Dmdksocialmedia

Dmdksocialmedia This is the official page for our DMDK Social media team.

Desiya Murpokku Dravida Kazhagam is a regional political party formed by Tamil film actor Vijayakant in the Indian state of Tamil Nadu,

தேசிய முற்போக்கு திராவிட கழகம்பத்திரிகை செய்தி - 02.10.2026தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை ...
02/10/2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம்
பத்திரிகை செய்தி - 02.10.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2026) 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு கழக துணைச் செயலாளர் திரு.SSS.U.சந்திரன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், கிளை கழகம், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேதி: 01.10.2026தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத...
01/10/2026

தேதி: 01.10.2026
தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டி அறிக்கை
இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக அனைவரின் கருத்தாக இருக்கிறது. எனவே வாக்காளர் திருத்தப் பட்டியல் SIR ஐ முறையாக வெளிப்படை தன்மையோடு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கோ, அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கோ இடமளிக்கக் கூடாது.
மேலும், தேர்தல் நடைமுறையில் மக்களுக்கு முழுமையான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் ஏற்படும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமான EVM முறையை தவிர்த்து, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேர்தலில் பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, மக்கள் அளித்த வாக்கு எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி துல்லியமாக எண்ணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளில் தகுதியான வாக்காளர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதுடன், எதிர்காலத் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வந்து ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.

தேதி: 01.10.2026கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கைகேப்டன் ஸ்மித் மச்சார் அவர...
01/10/2026

தேதி: 01.10.2026
கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கை

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக் கொண்டு அவர் செயல்பட்ட விதம் உண்மையான வீரத்தின் அடையாளமாகும். அவரது மன உறுதியும், சமயோசிதமான செயல்பாடும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, மிகப்பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்க உதவியுள்ளது. தனது கடமையை உயிருக்கும் மேலாக மதித்து செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். அவரது வீரதீரச் செயலை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறோம்.

மேலும் அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் - ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணச் செய்திஐக்கிய நாடுகள் சபையின் ப...
30/09/2026

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் - ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணச் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

அக்டோபர் 5 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு நிகழ்வுகளில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில், தமிழ்நாட்டின் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ், MP., அவர்கள் பங்கேற்க உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நிதியம் (UNICEF), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பம், அதன் எதிர்கால பயன்பாடுகள், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் தொழில்நுட்ப தூதருடனும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர்.

தமிழ்நாட்டின் சார்பில் இந்த முக்கியமான சர்வதேச நிகழ்வுகளில் தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ், MP., அவர்கள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.

இந்த சர்வதேசப் பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் குரலை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அரங்கில் வலுவாக பதிவு செய்து, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய வளர்ச்சிப் பாதைகள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு திரும்புவதற்கு திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம்
தலைமை கழகம்

தேமுதிக சார்பில் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இடைத்தேர்...
27/09/2026

தேமுதிக சார்பில் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் விபரம்
தலைமை கழகம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் - 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொ...
21/09/2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் - 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் - 21.09.2026

தேதி: 21.09.2026தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்...
21/09/2026

தேதி: 21.09.2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகால பணியாளர்கள், தங்களது பணியை நிரந்தரம் செய்து உரிய பணிப்பலன்கள் வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களின் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து, பணி நிரந்தரம், பணிக்காலத்தை கணக்கில் எடுத்தல் மற்றும் உரிய பணிப்பலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பல்வேறு காலகட்டங்களில் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கைகளையும், பணியாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய நிர்வாக மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவான தீர்வு காண வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேட்டுக்கொள்கிறது.

தேதி: 20.09.2026தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின்...
20/09/2026

தேதி: 20.09.2026
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்
கழகப் பொதுச் செயலாளர்
திருமதி பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின்
தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் அவலநிலை குறித்து அறிக்கை

1. 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 படுகொலைகள் சட்டம்-ஒழுங்கு?

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றவர்களை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்?. கொலை செய்தவர்களை கண்டறிந்து உட்சபட்ச தண்டனை உடனடியாக வழங்க வேண்டும்.

