DMK - Dravida Munnetra Kazhagam

DMK - Dravida Munnetra Kazhagam DMK | Dravida Munnetra Kazhagam
Ins :- http://instagram.com/arivalayam
x :- https://x.com/arivalayam |
YT:- https://www.youtube.com/

To liberate the Dravidian race from the shackles of superstition and religious dogmas, to revive and restore the ancient heritage of Tamil and Tamilnadu, and to protect Tamil language from imperialism, Dravida Munnetra Kazhagam – (DMK) was founded by Dr. C.N. Annadurai – better known as Anna (Elder brother) on 17th September 1949. The History of DMK is the history of rational and reformist movemen

t in Tamil Nadu. It is the history of Tamil renaissance it is the compilation of the continuous struggle and concrete efforts taken by a political organisation to preserve the identity of a civilisation par excellence.

04/08/2026

என் மீதுள்ள பாசத்தால், அன்பால், என் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராடிய கழக மூத்த முன்னோடிகளுக்கும், தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்!

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

#தொடைநடுங்கி_அரசு

04/08/2026

தமிழ்நாட்டில் பிரச்சனை வரும்போதெல்லாம் இந்த தவெக அரசின் பாலிசி Diversion மட்டும் தான்!

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்...
04/08/2026

உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி

- கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்

#தொடைநடுங்கி_அரசு

04/08/2026

மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை, நாளைய தினம் நடைபெறுகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியோடு, கெட்ட எண்ணத்தோடும் நேற்றைய தினம் அவர் ஆற்றிய கண்டன உரையை தாங்கிக் கொள்ள முடியாமல், ஜீரணிக்க முடியாமல், அதற்கு பதில் சொல்லுகிற ஆற்றல் கடுகளவும் இல்லாத இந்த அரசு அவரை கைது செய்திருக்கிறது.

#தொடைநடுங்கி_அரசு

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!-⁠  ⁠கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அ...
04/08/2026

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!

-⁠ ⁠கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.

"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

காவிரி பிரச்னையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலமாக உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்.

நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!

ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். ட்வீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போரடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.

இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.

ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!

#தொடைநடுங்கி_அரசு

பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய் வழக்குப் போட்டு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை, காவல்துறையை ஏவிக் கை...
04/08/2026

பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய் வழக்குப் போட்டு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை, காவல்துறையை ஏவிக் கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை!

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்து செய்த - இந்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை அச்சுறுத்த முடியாது!

- கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் கண்டனம்!

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை த.வெ.க. அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம்! மிக மோசமான ஜனநாயகப் படுகொலை!!

மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் தனது “Apprentice” ஆட்சியில் சரியும் சட்ட ஒழுங்கு, மாநிலம் முழுவதும் மக்களை வாட்டும் மின்கட்டணப் புகார்கள், விவரம் இல்லாத அமைச்சர்கள் அடிக்கும் கூத்துகள், “இம்” என்றால் சிறைவாசம் என்ற ஆணவத்தைப் பிரதிபலிக்கும் அடக்குமுறைகள், பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க. நிர்வாகிகள், எல்லாவற்றுக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்த வைக்கும் காவிரிப் பிரச்சினையில் மாண்புமிகு முதலமைச்சரின் மவுனமும் மெத்தனமும் என எதிர்க்கட்சித் தலைவர் நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள கேள்விகளுக்கு இன்றே அஞ்சி நடுங்கி, தஞ்சாவூரில் பேசாத ஒன்றைப் பேசியதாகப் புனைந்து, கற்பனைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் ஒன்றைப் போட்டு, உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது அடாவடி தவெக அரசு!

கொடுங்கோல் ஆட்சியின் அலங்கோலத்தினை அரங்கேற்ற இந்த அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பாசிசத்தின் உச்சகட்டமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் விஜய் இப்போது நடத்தி வருவது தி.மு.க. கூட்டணியிடம் இருந்து கடன் வாங்கிய கட்சிகளுடன் ஆதரவிலான ஆட்சி என்பதை ஏனோ “அதிகார போதையில்” மறந்து, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் இப்படியெல்லாம் தி.மு.க.வையும் மிரட்ட முடியாது. எங்கள் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும் அச்சுறுத்த முடியாது.

நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம்! சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!

04/08/2026

He has not mentioned, and no reference was made against any particular woman by LOP Thiru. Udhayanidhi Stalin. These are cooked up false stories.

- Thiru.T.R.Baalu M.P Avl

தலைமை கழகத்தில், கழகத் தலைவர் அவர்களுடன் இன்று (03-08-2026) எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.Link:
03/08/2026

தலைமை கழகத்தில், கழகத் தலைவர் அவர்களுடன் இன்று (03-08-2026) எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

Link:

03/08/2026

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிய அரசை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு ...
03/08/2026

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?

கழகத் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள்

Address

Anna Arivalayam, Anna Salai
Chennai
600018

Telephone

+914424320270

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK - Dravida Munnetra Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK - Dravida Munnetra Kazhagam:

Shortcuts

Share