CPIM Tamilnadu

CPIM Tamilnadu Official page of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee. It also leads the Left Front coalition of leftist parties.
(323)

The Communist Party of India (Marxist) (abbreviated CPI(M)) party emerged from a split from the Communist Party of India in 1964.

06/08/2026

இந்தியாவின் விதைச் சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் விவசாயிகள்-விரோத 'விதை மசோதா 2025' உள்ளிட்ட பாஜக அரசின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்-விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஆகஸ்ட் 10 நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம்! - தோழர் சாமி நடராஜன், மாநிலப் பொதுச்செயலாளர், தவிச More : https://youtu.be/67BSIiPuZec

06/08/2026

நாடாளுமன்றவாதம் என்றால் என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்வது? - பிரகாஷ் காரத், கட்டுரை குறித்து தோழர் ச.லெனின், ஆசிரியர் குழு More : https://youtu.be/uujxQr1PlTA

06/08/2026

தமிழ்நாடு பட்ஜெட் 2026: அரசு – தனியார் பங்களிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும்! - தோழர் க. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் More : https://youtube.com/shorts/o_w_2mTZcHE

தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும்.ஒன்றிய, மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள...
06/08/2026

தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 10 அன்று தொழிலாளர், விவசாயிகள் மறியல்!

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர...
05/08/2026

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! மாநிலக்குழு அறிக்கை!!

புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கட்டுமான செலவுகளின் நிலைமையை ஒப்பிடும் போது அது போதுமானதல்ல. ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.

More: https://shorturl.at/oKbid

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர...
05/08/2026

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! மாநிலக்குழு அறிக்கை!!

பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அயல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வட்டி மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை.

More: https://shorturl.at/oKbid

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர...
05/08/2026

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! மாநிலக்குழு அறிக்கை!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது.

More: https://shorturl.at/oKbid

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர...
05/08/2026

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! மாநிலக்குழு அறிக்கை!!

பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ. 8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

More: https://shorturl.at/oKbid

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர...
05/08/2026

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! மாநிலக்குழு அறிக்கை!!

தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை. தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிய வடிவில் தமிழ்நாட்டில் அமலாக்க மாட்டோமென்றும், மாநில அரசின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வோமென்றும் அறிவித்திட வேண்டும்.

More: https://shorturl.at/oKbid

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர...
05/08/2026

தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை; தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல; மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! மாநிலக்குழு அறிக்கை!!

விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். விபி ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள, 125 நாட்களை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதல் 25 நாட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சராசரி வேலை நாட்கள் 44 முதல் 59 ஆகவே இருக்கிற சூழலில் சட்டப்படியான வேலை நாட்களை உறுதி செய்வதும், அதற்கு மேலாக 25 நாட்கள் வேலை தருவதுமே பெரும் பகுதி மக்களுக்கு பயனளிக்கும். இதற்கான நிதிப் பகிர்வுக்கு ஒன்றிய அரசின் வஞ்சனையை எதிர்த்து குரல் கொடுத்து மாநில நிதி உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி நீரியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று கதவணைகளை உறுதி செய்ய வேண்டும். வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் தாமதம் பற்றி பட்ஜெட் குறிப்பிட்டு இருப்பது சரியானது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காலவரையறை தீர்மானித்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

More: https://shorturl.at/oKbid

Address

CPIM Head Quarters, Vaidhyaraman Street, T.Nagar
Chennai
600017

Telephone

04424326900

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Tamilnadu:

Shortcuts

Share