுப்புகின்றன. இவை சமரசத்திற்குள்ளாகியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியின் செயல்பாட்டையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், வாக்காளர் பதிவு, வாக்காளர் பெயர்களை நீக்குதல் மற்றும் மீண்டும் சேர்த்தல், மேலும் SIR-ஐ நடத்துவது தொடர்பான முடிவுகள் குறித்து குறைந்தது 14 சந்தர்ப்பங்களில் தங்களது ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர். தங்களது ஒப்புதல் இல்லாமலேயே முடிவுகள் எடுக்கப்படுவது குறித்தும் அவர்கள் தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும் தொடர்ந்து எழுப்பி வந்த கவலைகளை இந்த வெளிப்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன. SIR மற்றும் வாக்காளர் பட்டியல் நிர்வாகம் வெளிப்படையானதும், அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டதுமானது என்ற கூற்றுகளின் வெறுமையையும் இவை அம்பலப்படுத்துகின்றன.
வாக்காளர் தரவுத்தளம் படிப்படியாக மத்தியப்படுத்தப்படுவதையும், மாநில மற்றும் தொகுதி அளவில் சட்டபூர்வ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அணுகல் கட்டுப்படுத்தப்படுவதையும் இரண்டு தேர்தல் ஆணையர்களும் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவுகள் வெறும் நிர்வாக ரீதியானவை மட்டுமல்ல. உதாரணமாக, கோவாவில், 97 வாக்காளர்கள் தகுதியுடையவர்கள் என்று தேர்தல் பதிவு அலுவலர்கள் (Electoral Registration Officers) எடுத்த முடிவுகளைப் பதிவு செய்வதற்கு மென்பொருள் கட்டுப்பாடுகள் தடையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினை SIR-ஐ மட்டும் பற்றியது அல்ல. இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயகச் செயல்பாடு, அத்துடன் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் வாக்குரிமை என்ற அடிப்படை ஜனநாயகக் கொள்கையைப் பாதுகாப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.

வாக்களிக்கும் உரிமையானது வெளிப்படைத்தன்மையற்ற, மத்திய கட்டுப்பாட்டில் உள்ள நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும் எந்தவொரு அமைப்பும், தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையும் சுதந்திரமும் குறைந்துள்ளது. தேர்தல் முறையை கையாளுதல் மற்றும் இந்த நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்ததற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றன:

✅ ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.!
✅ SIR நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
✅ வாக்காளர் பட்டியலிலிருந்து தவறாக நீக்கப்பட்ட அனைவரின் வாக்குரிமையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
✅ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான மற்றும் ஜனநாயகமான செயல்பாடு மீட்டெடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறைக்குப் பதிலாக, பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் முன்மொழிந்த முறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடு முழுவதும் உள்ள தங்களது கட்சி அமைப்புகள், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை ஒரு வார கால போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றன.
செப்டம்பர் 26 ஷஹீத்-இ-ஆசம் பகத் சிங்கின் பிறந்தநாளாகும். அக்டோபர் 2 மகாத்மா காந்தியின் பிறந்தநாளாகும். இவர்கள் இருவரும் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்காகத் தொடர்ந்து போராடியவர்கள்.

பாஜக அல்லாத, மதச்சார்பற்ற, ஜனநாயக எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அக்கறையுள்ள அனைத்து குடிமக்களும் இந்த இயக்கத்தில் இணையுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

எம். ஏ. பேபி
பொதுச் செயலாளர், CPI(M)
டி. ராஜா
பொதுச் செயலாளர், CPI
தீபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர், CPI(ML)-விடுதலை

 #ஞானேஷ்_குமாரைப்_பதவி_நீக்கம்_செய்க!✅ SIR - வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தமுறையை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்!✅ தவற...
23/09/2026

#ஞானேஷ்_குமாரைப்_பதவி_நீக்கம்_செய்க!

✅ SIR - வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த
முறையை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்!

✅ தவறான முறையில் நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரின் வாக்குரிமையையும் மீட்டெடுக்க வேண்டும்!

✅ SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த
முறையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்து, புதிய தேர்தல்களை நடத்த வேண்டும்!

✅ தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கத்திற்கு இணங்க அரசியலமைப்பைத் திருத்த வேண்டும்!

✅ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிப்படுத்த வேண்டும்!

Communist Party of India -Marxist Leninist- Liberation CPIML

Impeach Gyanesh Kumar!
Suspend SIR forthwith!
Restore the voting right of every wrongfully deleted voter!
Cancel SIR-based elections, hold fresh elections!
Amend the Constitution in compliance with the spirit of the Supreme Court verdict regarding appointment of Election Commissioners!
Ensure Neutrality, Transparency and Accountability in the conduct of the Election Commission of India!

Demands raised by us through a letter to the President of India.

