Tamil Nadu BJP Overseas Wing

Tamil Nadu BJP Overseas Wing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Nadu BJP Overseas Wing, Political Party, Vadapalani, Chennai.

OVERSEAS TAMILS WING
TAMIL NADU BJP | Advancing BJP’s vision globally | Strengthening the voice of Tamil Nadu in the world | Committed to Nationalism, Development & Cultural Pride

🇮🇳 மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 🇲🇾மலேசியாவின் 30 நாட்கள் விசா இல்லா பயண வசதி சுற்றுலா மற்றும் சமூ...
25/09/2026

🇮🇳 மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 🇲🇾

மலேசியாவின் 30 நாட்கள் விசா இல்லா பயண வசதி சுற்றுலா மற்றும் சமூகப் பயணங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

வேலை தேடி அல்லது வேலை செய்யும் நோக்கத்துடன் சுற்றுலா / விசா இல்லா பயண வசதியை பயன்படுத்தி மலேசியா செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம், கோலாலம்பூர் அறிவுறுத்தியுள்ளது.

நேர்மையற்ற முகவர்களின் தவறான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளால் பலர் பாதிக்கப்படக்கூடும். இதனால் விசா காலம் மீறுதல், சட்டவிரோத குடியேற்ற நிலை, சுரண்டல், தடுப்பு காவல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

✈️ சுற்றுலா பயணிகள் தேவையான ஆவணங்களை உறுதி செய்ய வேண்டும்:
✅ Return Ticket
✅ Hotel Booking
✅ Malaysia Digital Arrival Card (MDAC)
✅ குறைந்தபட்சம் 6 மாத செல்லுபடியாகும் Passport

💼 வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக செல்லும் நபர்கள் உரிய Work Permit அல்லது VDR இல்லாமல் மலேசியா செல்ல வேண்டாம்.

🙏 இந்த தகவல் மலேசியா செல்லும் அனைத்து தமிழர்களுக்கும் சென்றடையும்படி பகிருங்கள்.

📅 22 செப்டம்பர் 2026
🇮🇳 இந்திய தூதரகம், கோலாலம்பூர்

குவைத்தில் அகால மரணமடைந்த திருவாரூர் சகோதரர் பாஸ்கர் அவர்களின் உடலை உரிய நேரத்தில் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக, தேவை...
20/09/2026

குவைத்தில் அகால மரணமடைந்த திருவாரூர் சகோதரர் பாஸ்கர் அவர்களின் உடலை உரிய நேரத்தில் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்ட ஆன்மிகப் பிரிவு மாநிலத் தலைவர் திரு. ஷெல்வி கே. தாமோதரன் அவர்களுக்கு, அயலகத் தமிழர் பிரிவு சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

துயரத்தில் தவித்த குடும்பத்தினரின் வேதனையை உணர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுடன் ஒருங்கிணைந்து, மனிதநேயத்துடனும் அக்கறையுடனும் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுத்தது மிகவும் பாராட்டுக்குரியது.

இக்கட்டான நேரத்தில் உறவாக நின்று குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட திரு. ஷெல்வி கே. தாமோதரன் அவர்களின் தன்னலமற்ற சேவையை மனதாரப் பாராட்டுகிறோம். 🌹🙏

அயலகத் தமிழர்களின் நலனில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு, அவசரச் சூழ்நிலைகளில் உதவும் அவரது மனிதநேயப் பணிகள் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்,
சுந்தரம்
மாநிலத் தலைவர்
அயலகத் தமிழர் பிரிவு

#அயலகத்தமிழர் #தமிழர்கள் #மனிதநேயம் #சேவை

Coffee-Table Book Release | TodayA memorable day as the Coffee-Table Book of BJP Tamil Nadu – House of All Cells was rel...
17/09/2026

Coffee-Table Book Release | Today

A memorable day as the Coffee-Table Book of BJP Tamil Nadu – House of All Cells was released today at a special event in Chennai.

The occasion celebrates the journey, dedication and contributions of our various Cells and their committed members. 🙏💐

16/09/2026

BJP Tamil Nadu – House of All Cells சார்பில் நடைபெறும் Coffee-Table Book வெளியீட்டு விழா.