அதேபோல் மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ஒருவர் நடுரோட்டில் விரட்டிச் சென்று வெட்டி படு கொலை, மேலும் கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையுடன் தொடர்புடைய இடத்தில் ஏற்பட்ட தகராறில் 33 வயது இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலைகளுக்கும், தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததர்க்கும் அரசு என்ன பதிலளிக்கிறது.

2. நெய்வேலி NLC க்காக விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்துவது நியாயமா?

நெய்வேலி NLC திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, உரிய இழப்பீடு, வீடு கட்டித் தருதல், மருத்துவ வசதி, சாலை வசதி, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை ஏற்படுத்தித் தரவேண்டும்.

ஏற்கனவே நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அரசு முதலில் உறுதி செய்ய வேண்டும். “முதலில் ஏற்கனவே நிலம் வழங்கிய மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; அதன் பின்னரே புதிய விளைநிலங்களை கையகப்படுத்துவது குறித்து பேசுங்கள்” என்பதே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிலைப்பாடாகும்.

3. அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் அரசின் நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அரசு வெறும் அறிவிப்புகளோடு நிற்காமல், களத்தில் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொசு மருந்து தெளிக்கும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகள் போதுமான அளவில் இருக்க வேண்டும். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடையே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு மாணவி டெங்கு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒரு மாணவன் இறந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே டெங்கு பரவலைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

4. விவசாயக் கடன் முழு தள்ளுபடி செய்ய வேண்டியதற்கு அரசின் பதில் என்ன?

திருச்சி சமயபுரத்தில் ஐந்து நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் ரூ.247.15 கோடி பயிர்க்கடன் 50,779 விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், முழுமையான கடன் தள்ளுபடியே தங்களது கோரிக்கை என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் பதில் என்ன?.

5. பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம், விநாயகர் சிலை கடலில் கரைப்பு தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டி?

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பு குறித்து மீனவர்கள் மத்தியில் அச்சமும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அரசு உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்.

இதனிடையே, நாளை ஞாயிற்றுக் கிழமை (20.09.2026) விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலங்கள் மற்றும் கரைப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழக அரசு, விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெளிவான வழிமுறைகளை அறிவிக்க வேண்டும். ஊர்வலப் பாதைகளில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் அரசு முன்கூட்டியே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமா?.

6. கர்நாடக அரசு காவிரி தண்ணீரை முற்றிலும் நிறுத்தியது?

ஏற்கனவே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையிலும், மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவேரி தண்ணீர் குறைக்கப்பட்டும் கடைமடைப் பகுதிகளுக்கும் சென்றடையாததாலும், காவேரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக கர்நாடக அரசு அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக அரசை உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மீண்டும் காவேரியில் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி வலியுறுத்துவாரா?.

7. அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் திணறல்?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பாதிப்பால் ஒரு புறம், டெங்குவாள் பொதுமக்கள் பாதிப்பு ஒரு புறம், கொசு கடியால் மக்கள் அவதி ஒரு புறம், இந்த நிலையில் இன்றைய தமிழ்நாடு, மக்கள் கதி என்ன?.

8. அரசு நேரடி நெல் கொள்முதல் செய்வது எப்போது?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விருத்தாசலம் சின்னப்பரூர், மற்றும் பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததானால் மழையில் நனைந்து வீணாவதை அரசு எப்போது தடுக்கப் போகிறது?.

9. இதுபோன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு அரசு மவுணம் காக்காமல் உடனடியாக செயல்படுமா?. இல்லையெனில் செவுடன் காதில் ஊதிய சங்கு போல தான் இந்த அரசு என்று மக்கள் முடிவு செய்வார்கள்.

18/09/2026
தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலைய...
17/09/2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனார். இந்நிகழ்ச்சியில் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Address

125/7, Jawaharlal Nehru Salai, , Koyambedu
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Dmdksocialmedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dmdksocialmedia:

Shortcuts

Share