அன்று ஒரு சுப்பு!இன்றும் வேண்டும் தோழர் சுப்பு!! #எம்_எல்_செய்திகள் வார இதழில்....
23/09/2026

அன்று ஒரு சுப்பு!
இன்றும் வேண்டும் தோழர் சுப்பு!!

#எம்_எல்_செய்திகள் வார இதழில்....

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பாக்கப்பட வேண்டும்! #எம்_எல்_செய்திகள் வார இதழில்....
23/09/2026

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பாக்கப்பட வேண்டும்!

#எம்_எல்_செய்திகள் வார இதழில்.......

21/09/2026

ஆட்சியை ஆதரித்துக் கொண்டே எதிர்த்துப் போட்டியிடுவது சரியா?- CPIML Liberation, Tamil Nadu மாநில செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி Vasanth News அளித்த நேர்காணல்....

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

 #பஞ்சாப்_ஜலந்தரில்_AIKM_விவசாயிகள்_மகாசபையின்_பொது_மாநாடு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், தேஷ் பக்த் யாதகர் ஹாலில், "விவசாயி...
20/09/2026

#பஞ்சாப்_ஜலந்தரில்_AIKM_விவசாயிகள்_மகாசபையின்_பொது_மாநாடு
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், தேஷ் பக்த் யாதகர் ஹாலில், "விவசாயிகள் - தொழிலாளர்கள் ஒற்றுமை மாநாடு"
இன்று செப்.20 அன்று காலை 11.30 மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் 5வது தேசிய மாநாடு செப்.20, 21 நாட்கள் நடைபெறுகிறது.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி அமைப்பான 'ஜமூரி கிசான் சபா' (Jamhoori Kisan Sabha), (தோழர் பாஸ்லா தலைமையிலான RMPI கட்சியின் விவசாய சங்கம்) AIKM உடன் இணைந்து
மாநாட்டை நடத்தியது.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் AIKM தோழர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.RMPI கட்சியின் விவசாய சங்கத்தின்
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து திரளான தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 20, 21 தேதிகளில்
நடைபெறுகிற இந்த மாநாடு இவ்விரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமை மாநாடாக திகழ்ந்தது.

அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் AIKM தேசிய அமைப்பு செயலாளர் புருசோத்தம் சர்மா வரவேற்புரை ஆற்றினார்.
தோழர் சத்னம் சிங் அஜ்னவாலா துவக்க உரை ஆற்றினார். JKS பஞ்சாப் தலைவர்கள், AICCTU தேசிய பொதுசெயலாளர் ராஜீவ் திம்ரி, AIARLA தேசிய தலைவர் சத்யதேவ் ராம்,
AIKM தேசிய பொதுசெயலாளர் ராஜாராம் சிங், எம்.பி. AISA ஆமீன், SKM தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுனிலாம் ஆகியோர்
உரையாற்றினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) விடுதலை பொது செயலாளர் திபங்கர்,
RMPI பொது செயலாளர் மங்கத்ராம் பஸ்லா
சிறப்புரை ஆற்றினார்கள்.

✅ விவசாயிகள் - தொழிலாளர்கள் ஒற்றுமை வெல்லட்டும்! ✊
✅ மக்கள் விரோத மோடி அரசை முறியடிப்போம்! 👊

 #அகில_இந்திய_விவசாயிகள்_மகாசபை_AIKM_5வது_தேசிய_மாநாடு_துவங்கியதுபஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், தேஷ் பக்த் யாதகர் ஹாலில் இன்...
20/09/2026

#அகில_இந்திய_விவசாயிகள்_மகாசபை_AIKM_5வது_தேசிய_மாநாடு_துவங்கியது

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், தேஷ் பக்த் யாதகர் ஹாலில் இன்று செப்.20 அன்று காலை 11.30 மணியளவில், பொது மாநாடு
"விவசாயிகள் - தொழிலாளர்கள் ஒற்றுமை மாநாடு"துவங்கியது

பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி அமைப்பான 'ஜமூரி கிசான் சபா' (Jamhoori Kisan Sabha), (தோழர் பாஸ்லா தலைமையிலான RMPI கட்சியின் விவசாய சங்கம்) AIKM உடன் இணைந்து மாநாட்டை நடத்துகிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் AIKM தோழர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.RMPI கட்சியின் விவசாய சங்கத்தின்
பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 20, 21 தேதிகளில்
நடைபெறும் இந்த மாநாடு இவ்விரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமை மாநாடாக அமைந்தது.

Communist Party of India -Marxist Leninist- Liberation CPIML
பொது செயலாளர் திபங்கர், Dipankar Bhattacharya
RMPI பொது செயலாளர் மங்கத்ராம் பஸ்லா
Mangat Ram Pasla உட்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

All India Kisan Mahasabha
CPIML Liberation, Tamil Nadu

Address

CPIML Liberation State Party Office, 3/254 B, Jeeva Street, Vandalur, Chennai/, Ph: 09840340741
Chennai
600048

Alerts

Be the first to know and let us send you an email when CPIML Liberation, Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIML Liberation, Tamil Nadu:

Shortcuts

Share