📅 17 September
⏰ 5:00 PM onwards
📍 Vani Mahal, T. Nagar, Chennai

மாநில, மாவட்ட மற்றும் அனைத்து Cells-ன் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். 🙏

மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினம்! 🇮🇳வீரம், துணிவு, தன்னலமற்ற போராட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாவீரன் பூலித்தேவன் அவர்...
01/09/2026

மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினம்! 🇮🇳

வீரம், துணிவு, தன்னலமற்ற போராட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாவீரன் பூலித்தேவன் அவர்களின் நினைவைப் போற்றி மரியாதை செலுத்துவோம். 🙏🌺

வீரத் தமிழரின் பெருமையை போற்றுவோம்!

#பூலித்தேவன் #மாவீரன்பூலித்தேவன்

🇮🇳 நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை!பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்...
29/08/2026

🇮🇳 நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை!

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தொடர் முயற்சியால், நேபாள அரசும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் (MEA) இணைந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து செயல்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 28 அன்று சீன/திபெத் பகுதியில் இருந்து 149 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்குள் வந்துள்ளனர். அவர்களின் பெயர் பட்டியலும் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சீனப் பகுதியில் சுமார் 400 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய தூதரகம் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.

அதேவேளையில், சுமார் 320 இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர் அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவர்களையும் பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

🙏 ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் நமது பிரதான முன்னுரிமை.

149 பேரின் பெயர் பட்டியல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

K. M. சுந்தரம்
மாநில தலைவர்
அயலக தமிழர் பிரிவு
பாஜக தமிழ்நாடு

🇮🇳 உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு பாஜக NRI பிரிவுநேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே...
27/08/2026

🇮🇳 உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு பாஜக NRI பிரிவு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாடு பாஜக NRI பிரிவு சார்பில் அவசர உதவி மற்றும் தொடர்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உதவி தேவைப்படும் பொதுமக்கள் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.

மக்களுக்காக… மக்களுடன்… என்றும் சேவையில்! 🙏

Today, a consultation meeting of the NRI Cell State Office Bearers and District Presidents from across Tamil Nadu was he...
13/08/2026

Today, a consultation meeting of the NRI Cell State Office Bearers and District Presidents from across Tamil Nadu was held at Kamalalayam, T. Nagar, Chennai.

The meeting provided an opportunity for the NRI Cell team to discuss organisational activities, coordination and future initiatives, along with guidance from senior party leadership.

The programme concluded on a pleasant note with lunch and interaction among the participants. 🙏

NRI Cell, Tamil Nadu, Kamalalayam, Chennai, Consultation Meeting, NRI Wing, Organisation, State Office Bearers, District Presidents

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நோக்கி NDA கூட்டணி! 🇮🇳மக்களவையில் NDA கூட்டணியின் பலம் 293, மாநிலங்களவையி...
20/07/2026

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நோக்கி NDA கூட்டணி! 🇮🇳

மக்களவையில் NDA கூட்டணியின் பலம் 293, மாநிலங்களவையில் 152 என இந்த தகவல் விளக்கப்படம் குறிப்பிடுகிறது. இந்தியாவின் அரசியல் களத்தில் கூட்டணியின் பலம் மற்றும் பிரதிநிதித்துவம் குறித்த ஒரு பார்வை

#தமிழ்நாடு #பாஜக #நரேந்திரமோடி #இந்தியஅரசியல் #மக்களவை #மாநிலங்களவை

🚆 சென்னை பார்க் ரயில் நிலையம் – புதிய வசதிகளுடன் மக்களின் சேவைக்கு!பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், ₹14.79 கோடி செலவ...
17/07/2026

🚆 சென்னை பார்க் ரயில் நிலையம் – புதிய வசதிகளுடன் மக்களின் சேவைக்கு!

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், ₹14.79 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட சென்னை பார்க் ரயில் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த மேம்பாட்டு பணிகள் மூலம்:
✅ உலகத் தரம் வாய்ந்த பயணிகள் வசதிகள்
✅ பாதுகாப்பான மற்றும் நவீன ரயில் நிலையம்
✅ இந்திய ரயில்வே வளர்ச்சிக்கு புதிய மைல்கல்

வளர்ந்த இந்தியா – வளர்ந்த தமிழ்நாடு.

🇮🇳 ஜெய் ஹிந்த்!

Address

Vadapalani
Chennai
600026

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu BJP Overseas Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share